செவ்வாய், 26 ஜூன், 2018

இரண்டே இலையை பாலில் போட்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

இரண்டே இலையை பாலில் போட்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?



துளசி இலையில் அதிகப்படியான நன்மைகள் உள்ளன.

பண்டைய காலத்தில் இருந்தே துளசியானது, மிகச் சிறந்த மூலிகைப் பொருளாக அனைவருக்கும் பயன்படுகிறது. துளசியில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் தான் இந்த துளசியை தெய்வங்களுக்கும் படைத்து வந்தனர்.
                           
இந்த துளசி இலையை சாதாரணமாக மென்று சாப்பிட்டால் சுவாசக் கோளாறுகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. சளி இருமலுக்கு மிக சிறந்த மருந்து இந்த துளசி ஆகும்.
பால் நமக்கு மிகவும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களைத் தருகிறது. மேலும் பால் குடிப்பதால், நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை நாம் பெற முடிகிறது.
உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சூடான பாலுடன் துளசியை சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.
                  
சூடான பாலில் துளசி கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்
காய்ச்சல் உள்ளவர்கள் சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்தால், விரைவில் காய்ச்சல் குணமாகிவிடும். துளசி மற்றும் பாலில் உள்ள சத்துக்களால் நமது உடலின் வெப்பத்தைக் குறைத்து, காய்ச்சலின் அளவையும் குறைத்து விடுகிறது.
துளசியில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்ல உதவுகிறது.
 சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால் உடலின் நரம்பு மண்டலம் சீராக்கி, மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி பதட்டம் மற்றும் அதிக மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.
துளசி மற்றும் பால் சேர்க்கப்பட்ட இந்த பானத்தில் சிறந்த டையூரிடிக் உள்ளது. எனவே இது யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
துளசி மற்றும் பாலில் ஆண்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இந்த பானத்தை  குடித்து வந்தால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக