திங்கள், 6 ஜனவரி, 2020

பழி வாங்க நினைத்தால் என்ன ஆகும்? குட்டிக்கதை... படிச்சு பாருங்க...!


பழி வாங்க நினைத்தால் என்ன ஆகும்? குட்டிக்கதை... படிச்சு பாருங்க...!

கலக்கலான ஜோக்ஸ்..!
கடைக்காரர் : இந்த துணி கிழியவே கிழியாது...
வாடிக்கையாளர் 1 : அடேயப்பா சூப்பர்! ஆச்சர்யமா இருக்கே....
வாடிக்கையாளர் 2 : யோவ்... யாருகிட்ட டக்கால்ட்டி பண்ற.... கிழியாதுன்னா எப்படி எனக்கு 2 மீட்டர் துணி கிழிச்சு தருவ?
கடைக்காரர் : 😳😳
விடுகதைகள்..!
ஆடும்போது சீறும், ஆடி குடத்தில் அடையும், அது என்ன? - எண்ணெய்.

ஆட்டி விட்டால் ஆடும், அந்தரத்தில் தொங்கும், அது என்ன? - ஊஞ்சல்.

அனைவருக்கும் அடங்காதது, ஆதவனுக்கு அடங்கும், அவன் யார்? - குளிர்.

அனலிலே பிறப்பான், ஆகாயத்திலே பறப்பான், அவன் யார்? - புகை.

அன்றாடம் மலரும், அனைவரையும் கவரும், அது என்ன? - கோலம்.
குறளும்... பொருளும்...!!
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பொருள் :

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும். ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
பழி வாங்க நினைத்தால் என்ன ஆகும்?
ஒரு மொட்டை தலையனைக் கொசு கடித்துவிட்டது. கோபத்தில் அதைக் கொன்றுவிடும் எண்ணத்துடன் தலையில் வேகமாக அடித்துக்கொண்டான்.

கொசு சுலபமாகப் பறந்து சென்று சற்று தூரத்திலிருந்து அவனை பார்த்து சிரித்தது. ஒரு சிறிய கொசுக்கடியை உன்னால் தாங்க முடியவில்லையே! இதற்காக உன்னையே வருத்திக்கொள்கிறாயே, தலை வலிக்கிறதா? என்றது.

அதற்கு அவன் என்னை நானே அடித்துக்கொண்டாலும், அதற்காக என்னை நானே மன்னிக்கவும் முடியும்.

ஆனால், என் ரத்தத்தை ஓசியாகக் குடிக்கும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன். என்னிடம் மாட்டமலா போய்விடுவாய் என்றான்.

நீதி :

பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும்.
வாழ்க்கை தரும் பாடம்...!
ஒருமுறை பேச இருமுறை யோசி...
எதுவும் சிலகாலம்தான்...

ஆசைப்படுவதை மறந்துவிடு... ஆனால்,
ஆசைப்பட்டதை மறந்துவிடாதே...

வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை... ஆனால்,
வெற்றி பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு...

உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது...
உன் நம்பிக்கையில் நீ தோற்கும் வரை...

சுமைகளை கண்டு துவண்டு விடாதே...
உலகத்தை தாங்கும் பூமியே உன் காலடியில்தான் இருக்கிறது...

சிந்தனை செய்...
செய்ய நினைப்பதை செய்...

யாரையும் நம்பாதே...
உன்னை மட்டும் நம்பு...

விழாமல் வாழ்ந்தேன் என்பது பெருமை அல்ல...
விழுந்தாலும் எழுந்தேன் என்பதுதான் பெருமை...

வாழ்வது ஒரே ஒரு முறை...
அதை உனக்காக வாழு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக