திங்கள், 11 ஜூன், 2018

பலாப்பழத்தினால் வரும் நன்மைகளும் தீமைகளும்.....


பலாப்பழத்தினால் வரும் நன்மைகளும் தீமைகளும்.....

முக்கனிகளில் இரண்டாவது கனியான பலா அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.இங்கு அவற்றின் நன்மைகளும் தீமைகளும் காண்போம்.
நன்மைகள்: 
  1. உடல் உஷ்ணத்தை குறைத்து பித்த மயக்கம், கிறுகிறுப்பு ஆகியவற்றை  குறைக்கிறது.
  2. பலா பழத்தை தேனில் நனைத்து சாப்பிட்டுவர  மூளை நரம்புகள் வலுப்பெறும்.வாதநோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.
  3. பலா மரத்தின் வேறை அரைத்து சொறி சிரங்குகளில் பூசி வர தீரும்.
தீமைகள்:
  1. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கேற்ப பலா பழத்தை அளவுடன் உண்ண வேண்டும். அளவுக்கு மிஞ்சி உண்டால் வயிறு மந்தமாகி வயிறு வலியும் வாந்தியும் உண்டாக்கும்.
  2. பலாபிஞ்சினை அதிகமாய் உண்பதால் செரியாமை, வயிற்று வலி ஏற்படுவதுடன் சொறி,சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாதநோய்கள் ஏற்படும்.
  3. "அப்பண்டிசைடீஸ்" உள்ளவர்கள்  பலாப்பழத்தை அறவே சாப்பிடக்கூடாது.
  4. அதிகமாக சாப்பிட்டால் அத்துடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக