ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.
இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின்
பயிற்சியாளர் ஏ.நரசிம்ம மணி கூறியதாவது:
💦 பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
💦 சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.
💦அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
💦 சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
💦 ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள்.
💦அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
💦 ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.
💦 ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.
💦 எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.
💦 கனரக வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது.
இது முற்றிலும் தவறு.
மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு
எச்சரிக்கை சின்னம்.
💦ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர
நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
💦 நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய .
💦 வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும்.
💦அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.
💦அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.
💦 ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து
திரும்புகின்றனர்.
💦 இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
💦 கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
💧சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
💧பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது.
💧அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
💦 நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர்.
💧காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில்
இருந்து கண்களை பாதுகாக்கும்.
💧வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின்
வேர்கள் அதிகம் வெளி வராது.
💧இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை
அதிகம் "அப்சர்வ்' செய்கிறது.
💧விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
💦நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது.
💦மொபைல் போன் "சிக்னல்' இல்லாத
இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
💦மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து
நம்மை பாதுகாக்கும்.
💧இந்த நல்ல விஷயத்தை பலருடன் பகிரலாமே!!!!💦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக