புதன், 16 ஆகஸ்ட், 2017

வீட்டில் அதிகமாக ஊதுபத்தியை பயன்படுத்துகிறீர்களா ? இது உங்களுக்கு தான்..


வீட்டில் அதிகமாக ஊதுபத்தியை பயன்படுத்துகிறீர்களா ? இது உங்களுக்கு தான்..

வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள்.

இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும்

👁‍🗨 ஊதுவர்த்தியின் புகையானது செல்களில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது புற்றுநோய் வளர்ச்சிக்கு பொருப்பாகிறது.

👁‍🗨 ஊதுவர்த்தியின் புகை சிலருக்கு இருமல் மற்றும் தும்மலை ஏற்படுத்துகிறது.இதில் உள்ள நுண்ணிய நச்சுக்கள், மிகவும் ஆபத்தானவை.

👁‍🗨 நீங்கள் கர்ப்பமாக இருந்தால், ஊதுவர்த்தி புகையை விட்டு சற்று தள்ளியே இருங்கள். இந்த புகை உங்களது சுவாசம் வழியாக சென்று கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.

👁‍🗨 ஊதுவர்த்தியின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இதனை நீண்ட நாட்கள் சுவாசித்து கொண்டிருந்தால், நரம்பியல் பிரச்சனைகள் உண்டாகும். கற்றல் திறன் குறைபாடு மற்றும் நினைவாற்றல் குறையும்.

👁‍🗨 நீங்கள் மன அமைதிக்காகவும், தெய்வ காரியங்களுக்காகவும் பயன்படுத்தும் இந்த ஊதுவர்த்தி, உங்களுக்கு தலைவலி மற்று தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளையும் கூட ஏற்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக