ஞாயிறு, 5 மார்ச், 2017

தர்பூசணியின் மருத்துவ குணங்கள் ..


தர்பூசணியின் மருத்துவ குணங்கள் ..

தர்பூசணி உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக் கூடியது.

தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் அதிகம்  நிறைந்துள்ள பழமாக இப்பழம் திகழ்கிறது.

நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.


தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை குறையும். உடல் சூடு தணியும்.

தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு பனிகட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும்.

பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப்பொடி, சர்க்கரை சேர்த்து அருந்த நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.

தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும்.தர்பூசணிப் பழசாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும்.

தர்பூசணிப் பழம் ஜீரணத்தை சீர்படுத்தும். பழத்தை நீங்கலாக இருக்கும் வெள்ளை ப் பகுதியை கூட்டு, குழம்பாக தயாரித்து சாப்பிடலாம் இது குடல் நோய்களை குணப்படுத்தும்.

இதய நோய்களிலிருந்தும் புற்று நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது.

எத்தனையோ பயன்கள் தர்பூசணியில் இருந்தாலும் முக்கியமாக ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

தர்பூசணி அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதில் இருக்கும் மாவுச்சத்து, சர்க்கரை, புரதம், புரோட்டீன், தையமின், ரிபோபிளேவின், கல்சியம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஒரு மாத்திரையை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.

தர்பூசணி மாத்திரை சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து சீரான நிலையை அடைந்திருந்தது. தர்பூசணியில் இருக்கும் பொருட்கள் ரத்த தட்டுகளை அகலப்படுத்துகிறது.

இதனால் உடல் முழுவதும் ரத்தத்தை சீராக  இயங்க செய்து  இதயத்தின் வேலை சுலபமாகிறது.வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே இதயம் நீண்ட காலம் சிறப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வெயில் சூடு தணிக்க மட்டுமல்லாது இதன் மருத்துவ குணங்களை கருத்திற்கொண்டு இப்பழத்தை தொடர்ந்து உண்டால் ஆரோக்கிய வாழ்வை நாமும் பெறலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக