#அரோக்கியத்திற்கான_அடிகள்
உடலை பிட்டாக வைத்திருக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் வாக்கிங் போலாமா, யோகா செய்யலாமா என பல வழிகள் உள்ளன. இதில் எது சிறந்தது என்பதற்கு பல வருடங்களாக ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றது.
1950களில் அமெரிக்க மருத்துவர்கள் இதய நோய் உள்ளவர்களுக்கு பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லி பலர் இறந்து போனார்கள்.
1968ல் கென்னத் கூப்பர் என்ற விமானப்படை மருத்துவர் ஆய்வு நடத்தி நீச்சல், ஜாக்கிங் போன்ற வை உடல்நலத்தை சீராக்கும் எனவும் பல நோய்கள் வராமல் தடுக்கும் எனவும் கூறினார்.
1989ல் கூப்பர் ட்ரெட்மில் வைத்து ஒரு ஆய்வு நடத்தினார். இதய நோய்கள் கேன்சர் போன்றவை குறைவதாக கண்டறிந்தார்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் எந்த அளவுக்கு உடல் உழைப்பு செய்கிறார்கள் என்பதே சில கேள்விகள் மூலம் அறிந்து கொண்டாலும் அவற்றை அவரால் துல்லியமாக கணக்கிட முடியவில்லை.
2008ல் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வுக்கு சில வழிகாட்டுதல்கள் கொண்டு வந்தன. எனினும் தினம் தினம் செய்யும் உடல் வேலைகளை கணக்கெடுத்து ஆய்வுக்குட்படுத்த இயலவில்லை. நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் குறைவாகவும் சில கேன்சர் நோய்கள் வராமல் தடுக்கவும் இதய நோய்களை தடுக்கவும் மன அழுத்தம் தூக்கமின்மை போன்றவற்றுக்கு மருந்தாகவும் கடும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன என கூறப்பட்டது.
நிலைமை இப்போது மாறி விடும் பீடோமீட்டர்களின் காலமாக உள்ளது. நடக்கும் போது எத்தனை அடிகளை எடுத்து வைக்கிறோம் என்பதை எண்ணும் சாதனங்கள் வந்துவிட்டன.
1700 அடிகள் முதல் 2500 அடிகள் வரை நடந்த 72 வயது பெண்மணிகள் 16,000 பேரை 4 வருடம் ஆய்வு செய்ததில் அவர்கள் ஆயுள் அதிகரித்திருக்கிறது என கண்டறிந்துள்ளார்கள்.
1 நிமிடத்திற்கு 100 முதல் 140 அடிகள் என்பதை கணக்கில் வைத்து பயிற்சி எடுக்க வேண்டும். லிப்ட் பயன்பாட்டை குறைப்பது, கடைக்கு நடந்து செல்வது என நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக