வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தசைப்பிடிப்பு இந்தப் பிரச்சனை உங்களுக்கும் கண்டிப்பா இருக்கும் !!



தசைப்பிடிப்பு இந்தப் பிரச்சனை உங்களுக்கும் கண்டிப்பா இருக்கும் !!

  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை தசைப்பிடிப்பு. இப்பொழுது தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும், அதை சரிசெய்வதற்கான வழிமுறைகளையும் காண்போம்.

தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் :

👉 உடலில் ஏற்படும் அதிக வறட்சியின் காரணமாக, திடீரென தசைகளில் நீர் பற்றாக்குறைவு ஏற்பட்டாலும் அல்லது மிகவும் சோர்வு அடையும் போது தாது உப்புகளின் அளவு குறைந்தாலும் தசைப்பிடிப்பு உண்டாகும்.

👉 ஒரே நிலையில் அமர்ந்து, அதிகத் தூரம் பயணம் மேற்கொள்ளும் போதும் தசைப்பிடிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி கை, கால் போன்ற இடங்களில் அடிபடுவதாலும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

👉 வார்ம் அப் செய்யாமல் உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் ஏற்படும் திடீர் வெப்ப இழப்பினைத் தாங்காமல் தசைப்பிடிப்பு ஏற்படும். உடலில் உள்ள ஒரே உறுப்பை அதிக நேரம் பயன்படுத்தும் போது, தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

👉 வாயு நிறைந்த உணவுப்பொருட்களான உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும் போதும் தசைப்பிடிப்பு ஏற்படலாம் அல்லது அதிகக் காரம் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளும் போது, நாளடைவில் தசைப்பிடிப்பு ஏற்படும்.

👉 விளையாடும் பொழுதோ அல்லது கடுமையாக வேலை செய்துக் கொண்டிருக்கும் போதோ உடலில் எங்கேயாவது தசைப்பிடித்துக் கொண்டு சிரமத்தை உண்டாக்கும். மேலும் அடிகுழாயில் தொடர்ந்து தண்ணீர் அடிக்கும் போது, கையில் தசைப்பிடிப்பு உண்டாகலாம்.

தசைப்பிடிப்பை சரிசெய்வதற்கான வழிமுறைகள் :

👉 தசைப்பிடி ஏற்பட்டால் உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும்.

👉 நல்லெண்ணெயில் உப்பு கலந்து தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் தேய்த்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியை வேர்க்கச் செய்ய வேண்டும். இதை தசைப்பிடிப்பு குணமாகும் வரை தினந்தோறும் இரு முறை செய்ய வேண்டும். ஏனெனில் அடிபட்டு, தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் தசை பலவீனமாகி, இரத்த ஓட்டம் நடைபெறாமல் தடைப்பட்டு இருக்கும்.

👉 சுக்கு தசைப்பிடிப்பினால் ஏற்படும் வலியைப் போக்கும் குணமுடையதால் சு டாக சுக்கு கொத்தமல்லி காபி குடிக்கலாம்.

தசைப்பிடிப்புக்கான ஆயுர்வேத சிகிச்சை :

👉 ஆமணக்கு, நொச்சி, கல்யாண முருங்கை, முருங்கை இலை, புங்கன் இலை, புளி இலை, எருக்கம் இலை, ஊமத்தம் இலை ஆகியவற்றுடன் வாதநாரயண இலையைச் சேர்த்து, வதக்கி ஒரு துணியில் கட்டி, தினந்தோறும் இருமுறை ஒத்தடம் கொடுத்தால் தசைப்பிடிப்பு குணமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக