புதன், 28 ஆகஸ்ட், 2019

நீங்கள் சிறந்த பெண் என்றாள்.. சிறந்த மருமகள் தான்.... சிறந்த மருமகளாக உங்களுக்கு சில அனுபவ அறிவுரைகள்.


நீங்கள் சிறந்த பெண் என்றாள்.. சிறந்த மருமகள் தான்....  சிறந்த மருமகளாக உங்களுக்கு சில அனுபவ அறிவுரைகள்.

♥பிறந்த வீட்டுப் பெருமைகளை மாமியாரிடம் அடுக்காமல் புகுந்த வீட்டுப் பெருமைகளைத் தொலைபேசியிலோ நேரிலோ மருமகள் தன் பிறந்தகத்தில் உரையாடுவது நல்ல பலன் தரும். அதற்காக உங்கள் பிறந்த வீட்டை விட்டுக் கொடுக்கச் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் புகுந்த வீட்டை உயர்த்துவது உங்கள் பிறந்தகத்தின் பெருமைகளைத் தானாகவே எடுத்துக் காட்டும்.

♥தன் தாயிடம் தர்ம அடி வாங்கின பெண்கள் கூட  மாமியார் ஒரு சுடுசொல் கூறினால் பொறுத்துக் கொள்வதில்லை. கோபத்தில் மாமியார் சொன்ன வார்த்தைகளுக்குப் பெரிய மதிப்பளிக்கத் தேவையில்லை. அதை மறத்தல் மாமியார்- மருமகள் உறவிற்கு நல்லது.

♥கணவரைப் பற்றி ஒரு போதும் பிறந்தகத்திலோ தோழிகளிடமோ குறை கூறாதீர்கள். இப்படி கூறும் மருமகளை எந்த மாமியாருக்கு பிடிக்கும்?

♥ உங்கம்மா அதைப் பண்ணினாங்க, உங்க தங்கச்சி இதைப் பண்ணினா என்று வேலைக்குப் போய் விட்டு வந்த மனிதரைப் பாடாய் படுத்தாதீர்கள். இப்படி நீங்கள் சொல்வதை அன்புக் கணவர் மறு நாளே தன் தாயிடம் வெளிக்காட்டினால் மருமகளுக்குத் தான் கெட்ட பெயர்.

♥எக்காரணம் கொண்டும் மாமனார், மாமியாரை வீட்டை விட்டுத் துரத்துவதோ நீங்கள் அழகான கூடு போன்ற இல்லத்தைக் கலைத்துத் தனிக்குடித்தனம் போகவோ செய்யாதீர்கள்(இந்தக் கருத்து எல்லார் வீடுகளுக்கும் பொருந்தாது, பிரச்சினைகள் அதிகமாயிருந்து பொறுக்க முடியவில்லை என்றால் அவரவர் பாதையைப் பார்த்து பிரிந்து செல்வது நல்லது)

♥நார்த்தனார்களாக இருப்பவர்கள் தங்கள் அம்மாவான பெண்ணின் மாமியாரிடம் கூறும் சில விஷயங்கள் மாமியார்- மருமகள் உறவைப் பாதிக்கலாம். அதற்கு இடம் கொடுக்காமல் முடிந்தால் நார்த்தனாரை உங்கள் தோழியாக்க முயலுங்கள்.

♥ மாமியாரை நன்றாகப் பார்த்துக் கொண்டால் அவர் ஏன் தன் பெண்ணிடம் மருமகளைப் பற்றி குறைகளைப் பட்டியலிடப் போகிறார்? அந்த அளவிற்கு இடம் கொடுக்காமல் அன்பைக் கொட்டி விட்டால்?

♥சில மாமியார்கள் மரும்கள்கள் என்ன தான் சந்தனமாக இழைத்தாலும் அவர்களை மனதாரப் புகழ மனம் வருவதில்லை. இருக்கட்டும்? உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். வார்த்தைகளாகக் கூறா விட்டாலும் ஆத்மார்த்தமாக நீங்கள் செய்யும் பணிவிடைகளை உணருவார்கள். அது போதுமே உங்களுக்கு.

♥பிறந்த வீட்டு உறவுகளை எப்படி கவனிக்கிறீர்களோ எப்படி உங்கள் இல்லத்தினர் கவனிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதே போல் புகுந்த வீட்டு உறவுகளையும் தாங்குங்கள்.

♥மருமகள் வெளியில் சாப்பிடுவது என்றால் வயதான மாமியார், மாமனார் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அக்கறையுடன் தொலைபேசியில் விசாரித்து அந்த சிற்றுண்டியை வாங்கி வருவது உங்கள் மீது உள்ள அன்பை அதிகமாக்கும்.

♥குழந்தைகளை வளர்க்க பார்த்துக் கொள்ளும் வேலைக்காரியைப் போல் நினைக்காமல் அவர்களால் முடியாத அன்று அவர்களுக்கு ஓய்வு கொடுத்து நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

♥குழந்தைகளிடம் நீங்கள் உங்கள் மாமனார், மாமியாரைப் பற்றி உயர்வாகக் கூறுவது நல்லது. 'உங்க பாட்டி தான் அந்த காலத்து கதை சூப்பரா சொல்லுவாங்க, போய் கேளுங்க' என்பதும் பாட்டி, தாத்தாவை மதிக்காமல் பேசும் பிள்ளைகளைக் கண்டிப்பதும் மாமியார் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவும் உதவும்.

♥ஆண்டிற்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது உங்கள் மாமியார், மாமனாரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். அவ்வாறு வரும் போது உங்கள் திட்டமிடலின் படி சில இடங்களும் அவர்களுக்குப் பிடித்த கோவில்களுக்கும் கூட்டிச் சென்று வரலாம். அதை விட்டு விட்டு
நீங்கள் உங்கள் கணவர், குழந்தைகளுடன் மட்டும் சென்று வர வேண்டும் என்று யோசிக்கக் கூடாது.

♥ பெரிய முடிவுகள் எடுப்பதானால் பெரியவர்களைக் கேட்டே முடிவெடுக்கவும். நல்லது, கெட்டது என்ன? எந்த நேரத்திலே எது செய்யலாம்? எது கூடாது போன்றவற்றை அவர்கள் அன்புவ ரீதியாகக் கூறுவார்கள்.

♥திருமணமாகாத நார்த்தனாரோ மச்சினரோ இருந்தால் அவர்களுக்குத் திருமணத்திற்கு வரன் பார்ப்பது, அன்புடன் பழகுவது, பிடித்ததைச் செய்து தருவது என்று இருப்பதும் மாமியாருக்குப் பிடிக்கும்.

♥மதியழகி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக