அழகு குறிப்புகள்..
பப்பாளி மற்றும் பால்*
சின்ன சின்ன பப்பாளி துண்டுகளை எடுத்து நன்கு மென்மையான பேஸ்ட் ஆகும் வரை அரைத்துக் கொள்ளவும்.
அதோடு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பாலை சேர்க்கவும்.
இவை இரண்டையும் நன்கு கலந்த பின்பு, முகத்தில் அப்பளை செய்யவும். பின் 15 நிமிடம் கழிந்து முகம் கழுவுங்கள்.
இது நல்ல பயன் தரும் ப்ளீச் வகை ஆகும்.
எலுமிச்சை, வெள்ளரி மற்றும் கடலை மாவு*
சில வெள்ளரி துண்டுகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் அதில் எலுமிச்சை ஜூஸை கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையோடு கொஞ்சம் கடலை மாவை சேர்த்து முகத்தில் மாஸ்க் போல அப்பளை செய்யவும்.
இது வீட்டில் உள்ள பெண்கள் பொதுவாக பயன்படுத்தும் சிறந்த பயன் தரும் ப்ளீச் வகை ஆகும்.
குறிப்பு*
ஃபேஷியல் போன்றவற்றை செய்யும் முன், ஷேவிங் செய்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அவை தாடியில் ஓட்டிக் கொண்டு, பின் அதனை போக்குவதில் சிரமம் ஏற்படும்.
*க்ளே மாஸ்க்*
க்ளே மாஸ்க்கை பெண்கள் மட்டும் தான் போட வேண்டும் என்பதில்லை, ஆண்களும் போடலாம்.
அதற்கு கற்றாழை ஜெல்லில், க்ளே, தேன் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்கும்
தயிர் ஃபேஸ் பேக்*
அனைத்து வீடுகளிலும் தயிர் நிச்சயமாக இருக்கும்.
அந்த தயிரைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன், மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, சருமம் ஈரப்பசையுடன் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
ஆரஞ்சு தோல்*
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே இதன் தோலை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இதன் மூலம் பருக்கள் மறையும்.
தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா?*
உண்மையில் தினமும் தலைக்கு குளிப்பது என்பது நல்லதல்ல.
அப்படி தினமும் குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை நீங்கி, முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
*மேலும் வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிப்பது தான் சிறந்ததும் கூட.*
குளிர்ந்த நீர்*
தலைக்கு குளித்த பின்னர், இறுதியில் குளிர்ந்த நீரினால் முடியை அலச வேண்டும்.(if u take hot water bath)
இதனால் தளர்ந்த மயிர்கால்கள் இறுக்கமடைவதோடு, க்யூட்டிகிள்களும் இறுக்கமடைந்து, முடிக்கு ஒரு பொலிவான அதே சமயம் ஆரோக்கியமான தோற்றத்தைக் கொடுக்கும்.
ஒருமுறை போதும்*
தலையில் அழுக்கு அதிகம் உள்ளது என்று இரண்டு முறை ஷாம்பு போட வேண்டாம்.
அப்படி ஷாம்பு போட்டால், அவை தலையில் உள்ள எண்ணெய் பசை அனைத்தையும் முற்றிலும் வெளியேற்றி, ஸ்காப்பின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும்.
எனவே ஒருமுறை ஷாம்பு போடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
முடிந்த வரை சீயக்காய் பயன்படுத்தவும்
ஷாம்பு ஸ்கால்ப்பிற்கு மட்டுமே!*
ஷாம்புவை ஸ்கால்ப்பிற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
முடியின் முனை வரைப் பயன்படுத்தினால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் முடியில் உள்ள இயற்கை எண்ணெய் பசையை நீக்கி, முடியின் முனைகளில் வெடிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
அதுவே ஸ்காப்பிற்கு மட்டும் போட்டு அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் ஸ்கால்ப்பை வறட்சி அடையாமல் தடுக்கும்.
பீர்*
உங்களது முகம் நன்கு பிரகாசிக்க பீரினைக் கொண்டு முகம் கழுவினால் நல்ல பயன் தரும்.
இதை நீங்கள் நாள்தோறும் தொடர்ந்து செய்து வந்தால், நீங்கள் ஒரீரு வாரங்களில் நல்ல மாற்றம் காணலாம்.
வறட்சியான சருமத்திற்கு*
வறட்சியான சருமத்தை இப்போது மதுவின் உதவியோடு சரி செய்யலாம்.
ஒரு டம்ளர் ரம் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் நீர் மற்றும் சர்க்கரையை கலந்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை சுழற்சி முறையில் உங்களது முகத்தில் தேய்த்துக்கொடுங்கள்.
இதுப்போல நாள்தோறும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களது வறட்சியான சருமத்திற்கு டாட்டா சொல்லிவிடலாம்
வோட்கா*
உங்கள் முகத்தில் இருக்கும் மாசு மருக்களை குறைக்க வோட்கா கொண்டு முகம் கழுவினால் நல்ல தீர்வு காணலாம்.
பரு*
முகப்பரு பலருக்கு பெரும் தொல்லையாக இருக்கும் ஒன்று.
ரம்மில் கொஞ்சம் பன்னீர் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
முதலின் முகம் முழுவதும் பன்னீரை அப்பளை செய்துவிட்டு.
பின் கலந்து வைத்திருக்கும் நீரை பருக்களின் மீது அப்பளை செய்யுங்கள்.
இவ்வாறு செய்தால் பருக்கள் குறையும்.
முகம் பொலிவடைய ரம்!
ரம்! என்றாலே கிக்கு தான் ஞாபகம் வரும். இனி உங்களுக்கு முகம் பொலிவடைய வேண்டுமெனில் ரம் தான் ஞாபகம் வர வேண்டும்.
ஆம், ரம்மை தண்ணீரோடு கலந்து அதில் பஞ்சை நனைத்து முகத்தில் தொட்டு எடுத்து மசாஜ் போல செய்து வர வேண்டும்.
பின் பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும்.
இதை வாரம் இருமுறை செய்து வந்தால், முகம் பொலிவடையும்.
புள்ளிகள்கள் நீங்க!*
உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க மது வகைகளில் பீர் சிறந்த ஒன்று என கூறப்படுகிறது.
பீரைக் கொண்டு உங்கள் முகத்தில் சுழற்சி முறையில் மென்மையாகத் தேய்த்து வந்தீர்கள் என்றால் கரும்புள்ளிகள் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக