உள்ளாடை சுத்தம் அறிவோம் !!
தோல் மருத்துவர்களிடம் செல்லும் நோயாளிகளில் கணிசமானவர்களுக்குப் பிரச்னை ஏற்பட முக்கியக் காரணமே சுத்தமற்ற உள்ளாடைகள்தான்.
சாதாரணமான உள்ளாடையில், தொடைகள் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு இடையே போதிய காற்று வசதி இருக்காது.
இதனால், இடுக்குகளில் வியர்வை படிந்து, தோல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
பாக்ஸர் ஷார்ட்ஸ் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்னை தவிர்க்கப்படும்.
இறுக்கமான உடைகளை அணிவதால், தோல் சிவத்தல், தோல் எரிச்சல், உள்ளாடை அச்சுப்பதிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
ஒரு நாளைக்கு உள்ளாடைகளை மாற்ற வேண்டும் என்பதைத்தான் மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள்.
இரவு, படுக்கைக்குச் செல்லும்போது, உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.
மற்ற உடைகளுடன் சேர்த்து உள்ளாடையை ஊறவைத்துத் துவைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஈரமான உள்ளாடையை எந்தக் காரணம் கொண்டும் அணியக் கூடாது. உள்ளாடைகளைக் கட்டாயம் வெயிலில்தான் உலர்த்த வேண்டும்.
அல்லது நிழலில் உலர்த்தி, அயர்ன்பாக்ஸ் கொண்டு மென்மையாக அயர்ன் செய்தால், கிருமிகள் நீங்கும்.
இன்னொருவர் உள்ளாடைகளை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். இதனால், இருவருக்குமே தோல் பாதிப்புகள் வர வாய்ப்பு உண்டு.
குளிர்காலம் மற்றும் மழைக் காலங்களில் ஈரமான உள்ளாடையைப் பல மணி நேரங்கள் அணிவதால், ‘இன்டெர்ட்ரிகோ’ (Intertrigo) குளிர் காலத்தைவிட கோடை காலத்தில் அதிக வியர்வை படிவதால் எனும் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக, ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு உள்ளாடை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சிந்தடிக், நைலான் உள்ளாடைகளைத் தவிர்த்து, தரமான பருத்தி உள்ளாடைகளை அணிவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக