அடுத்தவர்களை பயமுறுத்தும் குறட்டை சத்தம்
நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?
தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது.
அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.
குறட்டை விடும் உங்களுக்கு தெரியாது அதன் தொல்லை பக்கத்தில் படுத்து தூங்குபவர்களுக்கு மட்டுமே தெரியும்.
குறட்டை விடுவதை தவிர்க்க சில ஆலோசனைகள்
1, படுக்கும் போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம்.
2. பக்கவாட்டில் படுத்தால் அது குறட்டையை தவிர்க்கும். ஆனால் இரவு முழுவதும் அப்படியே தூங்குவது என்பது சாத்தியம் இல்லை.
3. ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.
4. புகை பிடிப்பவராக இருந்தால், நிச்சயம் குறட்டை வராமல் தடுக்க புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
5. மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.
6. இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது
*********************************************************************************
குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் ...
குறட்டை பிரச்சனைக்கு குண்டாக இருந்தாலோ, நேராக படுத்தாலோ, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டாலோ, சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ, சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ வரக்கூடும்.
அதிலும் ஒருவர் அன்றாடம் யோகா செய்து வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் வேறு சில எளிய வழிகளின் மூலமும் குறட்டையைத் தடுக்கலாம்.
ஆவி பிடிப்பது ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும். இதனால் இரவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏதும் இருக்காது.
யூகலிப்டஸ் எண்ணெய் யூகலிப்டஸ் எண்ணெயின் நறுமணத்தை தலையணையில் லேசாக தெளித்துவிட்டால், தூங்கும் போது சுவாசிப்பதில் பிரச்சனை ஏதும் நேராமல் இருக்கும்.
உப்பு கலந்து நீர் இரவில் படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.
துளசி அல்லது க்ரீன் டீ துளசி அல்லது க்ரீன் டீயை குடித்து வந்தால், குறட்டையில் இருந்து மெதுவாக விடுபடலாம்.
2-3 துளிகள் ஆலிவ் ஆயிலை வாயில் ஊற்றி பருகினால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.
சூடான நீரில் எலுமிச்சை சாற்றினை சிறிது ஊற்றி, அத்துடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம்.
தினமும் இஞ்சி, மிளகு, துளசி மற்றும் ஏலக்காயை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு, அந்நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருந்தால், குறட்டை விடக்கூடும். எனவே மனதை எப்போதும் அமைதியாகவும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு மனதை அமைதிப்படுத்தும் செயல்களான தியானம், குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்றவற்றில் அவ்வப்போது ஈடுபட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக