புதன், 16 ஆகஸ்ட், 2017

துணி நாப்கின்களை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?



துணி நாப்கின்களை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?

அதிகப்படியான பெண்கள் இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை.

ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் இன்பெக்சன் கூட ஏற்பட்டு விடும். இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.

ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்களில் பிளாஸ்டிக் மெட்டிரியல் உள்ளது. இது உராய்வின் போது காயங்களையும், அரிப்பையும் உண்டாக்கும், மேலும் இது பெண் உறுப்பிற்கு செல்லும் காற்றை தடுத்து நிறுத்தி விடும். ரேயான் மெட்டிரியல் மூலம் செய்யப்பட்ட நாப்கின்கள், பெண் உறுப்பின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் தொற்றுக்களும், புண்களும் உண்டாகும். ஆனால் துணி நாப்கின்களில் இயற்கையான பஞ்சு உபயோகப்படுத்துவதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் பஞ்சு, பிளாஸ்டிக் என எந்த மெட்டிரியல்களால் செய்யப்பட்டிருந்தாலும் கூட இதில் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும். ஆனால் துணி நெப்கின்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவையாகும்.

துணி நாப்கின்களை நீங்கள் சுகாதாரமாக பயன்படுத்தினால், பல தடவைகள் பயன்படுத்தலாம். பலமுறை உபயோகப்படுத்துவதால் இது சுத்தமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கு இருப்பது தான். ஆனால் இதனை சுத்தம் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. நீங்கள் இதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, டீ ட்ரீ ஆயில் அல்லது, ஏதேனும் கிருமி நாசினியை கொண்டு சூடான நீரில் சுத்தம் செய்தாலே போதும். இதில் கசிவுகளும் இருக்காது.

இது உங்களுக்கு தேவையான வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே இவற்றை கண்டு நீங்கள் முகம் சுழிக்கமாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக