திங்கள், 11 ஜூன், 2018

க்ரீன் டீ குடிச்சா முடி கொட்டுமா?

க்ரீன் டீ குடிச்சா முடி கொட்டுமா?

க்ரீன் டீ உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதில் அதிகப்படியான பயோஆக்டிவ் காம்பவுண்ட் இருக்கிறது. இது ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் நன்மைஅளிக்கக்கூடியது,தற்போது இது உடல்நலத்திற்கு மட்டுமல்ல கூந்தல் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருப்பதாக தற்போது தெரிய வந்திருக்கிறது.
இதிலிருக்கும் ஃபேலவனாய்டு,ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை முடியின் வேர்கால்களை பலப்படுத்தி முடியின் உறுதித்தன்மைக்க உத்திரவாதம் அளிக்கிறது. இதனால் ஆண்கள் இளைமையில் ஏற்படுகிற சொட்டைப் பிரச்சனையை நம்மால் தவிர்க்க முடியும். இப்போது க்ரீன் டீயை எப்படியெல்லாம் நம் முடிக்கு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கடுகுவுடன் :
க்ரீன் டீயில் விட்டமின் சி மற்றும் இ இருக்கிறது இவை கூந்தலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். இது முடிவு உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்தலாம். முடி அதிகமாக உடைவது, சீக்கிரமே வரண்டு போவது ஆகிய பிரச்சனைகளை தவிர்க்க இது உதவிடும். அரைகப் தண்ணீரில் க்ரீன் டீ பேக் போட்டு ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய் அல்லது கடுகுத் தூள் சேர்த்து தலையின் வேர்கால்களுக்கு படுமாறு தலை முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து மைல்ட் ஷேம்பு போட்டு கழுவிடலாம்.

முட்டையுடன் :
இது உறுதித்தன்மையை அதிகரிக்கும். அதோடு தலையில் பூஞ்சான் தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கவும் உதவுகிறது . இதனைப் பயன்படுத்துவதால் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும். அரை கப் க்ரீன் டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அவற்றுடன் முட்டையை சேர்ந்து நன்றாக கலக்குங்கள்.
இரண்டும் சேர்ந்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்க வேண்டும். இதை தலை முழுவதும் தடவி இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து பின்னர் கழுவிடலாம்

எலுமிச்சை சாறு :
க்ரீன் டீ பேகை பிரித்து உள்ளேயிருக்கும் பவுடரை தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவுள்ள எலுமிச்சை சாறு கலந்து பேஸ்டாக்கி அதை ஹேர் பேக்காக பயன்படுத்தலாம்.
இதனை வாரம் ஒரு முறை என தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வரண்ட முடி இருக்கிறது என்றால் இதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தேன் :
தேன் உடல் ஆரோக்கியத்திற்கு சருமத்திற்கு என்னென்ன நன்மைகள் தருகிறது என்பதை பல கட்டுரைகளில் படித்து தெரிந்திருப்போம். அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் முடியுதிர்வை தடுகக்கூடியது. பொடுகுப் பிரச்சனை இருப்பவர்கள் இதனை பின்பற்றலாம். தேனில் க்ரீன் டீ தூளை கலந்து ஹேர்பேக்காக போடுங்கள். வேண்டுமானால் அதில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் :
க்ரீன் டீ தலையில் இருக்கிற செல்களுக்கு எல்லாம் பெரிதும் உதவிடுகிறது. இதைத் தவிர க்ரீன் டீயில் இருக்கக்கூடிய பாலிஃபினால் விட்டமின் இ மற்றும் சி போன்றவை முடியின் நிறத்திற்கும் தன்மைக்கும் துணை நிற்கிறது. அதிகமான முடியுதிர்வு பிரச்சனை, தலையில் ப்சொரியாசிஸ், நீண்ட நாட்களாக பொடுகுத் தொல்லை கொண்டிருப்பவர்களுக்கு இது சிறந்த மாற்றாக அமையும்.
Third party image reference
என்ன இருக்கிறது : 
க்ரீன் டீயில் பல முக்கியமான மின்ரல்ஸ் மற்றும் காம்ப்பவுண்ட்ஸ் இருக்கிறது.குறிப்பாக கரோடினாய்ட்ஸ், டேகோப்ஹ்ரோல்ஸ்,ஹிங்க், க்ரோமியம்,அஸ்கோர்பிக் அமிலம்,செலினியம் மற்றும் மக்னீசியம் இருக்கிறது. இவை அனைத்துமே நம் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும்.
க்ரீன் டீயில் மிக முக்கியமாக இடம்பெற்றிருப்பது பாலிஃபினால். இவை தலையின் வேர்கால்களுக்கு வலுவூட்ட பயன்படுகிறது. இவை எல்லாவற்றை தாண்டி தவறான உணவுப்பழக்கம் மற்றும் ஸ்ட்ரஸ் இருப்பவர்களுக்கு அதிகமாக முடி உதிரும் என்பதால் அவற்றை தவிர்ப்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக