திங்கள், 27 ஜனவரி, 2020

இயற்கை எழில் கொஞ்சும் காந்தலூர்


கண்ணை கவரும் காந்தலூர்

காந்தலூர் (കാന്തല്ലൂർ; Kanthalloor) இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில், தேவிகுளம் வட்டத்தில் காந்தலூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு வருவாய் ஊர் ஆகும். மலையாள மொழி சட்டத்தின் படி இந்த ஊர் தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினர் வாழும் பகுதியாகும்.


காந்தலூர் .കാന്തല്ലൂർ (மலையாளம்)
KANTHALLOOR
வருவாய் ஊர் (Revenue Village)
நாடு
 இந்தியா
மாநிலம்
கேரளம்
மாவட்டம்
இடுக்கி மாவட்டம்
வட்டம்
தேவிகுளம் வட்டம்
வட்டார தன்னாட்சி நிறுவனம்
காந்தலூர் ஊராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்
6,758
மொழிகள்
 • அலுவல்
தமிழ்,மலையாளம்
நேர வலயம்
IST (ஒசநே+5:30)
PIN
685620

ஜனத்தொகை கணக்கெடுப்பு 2011

மொத்த ஜனத்தொகை 6758
மொத்த ஆண்கள் 3339
மொத்த பெண்கள் 3419
பட்டியல் ஜாதியினர் 2291
பட்டியல் பழங்குடியினர் 887
கல்வியறிவு உள்ளோர் 4681


நிலப்பரப்பு

மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் கீழந்தூர், மறையூர், கொட்டாகொம்பூர், வட்டவடை மற்றும் கண்ணன் தேவன் மலைக்குன்றுகளை எல்லையாக உள்ள இந்த ஊர் 4842 ஹெக்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

முக்கிய தொழில்

இந்த ஊரின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். இங்கு குளிர்கால காய்கறிகள் பழங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கிய காய்கறிகள் பீன்ஸ், முட்டகோஸ், காலிஃப்லவர், காரட், உருளைக்கிழங்கு, வெள்ளப்பூடு ஆகியனவும் பழங்கள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம், ப்லம், பேறிக்காய், கொய்யா, தாட்டுபுட்டான் ஆகியவையும் ஆகும்.


முக்கிய மொழிகள்

90 சதவீத மக்களின் தாய்மொழியாக தமிழ் உள்ளது, மீதமுள்ளவர்கள் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களாவர். இப்பகுதியில் வாழும் மக்கள் தமிழ் மொழியை அனைத்து தேவைக்கும் பயன்படுத்தலாம். இப்பகுதி மக்கள் கேரள மாநிலத்தின் அனைத்து அரசு துறைகளிலும் விண்ணப்பங்கள் தமிழில் கொடுக்கலாம், அதற்கான பதிலும் தமிழிலேயே இருக்க வேண்டும் என மலையாள மொழி சட்டம் 2015 கூறுகிறது.


முக்கிய பண்டிகைகள் மற்றும் விழாக்கள்

கார்த்திகை தீபம், தீபாவளி, தமிழ் புத்தாண்டு ஆகியன முக்கிய பண்டிகைகளும், ஆவணி நோன்பு, சித்திரை திருவிழா, சிவராத்திரி, சித்திர குப்த்தன் பொங்கல் ஆகியன முக்கிய விழாக்களுமாகும்.

சமயங்கள் மற்றும் ஆலயங்கள்

பெரும்பான்மையான மக்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களாவர், மீதமுள்ளவர்கள் கிருத்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவர். ஒரேஒரு முஸ்லிம் குடும்பமும் உள்ளது. பெருமலை மலையாள பகவதியம்மன் ஆலயம், இராமர் குகைக்கோவில், காந்தலூர் உடையபெருமாள் ஆலயம், புத்தூர் பிடாரியம்மன் ஆலயம், வெட்டகாரன் கோவில், சிறுமலர் ரோமன் கத்தோலிக்கன் தேவாலயம், வேளாங்கண்ணி மாதா சுரியன் கத்தோலிக்கன் தேவாலயம் ஆகியவை முக்கிய வழிபாட்டு தளங்கலாகும்.


கல்விச்சாலைகள்

அரசு உதவிப் பெரும் ஆரம்ப் பள்ளி(Aided Primary School, Kanthalloor) தமிழ் மற்றும் மலையாள வழி கல்வி, மவுன்ட் கார்மல் ஆரம்ப பள்ளி தமிழ் வழி கல்வி மற்றும் திரு இருதய உயர்நிலை பள்ளி தமிழ் மற்றும் மலையாள வழி கல்வி ஆகியன முக்கிய கல்வி சாலைகளாகும்.


சுற்றுலா தளங்கள்

மன்னவன் சோலை (ஆணைமுடி சோலை தேசிய பூங்கா), பட்டிச்சேறி அணை, ஆப்பிள் தோட்டம், குழச்சிவயல் சூட்டிங் பாறை, இராமர் குகைக்கோவில், சர்க்கரை ஆலைகள்(மறையூர் சர்க்கரை).


 காந்தலூர் ஆப்பிளுக்கு மவுசு

கேரளாவில் தங்கள் பகுதியில் விளையும் ஆப்பிளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருவதால் அதன் சாகுபடியை அதிகரித்து வருகின்றனர் காந்தலுார் விவசாயிகள். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது காந்தலுார் கிராமம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து எப்போதும் குளிர்ச்சியான காலநிலை காணப்படுவதால் இப்பகுதியில் அதிகளவில் பழ சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் ஆரஞ்சு சாத்துக்குடி பிளம்ஸ் பிச்சீஸ் பேரிக்காய் உட்பட பல்வேறு வகையான பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தியாவில் காஷ்மீர் சிம்லா பகுதிகளே ஆப்பிள் விளைச்சலில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்மாநிலங்களில் கேரளாவின் காந்தலுார் பகுதிகளில் அதே போன்ற குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுவதால் அப்பகுதி விவசாயிகளும் பரிசோதனை முறையில் ஆப்பிள் சாகுபடியை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.


காந்தலுாரில் 25 ஏக்கரில் அதன் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். பார்லே பியூட்டி என்ற ரகத்தை பயிர் செய்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. நடவு செய்து மூன்று ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கிறது. மார்ச் மாதத்தில் பூக்க ஆரம்பித்து ஆக. undefined செப். மாதங்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒருமுறை சாகுபடி செய்தால் தொடர்ந்து இருபது ஆண்டுகள் வரைக்கும் பலன் கொடுக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக ஒரு மரத்திலிருந்து 20 முதல் 25 கிலோ வரை மகசூல் கிடைப்பதாகவும் காஷ்மீர் ஆப்பிளைவிட உள்ளூர் பகுதியில் விளையும் ஆப்பிளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.


இதுகுறித்து காந்தலுார் பகுதி விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் ஆப்பிள் விளைச்சலுக்கு ஏற்றதாக உள்ளது. காஷ்மீர் சிம்லா ஆப்பிள்களில் மெழுகு தடவி விற்பதால் எங்கள் பகுதியில் விளையும் ஆப்பிளுக்கு பொதுமக்களிடம் அதிகளவில் வரவேற்பு உள்ளது. இங்கு இயற்கையான முறையில் சாகுபடி செய்து நேரடியாக மரத்திலிருந்து பறித்து கொடுக்கப்படுகிறது. இதனால் காஷ்மீர் ஆப்பிளைவிட விலை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. காந்தலுார் ஆப்பிள் கிலோ 200 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையும் ஓரளவு இருப்பதால் விவசாயிகளுக்கு கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது. நிரந்தர பயிர் என்பதால் பராமரிப்பு செலவு மற்றும் நேரம் குறைவாகவே உள்ளது. இதனால் விவசாயிகளிடையே ஆப்பிள் சாகுபடி ஆர்வம் அதிகரித்து வருகிறது.
       தொகுப்பு  -
            புவனேஸ்வரி மகேந்திரன்,
               மதி கல்வியகம், நெல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக