சனி, 25 மார்ச், 2017

உங்கள் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..


உங்கள் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..


ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினாலும் நாம் அதனை செய்வதில்லை. அவ்வாறு தண்ணீர் குடிப்பதை தவிர்த்து வருபவர்களுக்கு உடல் வறட்சி ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தாலும் கூட சில உடல் உபாதைகள் உண்டாக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.

எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்…

•• கட்டாயம் 20 கிலோவுக்கு மேல் உள்ள சிறுவர்கள் முதல் 45 கிலோ வரை உள்ளவர்கள் வரை கட்டாயம் 1.8 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

•• 45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 1.9 லிட்டர்.

•• 50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.1 லிட்டர்.

•• 55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.3 லிட்டர்.

•• 65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.7 லிட்டர்.

•• 70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 2.9 லிட்டர்.

•• 75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.2 லிட்டர்.

•• 80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.5 லிட்டர்.

•• 85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.7 லிட்டது.

•• 90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 3.9 லிட்டர்.

•• 95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 4.1 லிட்டர்.

•• 100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் – 4.3 லிட்டர்.

•• 100 கிலோவுக்கு மேல் எடை கொண்டவர்கள் நிச்சயம் உடல் பருமனை குறைப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக