வியாழன், 6 ஏப்ரல், 2017

வெயிலை வெறுக்காதீர்கள் ,



வெயிலை வெறுக்காதீர்கள் ,

வெயில் என்பது  இறைவனின் பெரும்  அருட்கொடையாகும்  வெயிலின் உஷ்ன.சக்தியை  கொன்டே உலகம் இயங்குகின்றது பனிகாலம் மழைகாலம் குளிர்காலம்  இவைகளைவிட வெயில்காலமே மிகவும்  சிறந்ததாகும் ,

வெயில் நம் மீது படும்போதுதான்  அதன்  சக்த்தியை  கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது , மூட்டுவலி  உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும் , தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுபடுத்த படுகின்றது ,

பல காய்கள் வெயிலினாலேயே பழமாகின்றது

நமது உடலின் ரத்த ஓட்டம் வெயில்காலத்திலேயே  அதிகளவு உடலை சுற்றிவருகின்றது ,

வெயிலின் சக்தியை கிரகித்தே  மரங்கள் வளருகின்றன மழைகாலங்களில் குறைவான வளர்ச்சியையே மரங்கள் பெறுகின்றது ,

நீர்  எந்தளவுக்கு  விவசாயத்துக்கு  முக்கியமோ அதே  அளவு வெயிலின் உஷ்ன சக்த்தியும் மிகவும்  அவசியமானதாகும் ,

வியர்லை  எனும்  அற்பபுதமான உடல் கழிவுகளை வெளியேற்றும்  நிகழ்வு வெயில் காலத்திலேயே அதிகம்  நிகழ்ந்து நமது ஆரோக்கியத்தை உயர்த்துகின்றது,

 இந்த வியர்வையின் மூலமாக  சிறுநீரகங்களின் வேலை பளுவும்  குறைந்து  சிறுநீரகங்கள் பலம் பெறுவதும் வெயிலினால்தான் நடைபெறுகின்றது ,இதை அனுபவிக்காமல்
ஏசி  ரூம்களில்  முடங்கி  கிடக்கலாமா?  வெயிலை அனுபவியுங்கள்  அத்துடன்  உங்களது  ஆரோக்கியத்தையும் அதிகரித்து கொள்ளுங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக