புதன், 12 ஏப்ரல், 2017

தை முதல் நாளே தமிழ்புத்தாண்டு



தை முதல் நாளே தமிழ்புத்தாண்டு

தமிழரின் உண்மையான புத்தாண்டு தொடக்கம் 'தை' முதல்நாள்தான் என்பதை, நமது கலைஞரின் திமுக அரசு அரசாணையாகவே அமல்படுத்தியது.
ஆணவக்கார ஆரியப் பார்ப்பன ஜெயலலிதாவின் அரசோ அதை ஏற்க மறுத்து, 'அவாளின்' செத்த மொழியான ஸம்ஸ்க்ருதத்தில் கணக்குடைய மாஸங்களையும், வர்ஷங்களையும் 'தமிழ்ப்புத்தாண்டு' என்று மீண்டும் அடாவடியாய் நம் மீது திணித்துவிட்டுச் செத்துப் போயிருக்கிறார்.
ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் அதை வரவேற்றார்கள் என்பது சரி.
தன்மானமுள்ள தமிழர்கள் எப்படி அந்த ஸம்ஸ்க்ருத மாஸ - வர்ஷங்களை தமிழ்ப்புத்தாண்டு என்று ஏற்க முடியும்?
அதிலும், 'சித்திரை' என்று நம்மால் தவறாகக் குறிப்பிடப்படும் 'ஸைத்ர' மாஸத்தில் தொடங்குவதைப் புறந்தள்ளி, 'தை' என்ற *சுறவம்*முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு என்பதை ஆணையாகப் பிறப்பித்து அமல்படுத்தப்பட்டதை,
திமுகவினரே ஏற்க மறுப்பதோ, அல்லது அந்தப் புரிதல் இல்லாமல் இருப்பதோ இழிவானதாகும்.

ஆரியப் பார்ப்பனர்கள் நம்மை ஏமாற்றி, நம் மீது திணித்து வைத்த
ஆண்டுக் கணக்கு முற்றிலும் ஸம்ஸ்க்ருதம் என்பதை *கிழமைகளின், திங்கள்களின், ஆண்டுகளின்* பெயர்களைப் பார்த்தாலே புரிகிறதே!
திங்கள் என்பதை 'மாஸம்' என்றும்,
ஆண்டு என்பதை 'வர்ஷம்' என்றும் அடித்தளத்தையே புரட்டிப் போட்டு ஏமாற்றினர் பார்ப்பனர்கள். அதனால்தான், இன்னும் சொரணையற்ற நாம் 'வருஷப் பிறப்பு' 'மாசப் பிறப்பு' என்று மடத்தனமாகப் பேசுகிறோம்.

தமிழர்களே..!
சிந்தியுங்கள்..!

"தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு"
தை பிறந்தால் வழி பிறக்கும்..!

சித்திரைதான் புத்தாண்டு என்று நித்திரையில் இருக்கும் தமிழா, விழித்துப்பார் இங்கே...
1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்கிரம
15.விஷு
16.சித்ரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துர்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.ப்லவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விசுவாவசு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய

இதுதான் தமிழ் ஆண்டுகளா..?
இதில் தமிழ் சொல் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள்..?

பிறகு எப்படி இவைகளைத் தமிழ் ஆண்டுகளாக ஏற்பது..? ஆண்டுகளுக்கு பெயர் வைக்கும் அளவுக்குக் கூட தகுதி இல்லாததா எமது தமிழ் செம்மொழி..?
அறிவுக்கு ஒவ்வாத 60 ஆண்டுகள் என்பது ஆரியனின் சூத்திரங்களை கொண்டது... உம்மை வீழ்த்த வந்தது...
விழித்தெழு தமிழா!!!

(தமிழா..! மதிகெட்டு சித்திரையை தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லாதே..!)

பனிரெண்டு திங்கள்களின் (மாதங்களின்) பெயர்களும் ஸம்ஸ்க்ருதத்தில்.
*ஸைத்ர* என்பதைத்தான் 'சித்திரை' என்கிறோம்.
*விகாஸ* என்பதைத்தான் 'வைகாசி' என்கிறோம். இவ்வாறாக பங்குனி வரை இதே ஏமாளித்தனம்தான்.


*கிழமைகள்*
ஆம்! நாட்களாகிய கிழமைகளின் பெயர்களில் முழுவதுமாக ஸம்ஸ்க்ருதமாக்காவிட்டாலும் இரண்டு நாட்களை ஸம்ஸ்க்ருதமாக்கி நம் மீது திணித்து வைத்துள்ளது பார்ப்பனீயம்.
ஞாயிறு.... தமிழ்

திங்கள்.... தமிழ்

செவ்வாய்.... தமிழ்

*புதன்*.... 'புத்வார்' என்னும் ஸம்ஸ்க்ருத தினம்.

வியாழன்.... தமிழ்

வெள்ளி.... தமிழ்

*சனி* ஸம்ஸ்க்ருதம்

புதன் என்பதை *அறிவன்* என்றும்,
சனிக்கிழமை என்பதை *காரிக்கிழமை* என்றும் தமிழறிஞர்கள் ஆய்ந்து அறிவித்தனர்.
அதைத்தான் கலைஞரும் அறிவித்தார்.




தை முதல் நாளே நம் தமிழர் புத்தாண்டு

சிந்திக்க தெரிந்தவன் மனிதன்......

தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு - தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் - சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனையாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம்’ 60 ஆண்டுகளை வரையறுத்தது. ‘பிரபவ’ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை - வேதனை.

இந்த 60 ஆண்டுகளையும் கடவுளோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் உருவாக்கி விட்டார்கள். நாரதரும், கிருஷ்ணனும் உறவு கொண்டு (இருவரும் ஆண்கள்) பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்கு புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61வது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்’ நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாத குழப்பங்களும், மூடநம்பிக்கைகளும் இதில் அடங்கிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் தான் - தமிழ் அறிஞர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். மூன்று முக்கிய முடிவுகளை அவர்கள் அப்போது எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு) திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவெடுத்தார்கள். இப்படி முடிவெடுத்தவர்கள் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம.சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவர்.

அதன் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலையடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது.

1971-ல் அன்றைய கலைஞர் ஆட்சி, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையையோ 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.

1969-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். இடையில் வந்து புகுந்த சித்திரை - தமிழர் மீது புகுத்தப்பட்ட பண்பாட்டுத் திணிப்பாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக