🇮🇳சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🇮🇳
நாடு முழுவதும் இந்தியாவின் 73வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15-ம் தேதி) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம் என பல இடங்களில் கொடியேற்றி மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே!
சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரை நாட்டிற்காக துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை இன்று நாம் களிப்புற கொண்டாடுகிறோம்.
உதிரத்தாலும்...
உயிர் தியாகத்தாலும்...
காயங்களாலும்...
வீரத்தாலும்...
விவேகத்தாலும்...
கனவு மாற்றத்தாலும்...
விடாமுயற்சியாலும்...
இன்று...
விண்ணில் உயர உயர
பறக்குது பார்....
எங்கள் சுதந்திரம்...🇮🇳
கம்பீரமாக....🇮🇳
தேசியக் கொடியின் மூவர்ணங்கள் :
காவி - தைரியத்தையும், தியாகத்தையும் குறிக்கும்.
வெள்ளை - அமைதி, உண்மை, தூய்மை.
பச்சை - செம்மை, நம்பிக்கை, வீரத்தைக் குறிக்கின்றன.
அசோகச் சக்கரம் - நீதியைக் குறிக்கும்.
ஜெய்ஹிந்த் :
ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் சுதந்திர போராட்டத்தின் போது நாட்டு மக்களிடையே தேசிய உணர்வை தட்டி எழுப்பியது. இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது, மக்களின் சுதந்திர தாகம் அதிகரித்தது. தற்போதும் இன்றைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த வார்த்தை அதே உத்வேகத்தை அளிக்கிறது என்றால் அது மிகையாகாது.
இன்றைய நாளில் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுக்கூறுவோம்...
மகாத்மா காந்தி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
சர்தார் வல்லபாய் படேல்
கோபால கிருஷ்ண கோகலே
ஜவகர்லால் நேரு
பாலகங்காதர திலகர்
காமஜாசர்
ராணி லட்சுமி பாய்
பகத்சிங்
வேலு நாச்சியார்
சரோஜினி நாயுடு
வீரபாண்டிய கட்டபொம்மன்
மகாகவி பாரதியார்
சுப்பிரமணிய சிவா
திருப்பூர் குமரன்
வ.உ.சிதம்பரனார்
புலித்தேவர்
என நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தங்களது இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் பலர்.
கண் மூடி விழிப்பதற்குள் ஓடிவிட்டது 72 ஆண்டுகள்.
நாம் அடிமை சங்கிலியிலிருந்து விடுபட்டு உலக நாடுகள் வியந்து பார்க்கும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் சாதித்து கொண்டு வருகிறோம்.
இந்த வெற்றிக்கு காரணம்... கடின உழைப்பு, தொலை நோக்குப் பார்வை ஆகியவையே !!
வயற்காடு முதல் விண்வெளி வரை அனைத்திலும் சாதித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் பல சாதனைகள் புரிய உள்ளோம்...!!
எட்டா கனியை எட்டிப்பிடிப்போம்... இனி வரும் ஆண்டுகளில்...
இந்தியன் என்ற ஒரே சொல்லில் அனைவரும் ஒன்றிணைந்து.... இந்தியாவை வல்லரசாக்க நாமும் நம் பங்களிப்பை தருவோம்..!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக