வியாழன், 15 ஆகஸ்ட், 2019

ரக்‌ஷா பந்தன் தினம்


ரக்‌ஷா பந்தன் தினம் ஒரு குடும்பத்திலும் சரி, ஒரு சமூகத்திலும் சரி உறவு வலுப்படுவதற்கும், பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மிக முக்கியமாக கொண்டாடப்பட வேண்டிய பண்டிகை. அப்படிப்பட்ட ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள் பார்ப்போம்.

ரக்‌ஷா பந்தன் தினம் ஏன் கடைப்பிடிக்கப்படுகிறது என புராண கதைகள், வரலாற்று கதைகளை தொட்டு பல கதைகள் தொடர்கின்றன. எந்த கதையிலிருந்து இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்பதை ஆராய்வதை விடுத்து, எதற்காக இந்த தினம் கொண்டாட வேண்டிய அவசியம் உள்ளது என்பதை உணர வேண்டும்.
இறைவனால் படைக்கப்பட்ட நாம், நமக்கென உருவான உறவு முறையில் மிகச் சிறந்ததாக அண்ணன் - தங்கை உறவு பார்க்கப்படுகிறது. அப்படி சகோதரத்துவத்தை சிதறாமல் பார்த்துக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த ரக்‌ஷா பந்தன் தினம்.


Raksha Bandhan Story: ரக்‌ஷா பந்தன் எப்படி உருவானது? இதன் வரலாறு தெரியுமா உங்களுக்கு...?

சகோதரத்துவத்தை போற்றும் ரக்‌ஷா பந்தன் நிகழ்வு எப்படி தோன்றியது என்று உங்களுக்கு தெரியுமா? இதுதொடர்பாக பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவற்றை இங்கே காணலாம்.

சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை, பல்வேறு தரப்பினராலும் கொண்டாடும் நிகழ்வாக மாறிவிட்டது.

அது ஒரு பெண் தான் சகோதரனாகக் கருதும் நபருக்கும் இடையே உணர்வையும், பாசத்தையும் தொடர்ந்து கடத்தக்கூடிய ஒரு உறவு பாலமாகப் பார்க்கப்படுகின்றது.

அப்படிப் பட்ட புனிதமான நாள் எப்படி தோன்றியது என புராண கதைகள், வரலாற்றுக் கதைகள் சில உள்ளன. அவற்றில் சில இங்கு பார்ப்போம்.


புராண கதை:
மகாபாரதத்தில் பகவான் விஷ்ணு போரின் போது காயம் அடைந்தார். அவரின் கையிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி, தான் உடுத்தியிருந்த சேலையின் ஒரு பகுதியை கிழித்து, அதை கிருஷ்ணரின் காயமடைந்த பகுதியில் கட்டினார்.
சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷா பந்தன் எப்போது கொண்டாடப்பட வேண்டும்?
இதனால் நெகிழ்ந்து போனார் கிருஷ்ணர். பாஞ்சாலியை தங்கையாக ஏற்றுக் கொண்ட கிருஷ்ண பகவான், பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று, திரெளபதியை துகிலுரிய முயன்ற போது, அவரின் மானத்தை காப்பாற்றினார். அப்படி திரெளபதி தன் சேலையை கிழித்து கட்டிய நிகழ்வை தற்போது ரக்‌ஷா பந்தனாக கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.


வரலாற்று கதை:
ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆண்டு வந்தார். அப்போது குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற எண்ணி அதன் மீது போர் தொடுத்தார். அப்போது தன் நாட்டை காப்பாற்ற, கர்ணாவதி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ஒரு புனித நூல் அனுப்பி உதவியை கோரினார். பாச உணர்ச்சி கொண்ட ஹுமாயுன் கர்ணாவதிக்கு உதவ முற்பட்டார். ஆனால் பகதூர் ஷா அதற்கு முன்னர் ராணியை வென்று வெற்றிக் கொடி நாட்டினார்.
மற்றொரு வரலாற்று சம்பவம்:
கிமு 326ல் மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து வடக்கு பகுதியின் பெரும்பாலானவற்றை கைப்பற்றினார். இன்னர் போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை அறிந்த அலெக்ஸாண்டரின் மனைவி ரோக்‌ஷனா, போரஸ் மன்னருக்கு ஒரு புனித நூலை அனுப்பி, உங்களால் என் கணவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என கேட்டுக் கொண்டார்.
அதன் படி அலெக்ஸாண்டரைப் போரில் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தும், அந்த புனித நூலைப் பார்த்து அலெக்ஸாண்டரை அங்கேயே உயிருடன் விட்டுச் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக