சனி, 23 ஜூன், 2018

பிள்ளைகள் எதிர்த்து பேசட்டும் !!


பிள்ளைகள் எதிர்த்து பேசட்டும் !!

குழந்தைகளை சக மனிதனாக பார்க்கும் எண்ணம், மிருக குணத்திற்கு சமம்! இது, போட்டியாளர்களாகவும் அவர்களை பார்க்க வைக்கும். இதை தவிர்க்கவே, நாசுக்கான முறையில் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தி, மரியாதை, அன்பு என்றெல்லாம் அதற்கு பெயரிட்டு ஊக்குவிக்கிறோம். இது, குழந்தைகளை எளிமையாக கையாள்வதற்கான தந்திரமாகும்! இதன்மூலம், குழந்தைகள் கீழ்படிய வேண்டும்; சொன்ன பேச்சை கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மீறினால், என்ன தைரியம்; என்ன துணிச்சல் என்று அங்கலாய்க்கிறோம்.

மனிதனின் வளர்ச்சியே மாற்றம்தான். ‘நம்மை விட நம் சந்ததியர் விவரமானவர்கள்’ என்று நாம் உணர வேண்டும். மாற்றுக்கருத்துக்கு ஊக்கமளிக்கும் போதுதான், கருத்துச் சுதந்திரம் உயிர்பெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, பிள்ளைகளை பேச அனுமதிக்க வேண்டும்; எதிர்த்துப் பேசவும்!

பிள்ளைகள் எதிர்த்துப் பேசுகிறார்களா? முழுமையாக கேளுங்கள். அர்த்தமிருப்பின், உளமாற பாராட்டுங்கள். அப்படிச் செய்யும்போது, எதிர்த்து பேசுவது கருத்து சொல்வதாக உருமாறும். அவர்களை இப்படிப் பேச அனுமதித்தால்தான், அவர்களின் குணம் நமக்குப் புரியும். அவர்களின் தவறுகளை முழுமையாக உள்வாங்கி நம்மால் அவர்களை திருத்த முடியும். என்ன… செய்வீர்களா?

– மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக