புதன், 7 ஜூன், 2017

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?*


முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?

*ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்?*

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன்,
கசகசா விழுது – 1 டீஸ்பூன்,
சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை…

இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.

 தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள்.

 காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக