வீடியோ கால் பெண்களுக்கு பாதுகாப்பானதா..
📲 முன்பெல்லாம் வெகு தொலைவில் இருக்கும் ஒருவர் முகம் பார்த்து பேச வேண்டும் என்றால் நேரில் தான் சந்தித்து பேச வேண்டும்.
📲 ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் அது மிகவும் எளிமையாகிவிட்டது. ஸ்கைப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சேவைகளை பயன்படுத்தி தொலைவில் இருக்கும் நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வீடியோ காலில் முகம் பார்த்து பேசிக் கொள்கிறோம்.
📲 இந்த தொழில்நுட்பம் நமக்கு இவ்வளவு வசதிகளை கொடுத்தாலும் நம் அறியாமையாலும், அலட்சியத்தினாலும் சில இன்னல்களை சந்திக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை. அது பற்றி சில தகவல்கள்.
📲 வீடியோ கால் பேசும்போதும் 'ஸ்கிரீன் ரெக்கார்டிங்" போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி தனிமையில் இருக்கும்போது எடுக்கப்படும் காட்சிகளை பதிவுசெய்து பின்னர் எடிட்டிங் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம் என்பது நிறைய பெண்களுக்கு தெரியவில்லை.
📲 நுட்பங்களை பயன்படுத்த தெரிந்த மக்களுக்கு அவற்றுள் இருக்கும் சில பாதுகாப்பு நுணுக்கங்களை பயன்படுத்த தெரிவது இல்லை. பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முடியும்.
இவற்றில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
🎭 முதலில் பொது இடங்களில் உள்ள இலவச வை-பையை பயன்படுத்தி வீடியோ கால் செய்யாதீர்கள்.
🎭 அது மிகவும் ஆபத்தானது. பெண்கள் அறிமுகம் இல்லாத யாரையும் நம்பி வீடியோ காலில் பேச வேண்டாம். இதனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
🎭 உங்கள் மொபைலுக்கு யாராவது ஏதேனும் லிங்க் அனுப்பினால் அதை கிளிக் செய்துவிடாதீர்கள். ஏனென்றால் அந்த லிங்க் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட மற்றும் உங்களை உளவு பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ஏதேனும் லிங்க் வந்தால் பாதுகாப்பானதா? என்று உறுதி செய்த பிறகே செல்லுங்கள்.
🎭 வீடியோ கால் பேசும்போது சற்று கவனத்துடன் பேசுங்கள் எதை பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் தனிமையில் இருக்கும்போது யாருடனும் வீடியோ காலில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது பல பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
'இந்த நவீன உலகில் நாம் அடிப்படையான கல்வி அறிவு பெற்றுவிட்டோம், ஆனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களில் இருக்கும் சில முக்கியமான நுணுக்கங்களை கற்றுக்கொள்ள மறந்துவிட்டோம்"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக