வியாழன், 15 ஆகஸ்ட், 2019

தென்னிந்தியாவின் பிரபல மழைக்கால சுற்றுலாத் தலங்கள்..!


தென்னிந்தியாவின் பிரபல மழைக்கால சுற்றுலாத் தலங்கள்..!

தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் எப்போதும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். எனினும், இங்கு இருக்கும் மலைப் பிரதேசங்கள், குளிர்ந்த பகுதிகள் ஆகியவை மனிதர்களை குதூகலிக்கச் செய்யும், லயக்கம் ஏற்படுத்தும்.

இந்தியாவில் நீங்கள் எங்கு தேடினாலும் அப்படிப்பட்ட இடங்கள் இருக்காது. தென்னிந்தியா கோடை காலம், குளிர் காலங்களுக்கு மட்டும் பெயர் பெற்றது கிடையாது. மழைக்காலத்தின் போதும் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் பல இங்குள்ளன.

🔻குடகு🔻

ஐக்கிய ஒன்றியத்தில் ஸ்காட்லாந்து என்றொரு நாடு உண்டு. இங்கு நிலவும் பருவநிலை, பச்சை பசேல் என்ற வளமை, கால்நடைகள் நிறைந்த பிரதேசம் என்று வர்ணிக்கப்படும் ஸ்காட்லாந்துக்கு ஆங்கிலேயே வரலாற்றில் முக்கிய இடமுண்டு. அப்படி இந்தியாவின் ஸ்காட்லாந்தாக அறியப்படும் பகுதி தான் குடகு. இங்குள்ள திபெத்தியன் மடம், அபெய் நீர்வீழ்ச்சி, குசால்நகர் போன்றவை மழைகாலங்களின் போது நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்.

🔻நந்தி மலை🔻

இந்தியாவில் இருக்கும் பட்ஜெட் சுற்றுலா தளங்களில் நந்தி மலைக்கு முக்கிய இடமுண்டு. சூரிய உதயம் மற்றும் மறைவு ஆகியவை அட்டகாசமான காட்சிகளாக இருக்கும். மழை பெய்யும் போது இந்த இடத்தில் இருந்தால், அந்த சூழ்நிலை உங்களை மெய்மறக்கச் செய்யும்.

🔻ஜாக் அருவி🔻

இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான நீர்வீழ்ச்சி என்ற பெயர் பெற்றது தான் ஜாக் அருவி. வட கர்நாடகா பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு பெங்களூருவில் இருந்து 7 மணி நேர பயணத்தில் அடைந்துவிடலாம்.

🔻ஊட்டி🔻

இந்த தலைப்பை பார்த்த பலரும் ஊட்டியை எதிர்பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். தொன்மையான தமிழகத்திற்கு அலங்காரமாக இருக்கும் இடம் தான் உதகமண்டலம் என்கிற ஊற்றி. கோடை விடுமுறைக்கு ஏற்ற இடம் என்றாலும், மழையின் போது ஊட்டியை காண கோடிக்கண்கள் வேண்டும். இயற்கையின் ஆட்சியை ஊட்டியில் பார்க்கலாம்.

🔻வயநாடு🔻

மூன்று மாநிலங்களுக்கான எல்லையில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு பூமியின் சொர்க்கம் என்றொரு பெயரும் உண்டு. கோடைக்காலங்களில் மக்களை ஆரத்தழுவி வரவேற்கும் வயநாடு, மழைக் காலங்களிலும் புதுமையான அனுபவங்களை வழங்கும். மலையேற்றத்திற்கும், காடுகளில் பயணம் செய்து பார்ப்பதற்கு வயநாடு சிறந்த தேர்வாக இருக்கும்.

🔻ஏற்காடு🔻

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு பகுதியில் சுற்றிப் பார்க்க பல்வேறு இடங்கள் உள்ளன. குறைந்த பயணச்செலவில் பட்ஜெட் சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்ற இடம் தான் ஏற்காடு. இங்கும் மழைக்காலம் பிரசித்திப்பெற்ற ஒன்றாகவே திகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக