ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மழைக்காலம் - உண்ணும் உணவு முறைகள்

மழைக்காலம் - உண்ணும் உணவு முறைகள்

☀ மழைக்காலத்தில் கொசுக்கடியிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும். நாம் உண்ணும் உணவின் மூலமும்இ குடிக்கும் தண்ணீர் மூலமும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஆறு மணி நேரத்துக்கு மேல் சமைத்து வைத்த உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

காலை :

☀ அதிகளவில் கீரைகளையும்இ கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற அனைத்து வகையான காய்களை சாப்பிடுவது நல்லது. சாப்பிடக்கூடிய உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும்.
☀ அசைவ உணவுகளான கோழிஇ மீன்இ முட்டைஇ இரால் மற்றும் நண்டு ஆகியவற்றை மதிய உணவாக சாப்பிடலாம்.
☀ வெஜிடபிள் புலாவ்இ சப்பாத்தி - வெஜிடபிள் கறிஇ பருப்பு கறிஇ தக்காளி சாதம் மற்றும் அனைத்து சாத வகைகளையும் சாப்பிடலாம்.
☀ மதிய உணவில் மோர் மற்றும் தூதுவலை ரசம் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.
☀ வைட்டமின் சி நிறைந்த சாத்துக்குடிஇ ஆரஞ்சுஇ எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை பருகலாம்.

மதியம் :

☀ அதிகளவில் கீரைகளையும்இ கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது. சாப்பிடக்கூடிய உணவுகளை சூடாக சாப்பிட வேண்டும்.
☀ அசைவ உணவுகளான மீன்இ முட்டைஇ இறைச்சி ஆகியவற்றை மதிய உணவாக சாப்பிடலாம். கோழிக்கறி சூப் வைத்தும் குடிக்கலாம்.
☀ மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது நல்லது. மீன்களில் அதிக அளவு ஜிங்க் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும்.
☀ மாலை நேரத்தில் மழைக்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு :

☀ இரவில் இட்லிஇ தோசைஇ சப்பாத்திஇ கோதுமை ரவைஇ சேமியா ஆகியவற்றை சாப்பிடலாம்.
☀ இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள்இ மிளகுத்தூள்இ பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லதுஇ இது சளி பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.
☀ ஐந்து முந்திரி பருப்பை அல்லது பாதாம் பருப்பை ஊறவைத்து அதனுடன் அரைகப் தேங்காய் துருவிப்போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்தால் இயற்கை பால் தயாராகி விடும். அதன்பின் பால் அருந்துவதற்கு பதில் இயற்கை பாலை பயன்படுத்தலாம்.

குறிப்பு :

☀நம் உணவில் காரம்இ கசப்புஇ துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
☀ மழைக்காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில்இ மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
☀ சாதாரண தேநீரை விட இஞ்சி சேர்த்த மசாலா தேநீர் எடுத்துக்கொள்வது நல்லது. இது மழையினால் ஏற்படும் குளிருக்கு இது இதம் தருவதுடன்இ சளி பிடிக்காமல் தடுக்கவும் உதவும்.
☀ மழைக்காலத்தில் நீர் சத்து நிரம்பிய பூசணிஇ புடலைஇ சுரைக்காய் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

சனி, 29 அக்டோபர், 2016

இளமை இதோ ...

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!

யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ''சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க' என்று பெருமூச்சுவிடாத பெண்களோ, ''சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு' என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன?

அவர்களுக்காக மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணர்

1 'ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வரவேண்டும்.  வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

2 நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.

3 மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.

4மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும். கரிசலாங்கண்ணிக் கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள், தேமல் போன்றவற்றைப் போக்கி, மூப்பைக் குறைக்கும்.

5காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு! 

6 ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.

7 ''மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது'' என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன்  போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும், காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும். சரும நோய்கள் சரியாகும். 

8 ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.

9 நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.

10   அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். 

11 வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்கவைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

12 சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.

13 காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்தாலே போதுமானது.

14 முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.

15   குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.

16 வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம். தலைக்கு சீயக்காய்த்தூள் உபயோகிப்பதும், வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.

17 செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.

18  கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது. அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக 'ஃபேர்னெஸ் க்ரீம்’களை வாங்கிப் பூசுபவர்களுக்கு, தோல் சுருக்கம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது.

19   தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதில், முதல் இடம் பிராணாயாமத்துக்குத் தான்.  ஹார்மோன் செயல்பாடுகளைச் சீராக்க, பிராணாயாமத்தைவிடச் சிறந்த மருத்துவம் இல்லை.

20 தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுச் செய்யும் நாடிசுத்தி பிராணாயாமம், சீத்காரி மற்றும் சீதளி போன்ற பிராணாயாமப் பயிற்சிகள், மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கு நல்ல மருந்து.

21 உடல் 'ரிலாக்ஸேஷனு’க்கு சவாசனம், மக்ராசனம் போன்ற யோகப் பயிற்சிகள் மிகச் சிறந்தவை. அலுவலகத்திலிருந்து வந்ததும், கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் படுத்து எழுந்தால், அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் தியானம் இளமையைத் தக்கவைக்கும்.

22 யோகாசனம் செய்ய முடியாதவர்கள், நீச்சல் பயிற்சி அல்லது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியை, 'கடனே’ என்று செய்யாமல் ரசித்து, அனுபவித்துச் செய்தால் பலன் இன்னும் அதிகம்.

23 இஸ்லாமியர்கள் தொழுகையின்போது கால்களை மடக்கி அமரும் நிலைதான் வஜ்ராசனம். 'வஜ்ரம்’ என்றால் வைரம் என்று பொருள். வைரம் பாய்ந்த கட்டையாக நம் உடலை வைத்திருக்க, வஜ்ராசனத்தை விடச் சிறந்த பயிற்சி இல்லை. சாதாரணமாக வீட்டில் அமரும்போதும், வீட்டில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், நாளிதழ் வாசிக்கும்போதும், வஜ்ராசனத்தில் இருக்கலாம். தினசரி 15 நிமிடங்கள் இருந்தால் போதும்.

24 வீட்டில் இடம் இருந்தால், பூச்செடிகள் வளர்க்கலாம். அந்த நறுமணம்கூட மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துதான்.

25 புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டால், இளமை உங்களை விட்டு எங்கே போகப்போகிறது?

இனி...  இளமை இதோ இதோ’தான்...

பரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..? அப்போ இதயும் கவனியுங்க ..

பரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..? 
அப்போ இதயும் கவனியுங்க   ..

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

4. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

5. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்.

6. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

7. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

8. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், மிகுந்த விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

9. முக்கிய பரிகார பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.

10. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.

11. பூஜைக்கு தங்கள் பிறந்த நட்சத்திரம், ஜென்மானுஜன்ம நட்சத்திரம், அல்லது அமாவாசை, பவுர்ணமி,   சித்திரை 1 போன்றவை உகந்தவை.

12. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் தீட்டு  வீட்டிற்கு செல்லாதீர்.

13. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.

14. காலை அணிந்த உடையை மாலை நேர பூஜைக்கு  அணியாதீர்.

15. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பரிகார பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

16.  பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது. அங்கே அதிகம் பேரம் பேச வேண்டாம்.

17.  பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.

18.  நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.

19. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

20. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

21. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.

22. நெய் அல்லது எண்ணையை மற்றவர்கள் விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

23.. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.

24. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.

25. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.

26. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம். 

27. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

28. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

29. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.

30. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.

31. கஜ பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

32. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

33. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

34. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.

35. சங்கல்பம் மிக முக்கியம்.

36. கோபுர தரிசனம் கோடி நன்மை.

37. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக அவரருகே சென்று மனதினுள் 'சிவயநம' என முடியும் அளவு கூறி வழிபடுவதே நன்று . அவர் ஆழ்ந்த சிவ தியானத்தில் எப்போதும் இருப்பவராதலால் கையை தட்டவோ சொடுக்குப் போடவோ வேண்டாம்.

38. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.

39. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

40. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

41.தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 35 வயதிற்குள் செய்து விடுங்கள்.

42. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.

43. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே முறையான பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.

44. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்...

ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி தெரியுமா?

ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி தெரியுமா?

 தீபாவளி என்பது நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படும் மிகவும் புகழ்பெற்ற ஒரு பண்டிகையாகும். இந்தியர்கள் மட்டுமின்றி உலகமே இணைந்து கொண்டாடும் ஒரு சிறப்பான நாள் தான் தீபாவளி திருநாள்.

💣 இந்தியாவில் இந்த நாளை ஒரு நாள் மட்டும் கொண்டாடுகின்றனர். ஆனால் இந்தியாவின் வட பகுதியில் இந்த நாளை ஐந்து நாள் கொண்டாடுகின்றனர்.

💣 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புஜைகளும், வழிபாடுகளும் நடத்தி ஐந்து நாட்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

💣 தீபாவளியின் முதல் நாளன்று, பசுமாடு வழிப்பாடு நடத்தப்படுகிறது. நிராசை அடைந்து மறைந்த வேனா அரசரின் புதல்வனான ப்ரித்து அரசன், தன் தந்தையின் தவறான ஆட்சிக்கு ஈடு செய்யும் வகையில் பசுவாக குறிக்கப்படும் கடவுளிடம் ஆசீர்வாதம் பெறுமாறு புமியில் இருந்து கோரினான் என புராணம் கூறுகிறது.

💥 இரண்டாம் நாள் தான் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் முதல் நாள் தீபாவளியாகும். இந்த நாளை தன்டேராஸ் என கூறுவார்கள். தங்கம் மற்றும் பிற வடிவில் சொத்து வாங்க இந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.

💥 மூன்றாவது நாளை, நரக சதுர்தசி என அழைப்பார்கள். இது நரகாசுரனின் அழிவை குறிப்பதாகும். தீய சக்தியை நல்ல சக்தி அழித்ததை இந்த நாள் குறிக்கும்.

🎉 நான்காவது நாளன்று லக்ஷ்மி தேவி வழிபாடு செய்யப்படும். லக்ஷ்மி தேவியை வீட்டிற்கு வரவேற்க வீட்டில் விளக்குகள் ஏற்றப்படும்.

🎉 ஐந்தாவது நாளை கோவர்தன் புஜை என்று அழைப்பார்கள். தன் சக மனிதர்களை வெள்ளத்தில் இருந்தும், மழையில் இருந்தும் காப்பாற்ற கோவர்தன மலையை கிருஷ்ண பரமாத்மா தூக்கியத்தைக் குறிப்பதே இந்த நாளாகும்.

🎉 தீபாவளி திருநாளில் புஜைகளும், வழிபாடுகளும் செய்து தீப திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்...

வெள்ளி, 28 அக்டோபர், 2016

எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்?

எந்த நாளில் எண்ணெய்
தேய்த்து குளிக்கலாம்?

உலகம் இன்று
சென்றுகொண்டிருக்கும்
வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல்
நமது பழக்க வழக்கங்கள்
அழிந்துகொண்டே வருகிறது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதையும் அதில்
சேர்த்துகொள்ளலாம்.
ஏனெனில் இன்றைய தலைமுறையினரை
பொருத்தவரை எண்ணெய்
தேய்த்து குளிப்பது என்பது தீபாவளிக்கு
மட்டுமே.
ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு
சனிக்கிழமை வந்தால் அனைவரின் வீட்டிலும்
எண்ணெய் குளியல்தான். சரி,
தீபாவளி அன்று மட்டும் எண்ணெய்
தேய்த்து குளித்தால் நன்மை ஏற்படுமா?
என்றால் கண்டிப்பாக இல்லை.
எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது
உடலுக்கு குளிர்ச்சியை மட்டும் தராமல்
உள்ளத்துக்கு புத்துணர்ச்சியையும்
அளிக்கக்கூடியது.
சரி எந்தெந்த தினங்களில்
எண்ணெய் தேய்த்து குளிப்பது.
பொதுவாக நம்மில் பலருக்கும்
ஞாயிறன்று விடுமுறை என்பதால் அன்று
எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர்.
ஆனால் அது தவறு. "ஞாயிற்றுகிழமை கழுதை
கூட எள்ளு காட்டு பக்கம் போகாது'' என்பது
பழமொழி. சனி நீராடு என்பதும்
பழமொழி. நீங்கள் பிறந்த
நட்சத்திரம், திகதி, கிழமைகளில், குளிக்க கூடாது
என்பது ஐதீகம்.
பொதுவாக, ஆண்கள் புதன்
மற்றும் சனி கிழமைகளில் குளிப்பது உசிதம்.
ஏனென்றால் சனி பகவான் அசதி,
சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி.
எனவே எண்ணெய் குளியல் முடிந்த பின்
மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும்,
உறக்கமும் ஏற்படும்.
இதே போன்று பெண்கள் செவ்வாய்
மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி
அதிகம் தேவை.
மேலும் செவ்வாயும், வெள்ளியும்
பெண்களுக்கு உகந்த கிரகங்களின்
நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில்
பெண்கள் எண்ணை தேய்த்துக் குளித்தல்
நலம். இதேபோல் காலை 8 மணிக்கு முன் மற்றும்
மாலை 5 மணிக்கு பின் எண்ணெய்
தேய்த்து குளிக்க கூடாது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால்
ஏற்படும் நன்மைகள் என்ன?
நமது உடலில் சூடு அதிகரிப்பதால் பல
பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், வேனல்
கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு
போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது
இயல்பு.
எனவே, வாரத்திற்கு இருமுறை எண்ணெய்
தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட
பிரச்னைகளில் இருந்து
தற்காத்துக்கொள்ள முடியும்.
உடலில் எண்ணெய்யை நன்றாக
அழுத்தி தேய்ப்பதன் மூலம் தோலில் உள்ள மேல்
அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல
விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும்,
நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க்
குளியல் நீக்கிவிடுகிறது. குறிப்பாக உடலில்
பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச்
செயல்பட வழி ஏற்படுகிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால்
தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல்
உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக்
குளிப்பது மிகவும் அவசியம்.
மேலும், எண்ணெய் தேய்த்துக்
குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. உடலில்
சூடு குறைவதால் மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
எனவே எண்ணெய் தேய்த்து குளிப்பது
என்பது உங்களின் உடலையும் உள்ளதையும்
எப்போதும் ஆரோக்கியமாக
வைத்துக்கொள்ள உதவுகிறது.

நன்றி விசர் நியூஸ்.