புதன், 12 ஏப்ரல், 2017

பொடுகு தொல்லையா..? விடுபடுவதற்கு இலகுவான வழிகள்..!



பொடுகு தொல்லையா..?  விடுபடுவதற்கு இலகுவான வழிகள்..!


பொடுகுத் தொல்லை ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சனை அனைத்து வகை வயதினருக்கும், பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் வருகிறது.

பொடுகு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பொதுவான காரணங்களாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் சுற்றுப்புற மாசு ஆகியவை உள்ளன.

முடியில் வெள்ளையாக செதில் செதிலாக பார்வைக்குத் தென்படுவது பலருக்கு அருவெறுப்பாக தோன்றும்.

நீங்கள் பணியில் இருப்பவர் எனில் உங்கள் உயர் அதிகாரியின் முன்பு நிற்கும்போது இந்த மாதிரியான பொடுகுகளை அவர் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

இது நல்ல மாதிரியான நிலை கிடையாது. எனவே பொடுகு பிரச்சனைகளை பற்றி விவாதிப்பதோடு மட்டுமில்லாமல் சில தீர்வுகளையும் இங்கே காணலாம்.

முடியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுற்றுப்புற மாசுக்களில் இருந்தும் பராமரிக்க வேண்டும். தினமும் உங்கள் முடியில் சீப்பை உபயோகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்வதால் உச்சந்தலை வரை ரத்த ஓட்டம் சீராகி இறந்த செல்களை அகற்ற தூண்டுகிறது.

*டிப்ஸ் :* வாரத்திற்கு இரு முறை ஸ்கல்ப்பை விரல் நுனிகளால் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி தூண்ட படுகிறது.

*டிப்ஸ் :* அடிக்கடி தயிர் மற்றும் எலுமிச்சையை முடியை சுத்தம் செய்ய உபயோகிக்க வேண்டும்.இவை இரண்டும் முடி உதிர்வு மற்றும் பொடுகிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

*டிப்ஸ் :* 2 தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகர் நீருடன் கலந்து முடியை அலச வேண்டும்.இது முடிக்கு நல்லத் தீர்வுகளைத் தரும்.

*டிப்ஸ் :* உங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவு சேர்க்க வேண்டும். சில நேரம் முடியை சூரிய வெளிச்சத்தில் காட்டுவது சிறந்தது. இவ்வாறு செய்வதால் அரிப்பைத் தரும் பொடுகிலிருந்து விடுபடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக