குடல் புண்ணை குணப்படுத்தும் வழிகள்!
.
குடல் புண்ணிற்கு மூலகாரணமான மலச்சிக்கலை விரட்ட காலையில்எழுந்தவுடன் 3 முதல் 4 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். நொந்து போன வயிறும் குடலும் தெம்பு பெறும். மிக கடினமான மலச்சிக்கலாக இருந்தால் அஹிம்சை எனிமா கொடுக்கலாம்.
இரவில் ஒரு டீஸ்பூன் திரிபலா சூரணம் சாப்பிடலாம். இரவில் திராட்சை, வாழைப்பழம், பப்பாளி போன்ற பழங்கள் முறைகளை ""நோய் தீர்க்க எனிமா"". ""மலச்சிக்கலுக்கு மருந்து"" என்ற புத்தகங்கள் மூலம் அறியவும். ஒரு சில எளிய ஆசனங்கள் செய்யலாம்.
காலையில் சூடான காபி, டீக்கு பதில் ஏதேனும் பச்சை கீரைச் சாறுகள், பழச்சாறு அல்லது உயிரூட்டிய தானியச்சாறு (முளைக்க வைத்து) இவற்றில் ஒன்றை சாப்பிட்டு உடல் நலம் பெறலாம். மழைக்காலம் தவிர பிற காலங்களில் சூடான பானங்களைத் தவிர்க்கவும்.
சமைத்த உணவுகள் எல்லாம் அமில உணவுகள், Acid Food கார்பன்டைஆக்ஸைடு உருவாக்கும் உணவுகள். புளிக்கக் கூடிய உணவுகள் உடலுக்கு கெடுதல் தரக்கூடியவை. எனவே இட்லி, தோசை, பூரி, புரோட்டா, புலால் உணவுகள் போன்ற உணவுகளை குறைத்து, சாப்பிடும் முன் கனிந்த பழங்களும், சமைக்காத காய்கறிகளும் சாப்பிட்டால் குடல் புண் அதி விரைவில் குணம் அடையும். இதில் மாயம் ஒன்றும் இல்லை.
வயிற்றுப்புண், குடல் புண்ணை குணப்படுத்தும் அற்புத உணவுகள். உணவு மாற்றம் உடனடி தேவை. கார உணவுகள். ஆக்ஸிஜன் தரும் உணவுகள், அற்புத உணவுகள் (Alkaity) மணத் தக்காளிக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, வெண்பூசணிச்சாறு, சோற்றுக் கற்றாழை, நெல்லி, வாழைத் தண்டு, கோஸ், காரட், அருகம்புல் சாறு, பசுங் காய்கறி கலவை, வாழைப் பழம், வெள்ளரி, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சீத்தாப்பழம், பீர்க்கை, புடலை போன்ற சஞ்சீவி உணவுகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்தால் ஒரு வாரத்தில் மிகப் பெரிய மாறுதலை அடையலாம்.
கீரைகளை பச்சையாக சாறு எடுத்துச் சாப்பிட இயலாதவர்கள் வெந்தயத்தை முளைக்கட்டி காய வைத்த பொடி, காய வைத்த முருங்கைப் பொடி, அருகம்புல் பொடி போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காபி, டீக்கு பதில் முளைகட்டிய தானியங்களை காய வைத்து சத்துமாவு ரெடி செய்து கஞ்சி, தோசை செய்து சாப்பிடலாம். பிற இயற்கை நல உணவு வகைகள் பற்றி அறிய ""பால் மனிதனின் பரிபூரண உணவா?"" மற்றும், ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் மூலம் அறியலாம். ஒருநாள் உணவுத் திட்ட விவரம் பின் பகுதியில் தரப்படுகிறது.
பிற மருத்துவத் துறையில் நேரம் தவறாமல் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தப்படுகிறது. ஆனால் நிரந்தர உடல்நலம் நாடுபவர்கள் நன்றாகப் பசித்த பின்பு தான் எந்த உணவாக இருந்தாலும் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதுவரை அவ்வப்போது தண்ணீர் மட்டும் அருந்த வேண்டும்.
குடல் புண், வயிற்றுப்புண் வலியின் கடுமை குறையும்வரை திட உணவுகள் தவிர்த்து திரவ உணவுகளான பழச்சாறுகள், காய்கறிச் சாறுகள் போன்ற வகை உணவுகள் அதிகம் சேர்க்க வேண்டும். கண்டிப்பாக வெள்ளை சீனி தவிர்க்க வேண்டும். தேன் அல்லது வெல்லம் தேவைப்படின் சேர்க்கலாம்.
கூடிய வரை இரவு உணவை இரவு 7 மணி அளவில் சாப்பிட்டு விட வேண்டும்.
எளிய யோகாசன பயிற்சிகள், பவன முக்தாசனம், பத்மாசனம், வஜ்ராசனம், நாடிசுத்தி போன்ற பயிற்சிகளை யோக ஆசிரியர் அல்லது யோகாசன புத்தகம் மூலம் தெரிந்து தினமும் சில நிமிடங்கள் செய்து வர குடல் புண் விரைவில் சரியாகும்.
வயிற்றுப்புண், குடல் புண் முற்றிய நிலையில், தேங்காய் போன்ற இயற்கை உணவுகளை இயற்கை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே சாப்பிடலாம்.
கூடிய வரை சாப்பிட்ட பின்பு குறைந்தது பதினைந்து நிமிடங்கள் கழித்தே தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிட்ட உடன் மூளை சம்பந்தப் பட்ட வேலை அல்லது கடின உடல் உழைப்பு செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உழைப்பும் செரித்தல் வேலையும் ஒரே நேரத்தில் நடக்க இயலாது.
சாப்பிட வேண்டிய உணவுகளை அமைதியாக அமர்ந்து நன்றாக அவசரம் இல்லாமல் மென்று உமிழ்நீர் சேர்த்து சாப்பிட வேண்டும். உமிழ்நீர் சேர்ந்த உணவுகள் இரைப்பை, குடலுக்கு நன்மை தருகின்றன. நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன.
கோபமாக இருக்கும் போதும், மனம் அமைதியற்று இருக்கும் போதும் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர் சாப்பிடலாம். சாந்தி ஆசனம் செய்யலாம். கோபம், குடல்புண், வயிற்றுப் புண்களை அதிகரிக்கும் அமிலத் தைச் சுரக்கச் செய்கிறது. மணத் தக்காளி, வெண்பூசணி கூட்டணி இரப்பைப் புண்ணை இல்லாமல் செய்திடும்.
குடல் புண் குணம் பெற ஒரு நாள் மாதிரி உணவுத் திட்டம்
கண்டிப்பாக கடல் உப்பு, வெள்ளைச் சீனி, மிளகாய், எண்ணெயில் பொரித்த பண்டங்கள் தவிர்க்க வேண்டும்.
காலை 5.30 மணி:
எழுந்தவுடன் மூன்று முதல் ஆறு டம்ளர் நீர் வரை அருந்த வேண்டும். காலையில் குடிக்கும் நீர், வயிற்றுப் புண், குடல் புண்ணை சரி செய்கிறது. பின் இயன்றால் பல் துலக்கும் சமயம் வாந்தி எடுக்கவும். கெட்ட நீர், தேவையற்ற அமிலங்கள் வெளியேறும்.
காலை 6.30 மணி:
அருகம்புல் சாறு, மணத்தக்காளி கீரைச் சாறு, நெல்லிச்சாறு, சாம்பல் பூசணிச் சாறு, வெந்தயக் கீரைச்சாறு இவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அருகம்புல் பொடி, உயிரூட்டிய வெந்தயப்பொடி இவைகளில் ஏதேனும் ஒன்று. சாறு எடுப்பதாக இருந்தால் ஒரு கைப்பிடி கீரையை எடுத்து கழுவி மிக்ஸியில் 200 மில்லி நீர் விட்டு அரை த்து வடிகட்டவும். தேவையெனில் இனிப்பும் கலக்கலாம். சப்பிச் சப்பி சாப்பிடவும், கலோரி சக்தி 30 வரை கிட்டும்.
முளைகட்டிய வெந்தயப் பொடி தயார் செய்ய, வெந்தயத்தை 8 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் துணியில் கட்டினால் முளை வரும். வெயிலில் 5 கிராம் காய வைத்து மிக்ஸியில் பொடியாக்கி வைத்துக் கொண்டு 1 ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடவும். நைந்து போன, பலம் இழந்த வயிறு, குடல் புண் மற்றும் வாய் புண்ணை ஆற்றும் சஞ்சீவி உணவு, தினமும் சாப்பிடலாம். சாப்பிடும் முன்பு ஒரு டீஸ்பூன் தொடர்ந்து சாப்பிட ஒரு வாரத்தில் குடல்புண் சரியாகும்.
காலை 9.00 மணி:
வாழைப்பழம் 2, திராட்சை 50 கிராம், ஆரஞ்சு 1, பப்பாளி இரு துண்டுகள் அல்லது தேவையான அளவுகள் சாப்பிடலாம். வெள்ளரி, முட்டைகோஸ், காரட் பச்சை யாக தேவையான அளவு சாப்பிடலாம். முளை தானியங்களான கம்பு, கேழ்வரகு, கோதுமை, பச்சைப்பயறு சேர்க்கலாம். கலோரி சக்தி 200 வரை கிட்டும்.
மதியம் 1.00 மணி:
காரட், கோஸ், தக்காளி, புடலை, பீர்க்கை போன்ற காய்கறிகள் கலந்த பசுங்கலவை 200 கிராம் ஆப்பிள் 1 துண்டு, மாதுளை 50 கிராம், தர்பூசணி சிறிது, வெள்ளரி, 2 சமைத்த காய்கறிகள் 200 கிராம், ஊற வைத்த கார் அவல் 150 கிராம்.
இவைகளில் சில மற்றும் தேவையான அளவுகள் சாப்பிடலாம். முளை தானியங்கள் 50 கிராம் முதல் 100 கிராம் வரை சாப்பிட லாம். அரைப்பதத்தில் உள்ள தேங்காய், வழுக்கைகள் சேர்க்கலாம். கலோரி சக்தி 500 வரை கிட்டும்.
பசுங்காய்கறி கலவை
செய்யும் முறை (1 நபருக்கு)
காரட் 50 கிராம், தக்காளி 1, பல்லாரி வெங்காயம் 1, கோஸ், பீர்க்கை, புடலை, தர்பூசணி இவைகளில் ஒன்றோ எல்லாம் சேர்ந்தோ 50 கிராம், தேங்காய்த் துருவல் 50 கிராம், எலுமிச்சைச் சாறு சிறிது, வெல்லத்தூள் சிறிது, மல்லி, கறிவேப்பிலை சிறிது, காய்கறிகளை நன்றாக கழுவி தேங்காய்த் துருவல் போல் செய்து எலுமிச்சை சாறு, வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் கலந்து சாப்பிட்டால் எவ்வித குடல் புண்ணும் மூன்றே நாளில் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.
ஜெலுசில் போன்ற ஆங்கில மருந்துகள் தேவைப்படாது. கவலை தரும் நோய் களை விரட்டும் அற்புத மருந்து வயதான வர்களும் பல் இல்லாதவர்களும் மிக்ஸியில் அரைத்துச் சாப்பிடலாம். இனிப்புக் கலந்தும் சாப்பிடலாம்.
மாலை 4.00 மணி:
தேன் கலந்த நீர், காய்கறி சூப், நெல்லி வத்தல், மணத்தக்காளி சூப், மூலிகை டீ, காரட் கீர், காயவைத்த முருங்கைப் பொடி, உயிரூட்டிய (முளைக்கட்டிய) தானிய சத்துமாவு இவைகளில் ஏதேனும் ஒன்று. முருங்கைக் கீரையை சமைத்து உண்பதால் அமில உணவாகி, கழிவு உணவாகி விடு கிறது. எனவே கீரையை பறித்து உலர்த்தி பொடி செய்து வைத்து தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டால் குடல் புண் தீரும். இது ஒரு சஞ்சீவி கீரையாகும். கீரைகளில் மனிதன் சாப்பிடக்கூடிய கீரை முருங்கைக் கீரை ஒன்றே. அதையும் சமைக்காமல் பொடி செய்து சாப்பிடும்போது அற்புத ஆற்றல் தருகிறது. சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். கலோரி சக்தி 50 வரை கிட்டும். "வெந்து கெட்டது முருங்கை"
காரட் கீர் செய்யும் முறை
காரட் துருவலை மிக்ஸி அல்லது கிரைண்டரில் ஆட்டி சாறு எடுத்து அத்துடன் தேங்காய்ப் பால் சேர்க்கவும். சுவைக்கு தேன் அல்லது வெல்லம் சேர்க்கவும். இது டிபனுக்குப் பதில் மாற்று உணவு. சத்து தரும். உடனடி சக்தியும் தெம்பும் தரும். குழந்தைகள் மிகவும் விரும்பி பிரியமாக சாப்பிடுவர். காரட் கீர் கேட்டுப் பருகுவோம்.
தேங்காய்ப் பாலுக்குப் பதில் முளை தானியப்பால் சேர்க்கலாம். இதே போல் பேரீச்சை கீர், கருவேப்பிலை கீர், கொத்த மல்லி கீர் செய்து சாப்பிடலாம். கலோரி சக்தி 50 வரை கிட்டும்.
இரவு 7.00 மணி:
சாப்பிடும் முன்பு ஏதேனும் கீரைப் பொடிகள். மேலும் வாழைப்பழம் 2, உயிரூட்டிய தானியங்கள் (பாசிப்பயறு) 30 கிராம், கொய்யா 1, காரட் 50 கிராம் போன்ற தேவையான அளவு, முளை தானியங்கள் 50 கிராம் முதல் 100 கிராம் சேர்க்கலாம். கலோரி சக்தி 300 வரை கிட்டும். அவல் உணவுகள் 100 கிராம் வரை சேர்க்கலாம்.
முளைக்கட்டிய உயிரூட்டிய (Sprouts) தானியங்கள் செய்முறை:
ஒரு கைப்பிடி பாசிப்பயறு 8 மணி நேரம் ஊற வைத்து 8 மணி நேரம் துணியில் கட்டினால் முளை கிளம்பி வரும். நன்றாக கழுவி தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் கலந்து சாப்பிட லாம். இதுபோல் கேழ்வரகு, கம்பு, கோதுமை, கொண்டைக்கடலை போன்ற தானியங்கள் சாப்பிடலாம். புண்ணாகி போன குடலையும், மனதையும் விரைவில் குணமாக்கக் கூடிய சக்தி உயிரூட்டிய (முளைக்க வைத்த) தானியங்களுக்கு உண்டு. சாப்பிட்டு பலனைத் தெரிவியுங்கள். உப்பால் உடைந்து சிதைந்து போன குடலை சரி செய்வது உயிரூட்டிய (முளைக்க வைத்த) தானியங்களே. இதில் இருந்து மிக்ஸியில் அரைத்து நீர் சேர்த்து முளை தானியப் பால்கள் தயாரித்தும் சாப்பிடலாம்.
சிரஞ்சீவி உணவுகள்
இயற்கை உணவுகளே
"உடல் நலம் மிகப் பெரிய ஊதியம்
மனநலம் மிகப் பெரிய பொக்கிஷம்"
வயிற்றுப்புண், குடல் புண்ணுக்கு தவறான அளவுக்கு மீறின அமில உணவு களும் தவறான பழக்க வழக்கங்களும் மற்றும் உடல் நலப் பாதுகாப்பு பற்றி அறியாமையுமே. தேவையற்ற அளவுக்கு மீறின இரசாயன மருந்து பொருட்களும் உடல் நலத்தை சீரழித்து பிற வியாதி களையும் உண்டு பண்ணுகின்றன. சமைக்காத இயற்கை உணவு களும், கனிவு தரும் கனிகளும் பல வியாதிகளை விரட்டுகிறது. அதிலும் குடல் புண், வயிற்றுப் புண்களை விரைவில் குணம் அடையச் செய்கிறது. நலமான மனிதன் ம ட்டுமே பிறர் நலம், தேவையைப் பற்றி சிந்திக்க இயலும். வியாதியுள்ள மனிதர் பிறர் நலத்தையும் அதற்கான ஆலோசனை பற்றிப் பேச தகுதியில்லாதவர்களே. "தன்னை காத்துக் கொள்ள தவறியவர் பிறர் நலனை எப்படி சரி செய்வர்.
வயிற்றுவலி, குடல் புண் எவ்வளவு மோசமாக இருந்தாலும் நாட்பட்டதாக இருந்தாலும் மாதிரி ஒரு நாள் உணவு திட்டப்படி கடைப்பிடித்தால் ஒரு வாரத்தில் அற்புத கு ணம் கிட்டும். மருந்து மாத்திரை கள் தேவைப்படாது. இது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக