வெள்ளி, 22 ஜூன், 2018

பத்து வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலப் பூக்கள்..!

பத்து வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலப் பூக்கள்..!



பத்து வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலப் பூக்கள்..!!

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும், அதுவும் இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலப் பூக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாக, பழனியில் மலர்ந்தன.
பழனி அடிவாரம் தெற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாலன். இவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, கேரளாவில் இருந்து, மிக அபூர்வமாக, பிரம்மக் கமலப் பூச்செடியை வாங்கி வந்து வளர்த்து வந்தார்.
இதனை வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அளவான தண்ணீர் விட்டு, மிகப் பக்குவமாக கேரளாவில் உள்ள சூழ்நிலையில் இருப்பதைப் போன்று வளர்க்க வேண்டும். இந்தச் செடி மிக அபூர்வமானது.
இந்தச் செடியில், பத்து வருடங்களுக்கு ஒரு முறை, ஒரே ஒரு முறை தான் பூக்கள் பூக்கும். அதுவும், அந்தப் பூக்கள் நள்ளிரவில் மட்டும் தான் பூக்கும். அப்படிப் பூக்கும் போது, இதன் மணம் சுற்றி உள்ள ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு, பரவும்.
இதன் நறுமணமும் மிக வித்தியாசமானது. மற்ற எந்த மலரின் வாசனையை இந்த பிரம்ம கமலப் பூக்களுடன் ஒப்பிட முடியாது. இதன் வாசத்தைக் கண்டே, அந்த நள்ளிரவில் கூட அந்தப் பகுதி மக்கள் எழுந்து விடுகிறார்கள். மிக அபூர்வமான மலர் என்பதால் தான், இதற்கு பிரம்ம கமலம் என்று பெயர். தேவலோகத்தில் பூக்கும் மலர் என்று பொருள்.
விடிந்தவுடன், இந்தப் பூக்கள் வாடி விடும். அவ்வளவு தான். மீண்டும், இனி பத்தாண்டுகள் கழித்துத் தான் பூக்கும். பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் கூட நீண்ட நாட்கள் இருக்கும். 
ஆனால், இந்தப் பிரம்மக் கமலப் பூக்கள், 4 மணி நேரம் மட்டும் தான் மலர்ந்து உதிர்ந்து விடும். ரோஜாப் பூ அளவில் பெரிய பூக்களாக, வெள்ளை நிறத்தில் இருந்தன இந்தப் பூக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக