தேனின் மருத்துவப் பயன்கள்
தேன் குடிப்பது குளவிகளுக்கு மட்டும் உவப்பானதல்ல. யானைகள் கரடிகள் முதலான மிருகங்கள் முதல் மனிதர்களான நாமும் அதன் இனிய சுவையில் மகிழ்கின்றோம்.
தேன் போசாக்குள்ள பதார்த்தமும் கூட.
அதன் சிறப்பு சுவையுடன் மட்டும் முடிவடைவதல்ல, மருத்துவ குணங்களும் நிறைந்தது என இயற்கை மருத்துவம் கொண்டாடுகின்றது.
அது எமது பாரம்பரிய வைத்திய முறைகளிலும் வீட்டு வைத்தியத்திலும் தேன் நிறையவே பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்லது என நம்புகிறோம். பண்டைய காலம் முதல் தேன் காயங்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
கிறீக் மற்றும் ரோம நாடுகளில் இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டிருப்தை அறிய முடிகிறது. வேத காலத்திலும் இஸ்லாமிய கலாசாரத்திலும் இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. அரிஸ்டோடில் தேனின் சிறப்புப் பற்றி (384 – 322 BC) காலத்திலேயே சொல்லியுள்ளார்.
இருந்தபோதும் இவை யாவும் வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவே கொள்ள வேண்டும். அதற்கு மேலாக விஞ்ஞான பூர்வ ஆராய்வுகளால் கண்டறியப்பட்ட மருத்துவ குணங்கள் ஏவையேனும் தேனுக்கு உள்ளதா?
விஞ்ஞான பூர்வ தகவல்கள்
உரசல் காயங்களுக்கும், ஆழமற்ற வெட்டுக் காயங்களுக்கும், சீழ்ப் பிடித்த புண்களுக்கும் மருந்தாக உதவக் கூடியது தேன் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
இருந்தபோதும் ஆழமான புண்களுக்கும் பூச்சிக் கடிகளால் ஏற்பட்ட புண்களுக்கும் ஏற்தல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் நாளப்புடைப்பு நோயால் (Varicose ulcer) எற்படும் புண்களுக்கும் ஏற்றதல்ல. இத்தகைய புண்கள் குணமடைவதைத் தேன் தாமதிக்கச் செய்யும் என்று கண்டறிந்துள்ளார்கள்.
மிகக் கடுமையான சில வகை தொற்றுகளைத் (MRSA) தணிக்க தேன் உதவும் என சில ஆய்வுகள் கூறியுள்ளன.
புண்கள் குணமாவதற்கு தேன் எவ்வாறு உதவுகிறது?
தேன் புண்களின் வலியைக் குறைக்கிறது.
ஆறுதல் அளிக்கும் உணர்வைக் கொடுக்கின்றன.
புண்களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்றவை விரைவில் கரைய வைத்து புதிய ஆரோக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன.
புண் குணமாகியதும் விரைவில் ஆரோக்கியமான தோல் மேவி வளர்வதற்கு உதவுகின்றன.
தேன் அசிடிக் தன்மையானது அதன் Ph வலு 3.2 முதல் 4.5 ஆகும். இது கிருமிகள் பெருகுவதைத் தடுக்க உதவுகிறது.
இவைதான் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளாகும். புண்கள் விரைவில் குணமாக இவற்றை விட வேறென்ன தேவை?
தேன் எவ்வாறு குணமாக்குகிறது
புண்ணைக் குணமாக்குவதற்கு தேனில் உள்ள எத்தகைய அம்சங்கள் உதவுகின்றன எனக் கேட்கிறீர்களா?
1. தேனில் உள்ள சீனியின் அதிக செறிவுத்தன்மையும், குறைந்த ஈரலிப்புத் தன்மையும் கிருமிகளை அண்டவிடாது தடுக்கின்றன.
2. இத்துடன் தேனில் உள்ள குளுக்கோனிக் அமிலத்தால் (Gluconic acid) உண்டாகும் அமில ஊடகமும், அதிலுள்ள ஐதரசன் பெரோக்ஸைடும் இணைந்து சீழ்ப் பிடிக்க வைக்கும் கிருமிகள் பெருகுவதைத் தடுக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கிருமி தொற்றிச் சீழ்ப்பிடித்த புண்களுக்கு தேன் இட்டு சிகிச்சை செய்தபோது அதிலுள்ள கிருமிகள் 3முதல்10 நாட்களுக்குள் முற்றாக அழிந்து கிருமிப்பற்றற்ற புண்களாக மாறியதாக மூன்று வௌ;வேறு ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.
3. அத்துடன் புண்ணிலுள்ள வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றலும் தேனுக்கு உள்ளது.
புண்ணைக் குணமாக்க எவ்வளவு தேன் தேவை
சரி. புண்களைக் குணப்படுத்த எவ்வளவு தேன் இடவேண்டும். மெல்லிய படையாக இட்டால் போதும் என இரு மருத்துவ அறிக்கைகள் கூறின. ஆயினும் ஏனைய பல மருத்துவ அறிக்கைகள தாராளமாகத் தேன் இடுவது பற்றியும் இன்னும் சில புண்களின்மேல் தேனை ஊற்றியதாகவும் கூறின.
எனவே எவ்வளவு தேன் இடவேண்டும் என்பது பற்றி தெளிவான, கருத்தொருமைப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. புண் உலர்ந்து உலர்ந்து போகாத அளவிற்கு தேனின் அளவு இருந்தால் போதும் என்பது அறிவு பூர்வமான கருத்தாகும்.
தேனினால் புண்களைச் சுத்தமும் செய்யலாம்
பொதுவாக மருந்து கட்டும்போது சேலைனினால் அல்லது பொவிடின் போன்ற மருந்துகளால் முதலலில் சுத்தம் செய்கின்றோம். இதற்குப் பதிலாக தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின் அதனையே இட்டு மருந்து கட்டலாம்.
நெருப்புச் சுட்ட புண்கள்
நெருப்புச் சுட்ட புண்களுக்கும் தேன் மிகவும் சிறந்ததாகும். நெருப்பு, சுடுநீர், கொதி எண்ணெய் போன்றவற்றால் ஏற்படும் சூட்டுக் காயங்களுக்கு உடனடியாகத் தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குணமாகும்.
வாய்ப் புண்கள்
வாய்ப் புண்களையும், முரசு கரைதலையும் தேன் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. நியுசீலந்தில் வளரும் மனுக்கா (Manuka plant) என்ற தாவரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை இனிப்புப் பண்டம் வாய்ப்புண்களையும் முரசு கரைதலையும் மாற்றுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன.
20ம் நூற்றாண்டின ஆரம்பத்தில் (1940 களில்) நுண்ணுயிர் கொல்லி (Antibiotics) மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டிரா விட்டால் இன்று புண், காயம், மற்றும் சத்திர சிகிச்சை தேவைகளுக்கான முக்கிய பொருளாக தேன் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.
பிள்ளைகள் மருந்து கட்டுவதென்றால் அலறியடித்து ஓடுவது வழக்கம். முதலில் வாயில் சற்று தேனை ஊட்டிவிட்டு, தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்டுவதென்றால் தாங்களாகவே ஓடி வருவார்கள் என்பது திண்ணம்.
தேனின் வேறு மருத்துவப் பயன்கள்
தேனானது இரைப்பை அமிலங்கள் மேல் எழுவதைத் (Gastroesophageal reflux) தடுக்க உதவும் என காட்மண்டுவைச் சார்ந்த பேராசிரியர் ஆயாயவெயலலய ஏ ஆயவா பிரபல மருத்துவ சஞ்ச்சிiயான டீஆது யில்; எழுதியுள்ளார்.
குழந்தைகளில் ஏற்படும் வயிற்றோட்ட நோய்களுக்கு தேன் உதவும் என Mahantayya V Math gpugy யில்; எழுதியிருந்தனர். பக்றீரியா கிருமிகளால் ஏற்படும் வயிற்றோட்ட நோய்கள் குணமாவதை தேன் துரிதமாக்கும் என்பதே அவரது முக்கிய கருத்தாகும்.
மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்று கூறவில்லை.
குழந்தைகளைத் தொல்லைப்படுத்தும் இரவு இருமலைத் தணிக்க தேன் உதவும் என journal Pediatrics சில் ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. “ஏனைய இருமல் மருந்துகளை விட குழந்தைகளின் இரவு இருமலையும் அதனால் ஏற்படும் தூக்கக் குழப்பத்தையும் தணிக்க தேன் உதவியது” என சில பெற்றோர்கள் குறியதாக மேலும் தெரிவித்திருந்து.
சில வகை ஒவ்வாமைகளுக்குத் தேன் உதவும் எனச் சொல்லப்பட்டபோதும் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேனின் சிறப்பு அம்சங்கள் எவை?
சுத்தமான தேன் என்றுமே பழுதடையாது. பிரிட்ஸில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.
மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ரட் மன்னரின் (King Tut) கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புராதன காலத் தேனானது, இன்றும் உண்ணக் கூடிய நிலையில் சற்றும் பழுதடையாது இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேனின் போஷனை
தேனில் உள்ள .இனிப்பின் பெரும்பகுதி பழங்களில் இருந்து கிடைக்கும் புரக்டோஸ் (Fructose) வகையைச் சார்ந்தது. இதனால்; நாம் வழமையாகப் பாவிக்கும் சீனியை விட 25 சதவிகிதம் இனிப்புக் கொண்டது.
ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்தசைகளின் இயக்கத்திற்கான சக்தியை வழங்குகிறது. தேனில் 17.1 சதவிகித நீர்ப்பற்றே உண்டு. மிகுதி 82.4 சதவிகிதமும் மாச்சத்தாகும். இந்த மாச்சத்துத்தான் இனிப்பாக எமக்குக் கிடைக்கிறது. அதிக கலோரி வலு காரணமாக நீரிழிவு நோயாருக்கு உகந்தது அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மிச்சமுள்ள 0.5 சதவிகிதம் மட்டுமே புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்தாகும்.
கொழுப்புச்சத்து, கொலஸ்டரோல் ஆகியன அடியோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாப்பொருளில் பழவகை இனிப்பான புரக்டோஸ் 38.5 சதவிகிதமாகும் (fructose 38.5%). . குளுக்கோஸ் 31 சதவிகிதமாகும். மிகுதி 12.9 சதவிகிதம் மோல்டோஸ், சுகுரோஸ் போன்ற ஏனைய சீனிவகைகளாகும். இதனால் விரைவில் ஜீரணமடையும் தன்மை கொண்டது.
பக்கவிளைவுகள்
தேன் பொதுவாகப் பக்க விளைவுகள் அற்ற பொருளாகும். தேனுக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படுவது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேனீ பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படாலாம் என எதிர்பார்த்தாலும் அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.
ஆதாரமற்ற நம்பிக்கை
“தேனுடன் தண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் மெலியுமாமே” என ஒரு நோயாளி என்னிடம் கேட்டார். இது பற்றி மருத்துவ இணைய தளங்களில் தேடியபோது அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் தேனில் 82.4 சதவிகிதமும் மாச்சத்துள்ளது என்ற தகவலை வைத்து விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்க ரீதியாகும் சிந்தித்தால் இதில் எந்தவித உண்மையும் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. வெற்று நம்பிக்கைளை ஆதாரமாகக் கொண்டு மருத்தவ விடயங்களில் தீர்மானிக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.
நன்றி.. ஹாய் நலமா ப்ளாக்கர்
இயற்கையாக வளும் தேன் கூடுகளை அழிக்க வேண்டாம்...
🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
இனிக்கும் செய்தியல்ல....!
🐝தேனீ...
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.
🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?
முதலில்... ஆச்சரியம்.
🐝தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.
🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.
🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.
🐝யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.
🐝இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.
ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...
🐝அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.
🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான்.
🐝ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.
🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.
🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ.
🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.
🐝 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும்.
🐝ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.
🐝இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.
🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.
🐝ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.
🐝மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.
🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.
🐝தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.
🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.
🐝ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.
🐝கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.
🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.
🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.
🐝அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?
🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.
🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.
🐝அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.
🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.
🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.
🐝கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.
🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.
🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.
🐝இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.
🐝தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.
🐝அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !
🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.
🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.
அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.
🐝புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும்.
🐝அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.
🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.
🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.
🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.
🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
🐝சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.
🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.
🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.
🐝இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.
🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.
🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''
🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''
🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
🐝இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.
🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.
🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.
🐝ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.
🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.
🐝பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.
🐝அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.
🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.
🐝இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.
🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள்.
🐝அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.
🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.
🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.
🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.
🐝அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.
🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.
🐝பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.
🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்
எனவே இயற்கையாக வளரும் தேன் கூடுகளை அழிக்க வேண்டாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக