வெள்ளி, 22 ஜூன், 2018

இந்திய அஞ்சல்துறை பொன்மகன் பொதுவைப்பு நிதி சேமிப்பு திட்டம்



இந்திய அஞ்சல்துறை பொன்மகன் பொதுவைப்பு நிதி சேமிப்பு திட்டம்

12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் தபால் அலுவலகங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு கிடைக்கும் வகையில் 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகளுக்கு மேல் துவங்கப்பட்டுள்ளது  இந்நிலையில், ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பில் இருந்து தபால் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் அஞ்சல் துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பி.சி.எப். என்ற திட்டத்தை புதுமைப்படுத்தி ‘பொன் மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்த பட்சம் ரூ.100 பணம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.500 முதல் அதிகபட்ச முதலீடாக ரூ.1½ லட்சம் வரை சேமிக்கலாம்.
3-வது ஆண்டில் இருந்து கடன் வசதி
இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 7.9 சதவீதம் வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. கணக்கு தொடங்கிய உடன் 3-வது ஆண்டில் இருந்து கடன் வசதியும் உள்ளது. கணக்கு தொடங்கியதில் இருந்து 7-வது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. அதிகப்பட்டமாக ஒரு ஆண்டுக்கு ரூ.1½ லட்சம் வரை செலுத்தினால் 15 ஆண்டுகளுக்கு பின் அதன் முதிர்வு தொகை அதிகப்பட்சமாக ரூ. 47 லட்சம் வரை கிடைக்கும். அந்த தொகையை எடுக்காமல் அந்த கணக்கை கூடுதலாக ஒவ்வொரு 5 ஆண்டு காலமாக நீட்டிப்பு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும். இந்த வைப்பு நிதி திட்டத்தில் இணைய ‘பி’ -பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம்.


பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள "பொன்மகன் சேமிப்பு திட்டம்" மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் "பொன்மகன் பொது வைப்பு நிதி" திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.
தற்போது முதிர்வு தேதிக்கு முன்பாக பணம் எடுக்க விரும்பினால், குறைந்தபட்சம், பணம் செலுத்திய தொடக்க தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

8.7 சதவீதம் வட்டி:

இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்திற்கு 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படும். 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கார்டியன் உதவியோடும், 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் தானாகவும் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்
.
வயது வரம்பு கிடையாது:

இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. குறைந்த பட்சம் ரூபாய் 100 பணம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

15 ஆண்டுகள் வரை:

கணக்கு தொடங்கியதில் இருந்து 7 ஆவது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
முன்னாடியே பெற்றுக் கொள்ளலாம்:
இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.

உரிய காரணம் தேவை:

அதேசமயம், பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கான உரிய காரணத்தை கூற வேண்டும். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக