கலக்கல் காஸ்டியூம்ஸ்...
பெண்கள் சிலர் பள்ளி படிக்கும்போதோ அல்லது கல்லூரி படிக்கும்போதோ தையல் பயிற்சி எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பொழுதுபோக்காக நேரத்தை செலவழிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதைத்தாண்டி அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதில்லை. ஆனால் ரேகாஸ் பள்ளியில் காஸ்டியூம் டிசைன், டெக்ஸ்டைல் பிரின்டிங், நெயில் ஆர்ட், பாடிக் மேனேஜ்மென்ட் என்று அனைத்து விதமான ஃபேஷன் டிசைன்களையும் கற்றுக்கொடுத்து மாணவர்களின் திறமைகளை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு பணிகளையும் வழங்கி வருகிறோம்’’. என்று கூறும் ரேகாவின் மாணவிகள் நல்ல வருமானத்தில் சினிமா துறையிலும், சின்னத்திரையிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வருகிறார்கள்.
‘‘தற்போது உள்ள சூழலில் இளம் வயதினர் முதல் முதியவர் வரை புது மாடல்களில் ஆடை அணிவதையே விருப்பப்படுகிறார்கள். நான் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள நாகரிகம், அவர்களின் பண்பாடு, உடை, சிகை அலங்காரங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்த்து வந்து புதிய மாடல்களில் ஆடைகளை எப்படி வடிவமைக்கலாம் என்று மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்.
ஃபேஷன் டிசைன் என்றால் அது பெண்களுக்கான ஒரு துறை என்று சிலர் தவறாக எண்ணுகிறார்கள். என்னுடைய பள்ளியில் ஆண்களுக்கும் வகுப்புகள் துவங்க முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். ஆடைகளின் தேவை இருக்கும் வரை ஆடை ஃபேஷன் டிசைனர்களின் மவுசு குறையவே குறையாது’’ என்கிறார் ரேகாஸ் ஃபேஷன் பள்ளி நிறுவனர் ரேகா.
ரேகாஸ் பயிற்சி பள்ளி நடத்தும் ஃபேஷன் ஷோவிற்கும், தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் மாடலாக பணியாற்றும் நவ்யா சுஜியிடம் பேசினோம். ‘‘இந்தப் பள்ளியில் திருநங்கைகள் பயிற்சி பெறுகிறார்கள். ரேகாவையும் அவரது பள்ளியையும் ஃபேஸ்புக் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். இங்கு இருக்கக்கூடிய மாணவர்களின் கை வண்ணத்தில் வடிவமைக்கப்படும் ஆடைகள் மிகவும் அற்புதமாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் இருக்கின்றன. எங்களை போன்ற மாடல் பெண்களுக்கு ரேகாஸ் பள்ளி மாணவர்களின் கற்பனைத்திறன் கொண்ட ஆடைகள் வரப்பிரசாதம்.
மேலும் இப்பள்ளியின் சூழல் ஒரு பள்ளி போல் இல்லாமல் ஒரு குடும்பமாக இருக்கிறது. இங்கு ஏழை பணக்காரர்கள் என்கிற பாகு பாடு கிடையாது. அனைவரையும் சரிசமமாகவே நடத்துகிறார். சுமார் 4500 மாணவர்களுக்கு மேல் இங்கு பயிற்சி பெற்று பயனடைந்து இருக்கிறார்கள்.
இது வரையிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் புதுப் புது டிசைன்களில் இவர்களது படைப்பாற்றல் வெளிப்படுகிறது. மாணவிகள் மட்டும் அல்லாமல் இங்கு பணியாற்றக்கூடிய அனைவரிடமும் சகோதரிபோல் பழகுகிறார் ரேகா’’. இங்குள்ள மாணவர்களுக்கு ஃபேஷன் ஷோ பயிற்சியாளராக இருக்கும் பாகீரதி கூறுகையில், ‘‘ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இந்த பள்ளியை பார்த்து வருகிறேன்.
மிகச் சிறப்பாகவும் திறமையானவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் ஒரு பள்ளியாக இதை நான் பார்க்கிறேன். எப்படி சம்பாதிப்பது என்று யோசிப்பவர்களுக்கு இந்த பள்ளி சிறந்த வழி என்று கூறலாம். 16 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் இங்கு படித்து பயன் பெற்றிருக்கிறார்கள். வெளி மாநிலத்திலிருந்தும் வந்து படிக்கிறார்கள். ஆடை மட்டும் இல்லாமல் அக்ஸசரிஸ் போன்றவற்றையும் அவர்களே வடிவமைத்துக்கொள்ளும் பயிற்சியும் ரேகா கற்றுக்கொடுக்கிறார்.
முன்பெல்லாம் திருமணம் என்றால் திருமணப் பெண்ணிற்கு மட்டும்தான் ஆடை வடிவமைக்கப்படும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், அந்தக் குடும்பத்தில் அனைவருக்குமே நியூ மாடல் ஆடைகள் அவசியமாகி இருக்கிறது. தலை முதல் கால் வரை எல்லா வித அலங்காரப் பொருட்கள், பாரம்பரிய ஆடைகள் என மாணவிகளே அனைத்தையும் செய்து கொடுக்கிறார்கள். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு புது டிசைன்களில் எல்லா விதமான நிகழ்ச்சிகள், பார்ட்டி டிசைன் ஆடைகள், ஸ்டைலிஷ் ஆடை என மாணவர்களின் கிரியேட்டிவிட்டி ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவே இருக்கிறது” என்கிறார் பாகீரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக