பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி..
உங்களுக்கும் பல சந்தேகங்கள் வரலாம். நீங்கள் வாங்கியிருக்கும் அரிசி, பிளாஸ்டிக் அரிசியா, இல்லையா என்பதை வீட்டில் இருந்தே நீங்களும் பரிசோதிக்க முடியும். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை தீக்குச்சி அல்லது லைட்டர் கொண்டு கொண்டு பற்றவையுங்கள். அப்போது பிளாஸ்டிக் வாசனையை நீங்கள் நுகர்ந்தால், அது பிளாஸ்டிக் அரிசிதான்.
* நன்றாக கொதிக்க வைத்து வேக வைத்த அரிசியை ஒரு பாட்டிலில் அடைத்துக் கொள்ளுங்கள். அதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் யார் கையும் படாதபடி, ஒரு இடத்தில் வையுங்கள். 3 நாட்கள் கழித்து பார்க்கும்போது, அந்த அரிசி எந்தவித பூஞ்சை தாக்குதலுக்கும் ஆளாகவில்லை எனில், முடிவு செய்துவிடுங்கள் அது பிளாஸ்டிக் அரிசியென்று.
*சிறிது அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது சூடான எண்ணெய் ஊற்றுங்கள். அப்போது அரிசி உருகினால் அது பிளாஸ்டிக் அரிசிதான்.
* சாதாரண தண்ணீர் கொண்டு கூட பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்க முடியும். ஒரு பாட்டில் நிறைய தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், ஒரு ஸ்பூன் அரிசியை கொட்டுங்கள். பின் சிறிது நேரம் கலக்குங்கள். அப்போது அரிசி தண்ணீரின் மேலே மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி. ஏனென்றால் இயற்கையான அரிசி ஒருபோதும் தண்ணீரில் மிதக்காது.
* பிளாஸ்டிக் அரிசியை சமைத்தப் பின்னர் சாதாரண அரிசிச்சோறு போல் கையில் ஒட்டாது. எவ்வளவு நேரமானாலும் அரிசிச்சோறு கெட்டுப்போகமால் இருக்கும். அதுமட்டுமல்லாமல், பிளாஸ்டிக் அரிசி என சந்தேகம் வந்தால், அவற்றை சோறாக்கிய பின்னர் பந்துபோல் உருவாக்கி தரையில் போட்டால், துள்ளி குதிக்கும். இதன் மூலமும் பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்க முடியும்.
*பாத்திரத்தில் கொஞ்சமாக அரிசியை எடுத்து கொதிக்க விடுங்கள். அரிசி கொதிக்கும்போது, பாத்திரத்தில் அடர்த்தியான லேயர் படிந்தால் அது பிளாஸ்டிக் அரிசிதான்.
மேற்கூறிய முறைகளில் பிளாஸ்டிக் அரிசியை எளிதாக கண்டுபிடிக்க முடியும். பிளாஸ்டிக் அரிசியால் புற்றுநோய், பிறப்பு குறைபாடு உள்ளிட்ட பல மோசமான நோய்கள் வருமாம். எனவே ஒவ்வொரு முறை அரிசி வாங்க செல்லும் முன் விழிப்புடன் இருப்பது சிறந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக