379 வருடம்! சென்னை ஒரு பார்வை!!
♚ தமிழ்நாட்டின் தலைநகரம் இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று என்ற பல பெருமைகளை பெற்ற சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது.
பெயர் வந்த வரலாறு :
♚ கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகள் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் பூந்தமல்லியை சேர்ந்த அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் சகோதரர்களுக்குச் சொந்தமான நிலத்தை வாங்கினார்.
♚ அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் உதவியாளர் பெரிதம்மப்பா இதற்கு உதவிசெய்திருக்கிறார். 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி கிழக்கிந்திய கம்பெனி அந்த நிலத்தை வாங்கி அங்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
♚ நிலத்தைக் கொடுத்து உதவிய அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை நகரின் வடக்கு பகுதிக்குச் சூட்டியது கிழக்கிந்தியக் கம்பெனி.
♚ பூந்தமல்லி சகோதரர்களிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு நிலம் கைமாறிய ஆகஸ்ட் 22-ம் தேதி தான் சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை நகரம் கடந்து வந்த பாதை :
♚ பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகள் காலத்தில் இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
♚ 1639-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் சென்னையில் கட்டியதால் இந்நகரம் உருவானது.
♚ ஆங்கிலேயர்கள் 1639 ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்துதான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை.
♚ 1639 ஆகஸ்ட் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் நகரமாக இந்நகரம் உருவானது.
♚ ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிமுடிந்த பிறகு கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது.
♚ சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
♚ இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.
♚ 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது.
♚ 1969 சென்னை மாகாணம் தமிழ்நாடு என்றும் 1996 நகரின் பெயரான மதராஸ் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
♚ இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது சென்னை. தமிழகத்தின் தலைநகரான சென்னைதான் மாநிலத்தின் இருதயம். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வளிக்கும் நகரங்களில் ஒன்று. உலக அளவில் சென்னை பலதுறைகளில் முன்னேறியுள்ளது.
♚ கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று 'சென்னை தினம்" உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை தினம் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த சென்னை தின நல்வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக