பங்குனி அதிசயம்..!!
பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு.... இருக்கு.
வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...
இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம்.. வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்..
பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்..
இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே..
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே..?
கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி...என்பதெல்லாம் தாண்டி "சுகரு "க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..
இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம் ..
எப்படி சாப்பிட ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..
இல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கு.. படிங்க.... எப்படியாச்சும் சாப்பிடுங்க...
நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..
இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க பாஸு....
சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..? லேசா மெனக்கெடனும்.. அம்புட்டு தான்....
வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள் (Neem Flower Medicinal Properties)
1.வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை நீங்கும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்துகொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
2.வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
3.மூன்று கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலை 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.
வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்
“ தெய்வம் சார்ந்த பராரை வேம்பு ” என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது.
இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை.
அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவ பயன்களை சிறிது காண்போம்!
வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.
கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.
நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க உடல் பித்தம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.
வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.
வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.
வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக