புதன், 22 மார்ச், 2017

2017ம் ஆண்டின் மிகச்சிறந்த சுற்றுலா பயண இடமாக பாலி தேர்வு



2017ம் ஆண்டின் மிகச்சிறந்த சுற்றுலா பயண இடமாக பாலி தேர்வு
இந்த ஆண்டு, பாலி உலகின் சிறந்த சுற்றுலா பயண இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. லண்டன் இரண்டாமிடத்திற்கும், பாரிஸ் மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட பயணிகளின் விரும்பும் சிறந்த 10 சுற்றுலா பயண இடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்தோனேசியாவை சேர்ந்த பாலி தீவு உலகின் மிகச்சிறந்த சுற்றுலா இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
இதுவரை பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் ஹாட் ஸ்பாட்டாக விளங்கிய லண்டனை பின்னுக்கு தள்ளி பாலி முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்துக்கு லண்டனும், மூன்றாவது இடத்துக்கு பாரிசும் தள்ளப்பட்டுள்ளது.
இந்த பயணிகள் சாய்ஸ் விருது, ஏற்கனவே விருது பெற்றவர்கள் வருடத்தில் ஒரு தடவை கூடி சுற்றுலா பகுதிகள் குறித்து விவாதித்தும், விமர்சித்தும், அந்த பகுதியில் உள்ள வசதிகள், உணவகங்கள், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் அதன் தரம் குறித்தும் விவாதித்து ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

முதல் 10 இடங்களை பிடித்த சுற்றுலா இடங்கள்
1) பாலி (இந்தோனேசியா) 1. Bali, Indonesia
2) லண்டன் (யுகே) 2. London, UK
3) பாரிஸ் (பிரான்ஸ்) 3. Paris, France
4) ரோம் (இத்தாலி) 4. Rome, Italy
5) நியூயார்க் (யுஎஸ்ஏ) 5. New York, USA
6) கிரிட் (கிரீஸ்) 6. Crete, Greece
7) பார்சிலோனா (ஸ்பெயின்) 7. Barcelona, Spain
8) சியாம் ரிப் (கம்போடியா) 8. Siem Reap, Cambodia
9) பிரக் (கிரிச் குடியரசு) 9. Prague, Czech Republic
10) புகட் (தாய்லாந்து) 10. Phuket, Thailand.
இந்தோனேசியாவின் தீவு பகுதி பாலி எனப்படும் சுற்றுலா இடமாகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதியில் பெரும்பான்மையாக புத்த மதத்தினரே உள்ளனர். இந்த தீவில் இந்துக்களும் பெருமளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஐரோப்பாவின் சிறந்த 10 சுற்றுலா தலங்கள்.

1) லண்டன் (யுகே) 1. London, UK
2) பாரிஸ் (பிரான்ஸ்) 2. Paris, France
3) ரோம் (இத்தாலி) 3. Rome, Italy
4) கிரிட் (கிரீஸ்) 4. Crete, Greece
5) பார்சிலோனா (ஸ்பெயின்) 5. Barcelona, Spain
6) பிரக் (கிரிச் குடியரசு) 6. Prague, Czech Republic
7) இஸ்தான்புல் (துருக்கி) 7. Istanbul, Turkey
8) செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (ரஷ்யா) 8. Saint Petersburg, Russia
9) லிஸ்பன் (போர்ச்சுக்கல்) 9. Lisbon, Portugal
10) ஆம்ஸ்டெர்டாம், நெதர்லாண்ட் 10. Amsterdam, Netherlands
மேலும், உலகில் மக்கள் வாழ சிறந்த இடமாக வியன்னா மீண்டும் தேர்வாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக