ஜெ.,விற்கு நிகரான செல்வாக்கில் பன்னீர் : அதிர்ச்சியில் சசிகலா! விகடன் கருத்து கணிப்பு :
பாரம்பரிய வார இதழான விகடன் இதழ் ஒரு மெகா சர்வேயை நாடு முழுவதும் நடத்தியது.
அதில் கிடைத்த ஆச்சரியம் பன்னீருக்கு மக்கள் மீது இருக்கும் மரியாதை, அனுதாபம், இவை எல்லாம் சேர்ந்து அமோக ஆதரவை அள்ளிக் கொடுத்திருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா?! பன்னீரை விட மிக மிக குறைந்த ஆதாரவைத் தான் ஸ்டாலின் பெற்றுள்ளார்.
இந்தக் கருத்துக் கணிப்பை பற்றி அரசியல் பார்வையாளர்கள் ஜெ.,விற்கு ஆரம்பகாலத்தில் இருந்த ஆதரவை பன்னீருக்கும் மக்கள் கொடுத்திருப்பது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது.
ஜெ., இறந்த பின் பன்னீருக்கு சமூகவளை தளங்கள் கொடுத்த ஆதரவை அவர் அப்போதே பயன்படுத்தி இருந்தால் இன்னும் கம்பீரமாக இருந்திருப்பார் என்கிறார்கள்.
விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில், தமிழக அரசியல்வாதிகளுக்கு கிடைத்திருந்த ஆதரவு விவரப் பட்டியல் இதுதான்.!
ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க) 16.75 %
மு.க.ஸ்டாலின் (தி.மு.க) 12.91 %
தீபா (எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை) 5.09 %
விஜயகாந்த் (தே.மு.தி.க) 4.27 %
அன்புமணி ராமதாஸ் (பா.ம.க) 4.07 %
சீமான் (நாம் தமிழர் கட்சி) 3.53 %
கருணாநிதி (தி.மு.க) 3.38 %
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 1.84 %
எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க) 1.49 %
வி.கே. சசிகலா (அ.தி.மு.க) 0.94 %
வைகோ (ம.தி.மு.க) 0.93 %
முன்னாள் முதல்வர் பன்னீர் மீது மக்கள் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டுள்ளதாகவே இந்த மெகா கணிப்புகள் கூறுகின்றன.
இதை மிகச் சரியாக பயன்படுத்தினால் ஜெ., கட்டிக் காத்த அதிமுகவை காப்பாற்றிவிடலாம் என்பதே தொண்டனின் எதிர்பார்ப்பு.
வாழ்த்துக்கள் ஓபிஎஸ் சார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக