திங்கள், 27 மார்ச், 2017

வாழ்கைத் தத்துவம்...



வாழ்கைத் தத்துவம்...
* வெற்றிக்கு போராடும்போது 'வீண்முயற்சி' என்பார்கள்.. வெற்றி அடைந்து விட்டாலோ 'விடாமுயற்சி' என்பார்கள்..
* சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..
* நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..
* ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..
* மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..
* மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..
* வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!
* புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!
* சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு.. வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும்..
* வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..
* குறை சொல்வதற்கு இன்னொரு பெயர் பொறாமை !
* வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..
* மரணபயம் வாழ்நாளை குறைத்து விடும்.
* தவறான மனிதர்களால் தன் வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்று தர முடியும்!..
* வாழ்க்கை என்பது ஒரு பயணம்.. ஓட்டப்பந்தயம் அல்ல..
* யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள்.. ஏனெனில் இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்..!!
* கோடிக்கணக்கான கற்பனைகள், லட்சகணக்கான முயற்சிகள், ஆயிரகணக்கான தோல்விகள் இருந்தாலும் ஒரு சில நிஜங்களுடன் நாம் வாழ்கின்ற இந்த நிகழ்வுக்கு பெயர் தான் "வாழ்க்கை".
* ஓர் உச்சக்கட்ட தனிமையை உணர ஒரு சிறு நிராகரிப்பே போதுமானதாய் இருக்கிறது இப்போதெல்லாம்...
* நாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு.. சிலரை உண்மையாக நேசிப்பது..
* எப்போது என் மௌனம் உன்னை பாதிக்கவில்லையோ அப்போதே நான் தெரிந்து கொண்டேன்.. நான் உனக்கு முக்கியமாவனன் இல்லையென்று..!!
* எந்த உறவும் நிரந்தரமில்லை என தெரிந்த பின்னும், யாரும் ஒருவர் மேல் வைக்கும் அன்பை அளவோடு வைப்பதில்லை.. எதார்த்தங்களை மீறியது தான் அன்பு..!!
* கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்...
* நம்மைவிட்டு எல்லோரும் போய்விட்டார்களே என்று வருத்தபடுதை விட, இனி நமக்குக் கூட இருந்து குழி பறிக்க யாரும் இல்லை என்று சந்தோஷப்படு..!!
* பொய் சொல்கிறவனும் சந்தர்ப்பவாதியும் தொடர்ந்து வெற்றி பெரும் இவ்வுலகில் கடவுளையும் உண்மையையும் தேடித்தேடியே களைத்துப் போகிறான் அப்பாவி மனிதன்..
* அருகில் இருந்தும் போலியாக உள்ள உறவை விட, யாரும் அற்ற தனிமையின் வேதனை மேலானது..!
* தோற்றாலும் நம்பிக்கையோடு இரு.. ஆனால் யாரையும் நம்பி தோற்று விடாதே.. அதன் வலி மரணத்தை விட கொடியது..

1 கருத்து: