சனி, 24 ஆகஸ்ட், 2019

குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன ?..


குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன ?..

இன்றைய கால ஓட்டத்தில் எதற்கும் நேரமில்லை என்பது உண்மைதான். அதற்காக பெற்ற குழந்தையை வளர்க்கவும் நேரமில்லை என்று சொல்வது எத்தனை அபத்தம்.

இன்று வாழ்க்கையை பற்றி தெரியாத வயதிலேயே குழந்தைகள் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர் என பல ஆய்வுகளை தினம் தினம் படிக்கிறோம்.

இந்த தவறு எங்கிருந்து தொடங்குகிறது? பெற்றோர்கள் குழந்தைகளை கண்டுகொள்ளாமல், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பதாலும்தான்.

இனியாவது குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை புரிந்து கொள்ள
முற்படுங்கள். சொல்வதைக் கேட்க வெண்டும்  :
இது அத்தனை பெரிய கடினம் அல்ல.

அதேசமயம் இன்று பல பெற்றோர்கள் செய்யத் தவறும் செயலும் இதுதான்.

அவர்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை அமர்ந்து கேளுங்கள். அதற்கு பதில் அளியுங்கள்.

அவர்கள் பேசுவதன் மூலம் அவர்களை புரிந்து கொள்ள முற்படுங்கள். அவர்களின் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யும் உதாசினம் அவர்களுக்கு மனதளவில் பெரும் ஏக்கத்தையும் , தனிமையையும் ஏற்படுத்தும்.

பழமையைச் சொல்லி வளர்க்காதீர்கள்.. பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான்.

உங்கள் குழந்தை பருவக் காலம் வேறு. இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறை வேறு.

அப்படியிருக்கும்போது உங்கள் பழைய வாழ்க்கையை சுட்டிக் காட்டி அதன்படி உங்கள் குழந்தையை வளர்க்க நினைக்காதீர்கள்.

உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் நடந்து கொண்டதை போல் நீங்களும் நடந்து கொள்ளாதீர்கள்.

இன்றைய குழந்தைகளின் எதிர்பார்ப்புகள், எண்ணங்கள் எல்லாமே முற்றிலும் மறுபட்டது.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் எப்போதும் குழந்தையுடன் இருக்காவிட்டலும், வீட்டில் இருக்கும்போது முற்றிலும் அவர்களுடன் நேரத்தை ஒதுக்கி அன்புடன் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைக்கு இது கட்டாயம் தேவை. அவர்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதும் இதுதான்.

குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள், சோர்வு நிலையில் இருந்தால் என்ன பிரச்னை என்பதை கேளுங்கள். கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்.

ஆம்.,நண்பர்களே..,

உங்கள் குழந்தைகள் சோகமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு தீர்வுகளை அளியுங்கள்.

நண்பனைப்போல் தோள் கொடுங்கள்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக