ஞாயிறு, 4 ஜூன், 2017

அழகு குறிப்பு 002


ஆலிவ் ஆயில்*


ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ வளமாக நிறைந்துள்ளது. ஆகவே அதனைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் மற்றும் வாயைச் சுற்றியுள்ள கருமை மறையும்


பாதாம் எண்ணெய்*

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. சருமத்தின் அழகை, நிறத்தை அதிகரிக்க வைட்டமின் ஈ மிகவும் அவசியம்.

 எனவே வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.


உருளைக்கிழங்கு*


தினமும் உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது அதன் துண்டுகளைக் கொண்டோ, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.

 இப்படி செய்து வந்தால், மெலனின் அளவு குறைந்து கருமை நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக