இன்றைய உடனடித் தேவை "பௌத்தமா?,,அரசியலா?,,"
இந்தியாவில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை பின்பற்றுபவர்களிடம் உள்ள குழப்பங்களில் முதன்மையாது பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சமூக விடுதலை பாதைக்காக காட்டிய வழி பெளத்தமா?..அரசியலா?,, என்பதே ஆகும்... இதன் அடிப்படையில் பின்வரும் பதில்கள் விவாதமாக ஆக்கப்பட்டுள்ளது...
1.அரசியல் இல்லாத பெளத்த மாற்றமே சமூக விடுதலைக்கான தீர்வு...
2.முதலில் பௌத்த மாற்றம் பின்பு அரசியல் மாற்றம்...
3.முதலில் அரசியல் மாற்றம்..பின்பு பௌத்த மாற்றம்...
4.அரசியல் மாற்றமும்..பவுத்த மாற்றமும் இணைந்த மாற்றமே தீர்வு...
இதில் எது சரியானது...
*1956 அக்டோபர் 14 ல் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பௌத்தநெறியை தழுவினார்..60 ஆண்டுகள் கடந்த பிறகு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்தியமக்கள்தொகையில் பெளத்தர்கள் 0.70 % உள்ளனர்..அதிக அளவாக இமாச்சலபிரதேசத்தில் 11.71%..அடுத்தபடியாக மகாராஷ்ட்ராவில் 5.8%..குறைவாக தமிழ்நாட்டில் 0.02%.. மகாராஷடிரா பௌத்தர்கள் பாபாசாகேப்பை பின்பற்றி பெளத்த நெறியை ஏற்றவர்கள்..இமாச்சலபிரதேசம் ஏற்கனவே பெளத்தபூமி....
*இந்த கணக்கீடுகளில் நமக்கு தெரிய வருவது பெளத்தத்தின் வளர்ச்சி 60 ஆண்டுகளில் இமாச்சலபிரதேசத்தை கழித்து பாத்தால் 0.01 % தான்.. ஏன் இந்த நிலை..இதற்கான ஆய்வில்தான் "பெளத்தமா ?, அரசியலா?," என்பதற்க்கான பதில் அடங்கியுள்ளது...
*பாபாசாகேப் இந்துமதத்திற்கு எதிராக பௌத்தத்தை தேர்ந்து எடுத்தார்.. அதற்கு அவர் கூறிய காரணம் மிக முக்கியமானது " இந்து மதம் "சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம்" ஆகியற்றுக்கு எதிராக உள்ளது"....
*பிற மதங்களை தவிர்த்து அவர் ஏன் பௌத்தத்தை தேர்ந்துஎடுத்தார் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் " பெளத்தம் மட்டுமே "சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம்" ஆகிய மூன்றையும் முழுமையாக உள்ளடக்கி உள்ளது"
*இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பாபாசாகேப் பௌத்தத்தை தனி மனித விஷயமாக பார்காமல் சமூக விடுதலையின் பாதையாக பார்தார்..எனவே அவரது ஒரே நோக்கம் "சுதந்திரம்.சமத்துவம்..சகோதரத்துவ "த்தின் அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்குவதே...
.....................................................................................
*இத்தகைய பௌத்தம் ஏன் அது தோன்றியஇந்தியாவிலேயே வளர்ச்சியடையாமல் போனது?,,
* இதற்க்கான பதில் வரலாற்றில் மிக தெளிவாக உள்ளது..அது என்னவெனில் எந்த ஒரு தத்தவமோ அல்லது மதமோ வளர்ச்சியடைய மிக முக்கியமான தேவை அது ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட வேண்டும்..ஆட்சியாளர்களின் துணை இல்லாமல்எந்த மதமும் வளரவே முடியாது..ஏன் எனில் ஆட்சியாளர்கள்தான் ஒரு நாட்டில் எது இருக்க வேண்டும்?,,எது இருக்க கூடாது என முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள்...
*இன்னும் தெளிவாக கவுதம சித்தார்த்தர் என்கிற "இளவரசரால்" உருவாக்கப்பட்டதால்தான் புத்தம் புத்தர் காலத்தில் மக்களை மிக எளிதாக சென்றடைந்தது... புத்தரை முதலில் ஏற்று அதை பரப்பியவர்கள் அரசர்களே.."மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி" என்பதற்கு ஏற்ப மக்கள் உடனே பௌத்தத்தை ஏற்றனர்...
*பௌத்தம் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளுக்கும் பரவ மிக மிக முக்கியமான காரணமாக இருந்தவர் "அசோகர்" என்ற பேரரசரே...
*சீனா..ஜப்பான்..மலேஷியா..சிங்கப்பூர்..தாய்லாந்து என உலகில் பல நாடுகளில் வளர்ச்சி அடைந்துள்ளதற்க்கு காரணம் அந்த நாடுகளில் பௌத்தம் "அரச மதமாகவோ அல்லது அரசால் ஆதரிக்கபடும் மதமாகவோ" இருப்பதால்தான்..
* பௌத்தம் மட்டுமல்லசாதாரண தச்சனின் மகனாக பிறந்த இயேசு "தேவ குமாரனாக" ஆக்கப்பட்ட பின்பும் பரவாத கிருத்துவம் பிரிட்டிஷ்..பிரஞ்ச்..போர்த்துகீசியர்...பல நாடுகளை ஆளும்போதுதான் பரவியது..இஸ்லாமும் அரசர்களால்தான் பரவியது..
.....................................................................................
சொந்தமண்ணில் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணம்....
* பௌத்தம் இந்தியாவில் வீழ்ச்சி அடைய காரணம் மிக முக்கியமானது..அசோகரின் பேரன் பிரகதத்த மௌரியனை கி.மு.185 ல் கொன்று ஆட்சியை கைப்பற்றிய புஷ்ய மித்ர சுங்கன் என்ற பிராமணன் பௌத்தத்தை கற்பித்த பௌத்த பிக்குகளை "தனது ஆட்சி அதிகாரத்தை" பயன்படுத்தி கொன்று குவித்தான்..பிக்குனிகளை விபச்சாரிகளாக ஆக்கி தற்கொலை செய்து கொள்ள வைத்தான்.இதன் மூலம் பவுத்தை அழித்தான்.ஏன் மதுரையில் கூட களப்பிரர்கள் காலத்தில் பௌத்தம் செழித்த தமிழ்நாட்டில் இரண்டாயிரம் சிரமணர்கள் மதுரை மன்னனால் கழு ஏற்றிக் கொள்ளப்பட்ட பிறகே தமிழ்நாட்டில் பௌத்தம் அழிந்தது...
.....................................................................................
* "பாபாசாகேப் அரசியல் மூலம் சமூக விடுதலையை வென்றெடுக்க முடியாது என்பதாலயே இறுதியில் பௌத்த்தை தழுவினார்..எனவே நாமும் அரசியலை தவிர்த்து பாபாசாகேப் வழியில் பௌத்தம் தழுவுவதன் மூலமே சமுக விடுதலையை வென்றெடுக்க முடியும்" இது சரியான பார்வையா..
"பௌத்தமா?,,அரசியலா?,," பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பதில் என்ன?,,
*"இந்துமதம் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நிறுவனம்..அது மத அரசியல் மூலம் மக்களை அடிமை படுத்தி வைத்துள்ளது..இந்துமத்தை தகர்க்க வேதங்களின் "அதிகாரத்தை தகருங்கள்" என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்... இதில் அவர் குறிப்படும் அதிகாரம் அரசியல் அதிகாரம் தான்..
*அரசியல் குறித்த பாபாசாகேப்பின் குரு புத்தரின் பார்வை என்ன..." சுதந்திரமான..பொருளாதார தன்னிறைவு கொண்ட மனிதனாலயே சிந்திக்க முடியும்..இவை இரண்டையும் ஒரு நல்ல அரசால்மட்டுமே மக்களுக்கு அளிக்க முடியும்" புத்தர்...
*பாபாசாகேப் அம்பேத்கர் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே புத்தர் கண்ட கனவான " சுதந்திரம்..சமத்துவம்..சகோதரத்துவம்" அடையமுடியும் என்பதில் உறுதியாக இருந்தார்..அதற்காக அவர் என்னென்ன செய்துள்ளார்...
1. பௌத்தத்தின் கொள்கையான "சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்தும்" ஆகியவற்றை " இந்திய அரசியல் அமைப்பு சட்ட" முகப்புறையில் வைத்தார்..
2.இந்தியாவின் அரசு சின்னமாக பௌத்த மன்னர் பேரரசர் அசோகரின் நான்முக சிங்கத்தை வைத்தார்..
3.இந்தியாவின் தேசிய முழக்கமாக புத்தரின் "சத்திய மேவ ஜெயதே" (வாய்மையே வெல்லும்).வைத்தார்..
4.இந்திய தேசிய கொடியின் மையத்தில் அசோக சக்கரத்தை வைத்தார்..
5.இந்தியாவின் தேசிய பறவையாக அசோகரின் மெளரிய வம்ச சின்னமான மயிலை வைத்தார்..(மெளரி =மயில்)..
6..சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சி பாராளுமன்றத்தில் உள்ள புத்தர் சிலை முன் நடைபெற வழிவகை செய்தார்..
7."இந்தியாவை ஆளும் வர்க்கமாக நாம் மாறுவோம் என்பதை உங்கள்வீட்டில் சுவரில் எழுதி வையுங்கள்" என சென்னையில் பேசினார்..
8.1956 அக்டோபர் 14 ..பௌத்த நெறி ஏற்ற பிறகு ஆட்சியை கைப்பற்ற " இந்திய குடியரசு கட்சி" யை நிறுவும் வேலைகளில் இறங்கினார்..அதன் தின்னமாக புத்தரை குறிக்கும் யானையை தேர்வு செய்தார்..ஹகொடியில்மெரிய வம்ச சின்னமான மயிலின் நீல நிறதை தேர்ந்து எடுத்தார்..அசோக சக்கரத்தை தேர்ந்து எடுத்தார்...
ஆகவே சகோதரர்களே இந்தியாவின் வாழ்க்கை நெறியாக வளர்ந்து இருக்கவேண்டிய பவுத்தம் scக்களின் மதமாகவும்...மகாராஷ்டிராவில் மகர்களின் மதமாகவும்..தமிழ்நாட்டில் பறையர்களின் மதமாகவும் சுருங்க காரணம் நாம் அரசியலில் கோட்டை விட்டதே..
இறுதியாக நாம் இன்று நினைத்தவுடன் பெளத்தம் தழுவும் உரிமையும்..பௌத்தபூர்ணிமா ஒன்று கூடல் நடத்த சுதந்திரம் வழங்கியதும் " அரசியல் அமைப்பு " சட்டமே..
நாம் அரசியல் மூலம் மட்டும் தான் பௌத்தத்தை மீட்டெடுக்க முடியும்...ஜெய்பீம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக