செவ்வாய், 19 ஜூன், 2018

வாந்தி வருவது ஏன்? அதனை தடுப்பது எப்படி?

வாந்தி வருவது ஏன்? அதனை தடுப்பது எப்படி?

சிலருக்கு பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளலாமல் வாந்தி வரும்.நாம் உண்ணும் எல்லா உணவுகளிலும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் தற்போது எதிர்பார்க்க முடிவதில்லை. நம்கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் நுண் கிருமிகளால் இந்த ஒவ்வாமை தூண்டப்படுகிறது. இதன் மூலம் வயிற்றில் ஒரு வித கலக்கமும், வாந்தியும் ஏற்படுகிறது.
பலநேரங்களில் நம்மால் வாந்தியை கட்டுப்படுத்த முடியாது. நம் உடலுக்கு தேவையில்லாத ஒன்றை நாம் உட்கொள்ளும் போது உடலிலுள்ள தடுப்பு அமைப்புகள் அவற்றை வாந்தியின் மூலமாக வெளியேற்றுகிறது.
வாந்தி ஒரு பெரிய தொற்றுநோய்க்கான அறிகுறியாகும். உணவில் உள்ள நோய்க்கிருமிகள் எளிதில் கொல்லப்பட முடியாது. அந்த நோய்க்கிருமிகள் வாந்தியைத் தூண்டுகிறது.
பயணத்தின் போது வாந்தி வருவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
சிலருக்கு வெகு தூரம் பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளாது. இதற்கு காரணம் அவர்கள் சிறுவயது முதலே அதிகப்பயணங்கள் செய்திருக்க மாட்டார்கள். இந்த காரணத்தினால் மற்றும்
வயிறு நிறைய சாப்பாடு இருக்கும் போது பேருந்தில் பயணம் செய்யும் போதும் பேருந்தில் காற்று வராமல் இருப்பதினாலும் வாந்தி வர ஆரம்பிக்கும். இதனை தடுக்க ஒரு எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக்கொண்டு செல்லவேண்டும். மற்றும் பெருஞ்சீரத்தையூம் பயன்படுத்தலாம்.வாந்தி மயக்கம் ஏற்படும் போது எலுமிச்சையை வாயில் வைக்க வேண்டும். இதனால் வாந்தி மயக்கம் தடைபட்டுவிடும்.
மற்றும் பச்சாறுகளை அரூந்தலாம். மற்றும் நல்ல. வாசனையுள்ள பூக்களை முகர்ந்து பார்க்கலாம்.
முற்றிலும் வாந்தி நிற்க நெல்லிக்காய் மற்றும் கொய்யா ப ங்களை சாப்பிடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக