நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!!
இந்தியாவில் கோடைக்காலத்தில் தெருக்களில் விற்றுக் கொண்டு வரும் பழங்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற
நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. மேலும் உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.அதிலும் கோடையில் அதிகப்படியான வெப்பத்தினால் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்போது நுங்கு சாப்பிட்டால், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். இதுப்போன்று நுங்குவில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
1.எடையை குறைக்கும் :
கோடையில் மிகவும் ஈஸியாக உடல் எடையைக் குறைக்கலாம். ஏனெனில் இக்காலத்தில் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதில் ஒன்று தான் நுங்கு சாப்பிடுவது. நுங்கு சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரானது வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.
2.மார்பக புற்றுநோய் :
நுங்குவில் ஆந்தோசையனின் என்னும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இவை மார்பக புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி கொண்டவை.
3.சின்னம்மை :
சின்னம்மை வராமல் தடுக்க வேண்டுமானாலும் சரி, வந்த சின்னம்மையை விரைவில் குணப்படுத்தவும் சரி, நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
4.வெயிலால் ஏற்படும் மயக்கம் :
சிலருக்கு வெயிலில் செல்லும் போது அடிக்கடி மயக்கம் போடுவார்கள். அத்தகையவர்கள் நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, மயக்கம் ஏற்படுவது குறையும்.
Aska Svn
5.கர்ப்ப காலம் :
கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
6.நீர்ச்சத்தை அதிகரிக்கும் :
நுங்குவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே கோடையில் உடலில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நுங்கு சாப்பிடுங்கள்.
7.வயிற்று பிரச்சனைகள் :
வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க வேண்டுமானால், நுங்கு சாப்பிடுங்கள்.
8.சோர்வு :
கோடையில் விரைவில் சோர்வடைந்துவிடுவோம். இத்தகைய சோர்வை நுங்கு சாப்பிட்டால் தடுத்துவிடலாம்.
9.செரிமான பிரச்சனைகள் :
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், நுங்கு சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைத்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
10.மலச்சிக்கல் :
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் நுங்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
11.கல்லீரல் பிரச்சனை :
கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நுங்கு பெரிமும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
12.உடலை குளிர்ச்சியாக்கும் :
கோடையில் உடலின் வெப்பமானது அதிகரிக்கும். இத்தகைய வெப்பத்தை நுங்கு சாப்பிடுவதன் மூலம் தணிக்க முடியும்.
13.வியர்குரு :
நுங்கு சாப்பிட்டால், உடல் வெப்பம் குறைந்து, உடலில் வந்துள்ள வியர்குரு போய்விடும்.
14.வெயில் கொப்பளம் :
கோடையில் பலருக்கு வெயில் கொப்பளம் வரும். இத்தகைய கொப்பளத்தை வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுங்கள்.
15.குமட்டல் :
குமட்டல் உணர்வைத் தடுக்க எலுமிச்சை உதவவில்லை என்றால், நுங்கு சாப்பிடுங்கள். இது குமட்டலைத் தடுக்கும்.
16.ஆற்றலை அதிகரிக்கும் :
நுங்குவில் உள்ள சரியான கனிமச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும், உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து, உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவிப்புரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக