கூந்தல் பராமரிப்பு
*கூந்தல் பராமரிப்பு என்றவுடன் நமக்கு முதலில் நினைவில் வருவது 'தண்ணீர்''*
இப்பொழுது வெவ்வவேறு தண்ணீர் நாம் தினப்போழுதில் உபயோகிக்கின்றோம் .
*போர் தண்ணீர், கிணற்று தண்ணீர் , corporation water மற்றும் பல .*
ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையுடையது.
*நீரில் உப்பு இருந்தால் முடி கொட்டும்..*
*chemical கலந்திருந்ததால் பளபளப்புதன்மை குறையும்.*
தண்ணீர் கிடைக்காத இந்த காலத்தில் இருக்கும் நீரை உபயோகப்படுத்தும் நிலையில் நாம் உள்ளோம் .
*இந்த நிலையில் நாம் நம் முடி பராமரிக்கும் முறையில் கடைபிடிக்க வேண்டிய நியதிகளை பார்ப்போம் .*
*1. போர் தண்ணீரில்* கடினத்தன்மை இருக்கும் , அதனால் இங்கு வெதுவெதுப்பான நீரை உபயோகப்படுத்த வேண்டும் .
2.போர் thanneeraha இருந்ததால் முடிக்கு கட்டாயம் எண்ணெய் தடவி பின் சீயக்காய் அல்லது மென்மையான (without much lather ) இல்லாத ஷாம்பூ உபயோகிக்கவும் .
*3.கடைசி mug மினரல் தண்ணீர் விட்டுகுளிப்பது நலம்*
4. 2 துளி எலுமிச்சை சாறு அல்லது இருமுறை கொதித்து ஆறிய டீ தண்ணீரை ஒரு mug மினரல் தண்ணீரில் கலந்து அதை கடைசியாக விட்டுக்கொள்ளவும் .
*கிணற்று தண்ணீர் என்றால்*
1. இதில் உப்பு அதிகம் . முடி நிறையவே கொட்டும்,
அதனால் நல்ல தரமான வீட்டில் தயாரித்த herbal oil நிறைய தலையில் தடவி நன்கு ஊறியபின் நல்ல சீயக்காய் கொண்டு முடி அலசவேண்டும் .
2.சீயக்காயிற்கு இந்த கிணற்று நீரில் எண்ணெய் போகாது அதனால் ஒருமுறை நன்கு தேய்த்து அலசியபின் மீண்டும் ஒருமுறை தேய்க்க வேண்டும்..
இல்லையென்றால் சிறிது தரமான ஹெர்பல் ஷாம்பூ உபயோகிக்கலாம் . எண்ணெய் நிறைய தடவவேண்டியது அவசியம்..
3.குளித்தவுடன் தண்ணீர் போக துவட்டி விடவேண்டும்..
*4. இங்கும் கடைசி mug எலுமிச்சை சாரு அல்லது டீ தண்ணீர் விட்டு அலசலாம் .*
*corporation water:*
*இதில் க்ளோரின் கலந்திருப்பதால் முடி dry ஆகும்.*
இங்கும் நாம் எண்ணெய் அதிகம் தடவி ஊறி குளித்தல் நலம்..
வாரம் 3 முறை தலை அலசலாம் .
இங்கு முடி பிரவுன் நிறத்திற்கு விரைவில் மாறி பின் விரைவில் நரைத்துவிடும்..
நல்ல தரமான எண்ணெய் மிக மிக அவசியம்..
*chemical conditionr தவிர்ப்பது நலம்*
ஏனென்றால் இதில் ஆல்கஹால் சேர்ந்திருப்பதால் முடி மெல்லியதாக ஆகிவிடும் விரைவில் ..
*எப்பொழுதும் எலுமிச்சை சாறு அல்லது டீ தண்ணீர் conditioner உபயோஹிப்பது நலம்..*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக