இதே போல 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாகும்?
பொதுவாக சில விஷயங்களை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் அது நம் வழக்கமாக மாறி விடும் என விஞ்ஞானம் சொல்கிறது. இது உண்மையும் கூட. உண்ணும் முறை முதல் உறங்கும் முறை வரை இதே நிலை தான். சிலர் உடலில் ஏதேனும் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என பல வகையில் முயற்சி செய்வார்கள். ஆனால், அவை யாவும் கைகூடாது. காரணம் அவற்றில் முழுமையும், தொடர்ச்சியும் இருக்காது.
உதாரணமாக உடல் எடை, தொப்பை ஆகியவற்றை குறைக்க பல்வேறு பயிற்சிகளை செய்து வருவார்கள். ஆனால், தொடர்ச்சியாக இதை செய்யாததாலும், இது முழு பெறாததாலும் தான் நீங்கள் எதிர் பார்க்கின்ற பலனை அடைய முடிவதில்லை. இது போன்ற உங்களின் எல்லா கவலைக்கும் முற்றிப்புள்ளி வைக்க இந்த ஒரே ஒரு பயிற்சியை மட்டும் 21 நாட்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். இவ்வாறு செய்து வருவதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறந்த நிலை
உடலின் முழு இயக்கத்தையும் கட்டுப்படுத்த இந்த நிலை உதவுகிறது. இந்த நிலையை தினமும் 5 முதல் 10 முறை செய்து வந்தாலே உடல் முழுக்க இதன் பலன்கள் கிடைக்கும்.
கண்டிப்பாக இந்நிலையில் ஒவ்வொரு முறையும் 2 முதல் 4 நிமிடம் வரை இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் 20 நொடி முதல் ஆரம்பித்து படிப்படியாக உயர்த்தினாலே போதும்.
தசைகள்
இந்த பயிற்சியை செய்து வருவதால் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும். மேலும், இந்த இடங்களில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் முற்றிலுமாக குறைந்து விடும். இந்த பலனை முழுமையாக அடைய தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர வேண்டும்.
தண்டு வடம்
பலருக்கு 5 நிமிடம் ஒரே இடத்தில் உட்கார்ந்தாலோ அல்லது படுத்து இருந்தாலோ முதுகு தண்டில் பயங்கர வலி உண்டாகும். ஆனால் இந்த பயிற்சியை 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் வலிகள் பறந்து போய்விடும். மேலும், தண்டு வடம் அதிக உறுதியுடன் இருக்கும்.
செரிமானம்
எதை சாப்பிட்டாலும் செரிக்காமல் இருக்கிறதா/ உங்களின் நீண்ட நாள் பிரச்சினையை தீர்க்க இந்த பயிற்சி உதவுகிறது. வீட்டில் தினமும் 10 நிமிடம் இந்த பயிற்சியை செய்து வந்தாலே செரிமான மண்டலத்தின் கோளாறுகளை குணப்படுத்தி விடலாம்.
ஆழ்ந்த தூக்கம்
இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுவோருக்கு உதவ இந்த பயிற்சி நிலை ஒன்றே போதும். மூளையின் செயல்திறனை இரவு நேரத்தில் சீராக வைத்து ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தை தரும். மேலும், மெட்டபாலிசத்தையும் சீராக வைக்க இந்த பயிற்சி நிலை பயன்படுகிறது.
மனநிலை
இந்த பயிற்சியை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் மன குழப்பம், மன உளைச்சல், சோர்வு ஆகிய பிரச்சினைகளில் இருந்து காத்து கொள்ளலாம். மேலும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்து உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
உடல் உறுப்புகள்
உடலில் பல உறுப்புகள் எண்ணற்ற மாற்றம் பெற்றிருக்கும். ஆனால், அவை யாவும் சரியற்ற முறையில் மாற்றம் பெற்றிருக்கும். இந்த வகை உறுப்புகளை சரிவர மாற்றம் பெற செய்ய இந்த பயிற்சி நிலை உதவும். இதனால் கழுத்து, முதுகு, வயிறு, தோள்பட்டை ஆகிய பகுதிகள் நேராக மாறும். இதனால் பல உடல்நல கோளாறுகளை தடுக்க இயலும்.
எவ்வாறு செய்வது?
முதலில் உடலை குப்பற படுக்கும் படி மாற்றி கொள்ள வேண்டும். அடுத்து கால்களிலும் கைகளிலும் அழுத்தம் கொடுத்து உடலை தூக்கி கொள்ளவும். இந்நிலையில் கைகளை 90 டிகிரி கோணத்தில் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் மேற்சொன்ன பலன்களை அடையலாம்.
மாற்று முறைகள்
இதே நிலையை சற்று மாற்றம் கொடுத்தும் செய்து வரலாம். அதாவது, இவ்வாறு பயிற்சி செய்யும் போது ஒரு காலை தூக்கிய படி இருக்கலாம். அல்லது உடலை "V" வடிவத்தில் வைத்து கொண்டும் செய்யலாம். இதனால் மேலும் உடலுக்கு வலு சேர்க்கப்படும்.
நன்றி ஒன்இந்தியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக