எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்….
உலகில் மொத்தம்
3000 வாழை வகைகள் இருக்கின்றன.
ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு நோயை குணமாக்கும் தன்மை கொண்டவை.
அவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
#பூவன் பழம் -
அளவில் சிறியவை. ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது.
#ரஸ்தாளி -
மருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், சாலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. உடல் வறட்சியைப் போக்கும்; காமாலையைத் தடுக்கும்.
#மலை வாழைப்பழம்-
(பச்சைப் பழம்) - குழந்தைகளுக்கு மிகப்படித்தமான பழம். இரத்த விருத்தி செய்யும்.
#நேந்திரம்பழம்-
பச்சையாகவோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ உண்ணப்படுகிறது. குடற்புழுக்கள் நீக்குகிறது. புரதம் அதிகம் உண்டு.
#கற்பூரவள்ளி பழம்-
வாழை ரகங்களிலிலேயே மிக இனிப்பானது. நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது கடினம்; கனிந்து முற்றிவிடும்.
#செவ்வாழை -
நோய் எதிர்ப்பு சக்தி; உடலில் தாது பலமும் அதிகரிக்கும்.
#கதளி மற்றும் எலச்சி கதளி ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர்செய்கிறது.
#எலைச்சி-
சிறியவையாயினும் மிகச் சுவையானவை; மலச்சிக்கலுக்கு சிறந்தது.
#பேயன் பழம் -
வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக