திங்கள், 25 ஜூன், 2018

இனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்ட்ரால குடிங்க.ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?

இனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்ட்ரால குடிங்க.ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?

பொதுவாக குளிர்பானங்களை ஸ்ட்ராவில் குடிப்பது ஒரு நாகரீக கலாச்சாரம். ஆனால் இதன் தொடக்கம் 1800ம் ஆண்டு முதல் இருந்து வந்துள்ளது. ஆரம்ப காலத்தில் வைக்கோலில் செய்யப்பட்ட இந்த ஸ்ட்ரா தற்போது பேப்பரில், பிளாஸ்டிக்கில் என்று வெவ்வேறு பொருட்களில் தயாரிக்கப்பட்டு பழக்கத்தில் உள்ளது.
ஸ்ட்ரா என்பது பானங்களை க்ளாசில் இருந்து வாய்க்குள் செலுத்தும் ஒரு சிறிய ட்யுப் வடிவமாகும். நேரடியாக கிளாஸ் அல்லது கப்பில் இருந்து பானங்களை பருகுவதை விட, ஸ்ட்ராவில் பருகுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலும் ஸ்ட்ராவில் பானங்களை பருகுவதை பேஷன் மற்றும் பருகும் பாரம்பரிய முறை என்று தான் பலரும் நினைக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் இருந்து ஸ்ட்ரா பாரம்பரியம் இருந்து வருகிறது. இந்த பாரம்பரியத்துடன் இணைத்து இதன் நன்மைகளையும் நாம் அறிந்து கொள்ளலாம். இதனை தெரிந்து கொண்டதால் தான் இன்றளவும் உலகில் பலர் இந்த ஸ்ட்ராவை பயன்படுத்தி வருகின்றனர்
பற்களின் எனாமல்
ஸ்ட்ரா பயன்படுத்தி பானங்களைப் பருகுவதால் பல் கூச்சத்திற்கான அபாயம் குறைக்கப்படுகிறது. மேலும் எனாமல் சீர்குலைவு தடுக்கப்படுகிறது. மது கலந்த பானங்கள் அசிடிக் தன்மை உடையதாக இருக்கும். இத்தகைய பானங்களைக் குடிப்பதால் மேலே கூறிய பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த வகை பானங்களில் அமில pH அளவு அதிகமாக இருப்பதால் பற்களின் மேல் உள்ள எனாமல் சீர் குலையும்
பற்குழி பாதிப்பில் சர்க்கரை நிறைந்த பானங்களைப் பருகுவதால் இவை பற்களில் ஒட்டி, குழிகள் உண்டாகிறது. ஆகவே ஸ்ட்ரா பயன்படுத்தி பானங்களைப் பருகுவதால் இந்த அபாயம் தடுக்கப்படுகிறது. கிருமிகளின் பாதிப்பால் பற்குழி தோன்றும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆகவே இனிமேல் ஸ்ட்ரா பயன்படுத்தி பானங்களைப் பருகலாம்.
பல் கூச்சம்
பல் கூச்சம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது என்பது ஸ்ட்ரா பயன்பாட்டின் ஒரு முக்கிய நன்மையாகும். ஸ்ட்ரா பயன்படுத்தி பானத்தைப் பருகுவதால் நேரடியாக இந்த பானம் பற்களில் படுவதில்லை. இதனால் கூச்சம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
பற்கள் நிறம்
சில பானங்களைப் பருகுவதால் பற்கள் அந்த பானத்தின் நிறத்தை அடையக் கூடும். குறிப்பாக காபி, டீ போன்றவற்றை தொடர்ந்து பருகுவது பற்கள் நிறமாற்றத்திற்கு வழி வகுக்கும். அதுவே ஸ்ட்ரா கொண்டு பருகுவதால் பற்களுடனான தொடர்பு குறைந்து அதன் நிறம் மாறுதல் தடுக்கப்படுகிறது. இதன்மூலம் பற்களில் ஏற்படும் வேறு சில தொந்தரவுகளும் தடுக்கப்படுகிறது.
பாதுகாப்பை அதிகரிக்கிறது
பாதுகாப்பை அதிகரிப்பது இதன் மற்றொரு நன்மையாகும். ஸ்ட்ரா மூலம் ஒரு பானத்தைப் பருகுவதால், அதனைப் பருகும் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது. இதுவே ஒரு பாதுகாப்பு தன்மை ஆகும். குறிப்பாக மிகவும் சூடாக அல்லது குளிர்ச்சியாக ஒரு பானத்தை ஸ்ட்ரா மூலம் பருகுவதால் மிகவும் குறைந்த அளவு உட்கொள்ளல் எடுத்துக் கொள்வதால் அந்த சூடு அல்லது குளிர்ச்சி உங்கள் வாயை தாக்காமல் காக்கப்படுகிறது
சௌகரியமான பயன்பாடு ஸ்ட்ரா பயன்படுத்தி பருகுவது எப்போது ஒரு வித சௌகரியத்தைத் தரும். கப் அல்லது க்ளாசை பிடித்து சாய்த்து குடிப்பது ஒருவித சிரமத்தை உண்டாக்கும். மேலும், நோயாளிகளும் தங்கள் உடலை எளிதில் அசைக்க மடியாமல் இருப்பவர்களும் பானங்களை எளிதில் பருகுவதற்கு ஸ்ட்ரா பெரிதும் பயன்படுகிறது. மேலே கூறியவை அனைத்தும் ஸ்ட்ரா பயன்படுத்தி பானங்களைப் பருகுவதால் உண்டாகும் நன்மைகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக