வியாழன், 24 நவம்பர், 2016

ராகு-கேது பரிகாரத் தலங்கள்!!!

ராகு-கேது பரிகாரத் தலங்கள்!!!

ஸ்ரீகாளஹஸ்தி:
சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ள புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும் அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள்.

கீழப்பெரும்பள்ளம்:
மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்
தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

திருநாகேஸ்வரம்:
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும் பிறையணிவாணுதலாள் அம்மனையும் இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி தோஷம் நீங்கப் பெறலாம்.

கும்பகோணம்:
நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரும், பெரியநாயகியும் தோஷம் விலக்கி நன்மை அருள்கிறார்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

பாமணி:
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகநாதரும் (சுயம்பு லிங்கம்) அமிர்தநாயகியும் அருள்புரிகிறார்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்றும் இத்தலத்தை அழைப்பர்.

திருப்பாம்புரம்:
கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார் பூங்குழலியையும் தரிசிக்க தோஷங்கள் எல்லாம் விலகி ஓடுகின்றன. ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

ஸ்ரீவாஞ்சியம்:
கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.

நாகூர்:
நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம்
இது.

பேரையூர்:
புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது.

நயினார்கோவில்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.

நாகமுகுந்தன்குடி:
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது, இந்த ராகு-கேது தோஷ நிவர்த்தித் தலம்.

நாகப்பட்டினம்:
காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி எனும் திருப்பெயர்.

குன்றத்தூர்:
சென்னையை அடுத்து, பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக அருள்பாலிக்கும் நாகேஸ்வரர் சர்ப்ப தோஷங்களை நீக்கி ஆனந்தம் அளிக்கிறார்.

கெருகம்பாக்கம்:
சென்னை போரூர்-குன்றத்தூர் பாதையில் உள்ளது கெருகம்பாக்கம். போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும், பக்தர்களுக்கு தோஷம் விலக்கி அருள்கின்றனர்.
கோடகநல்லூர்: திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கிறார்; பக்தர் தம் துயர் துடைக்கிறார்.

திருக்களாஞ்சேரி:
மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர் நாகநாதர் சுயம்புலிங்கமாக அருள்பரப்பி தோஷ பயம் நீக்குகிறார்.

ஆம்பூர்:
வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் இத்தலம் உள்ளது. அபயவல்லி, நாகரத்தின சுவாமி எனும் திருப்பெயர்களோடு இறைவியும், இறைவனும் அருள்பாலிக்கின்றனர்; பக்தர் நலம் காக்கின்றனர்.

பெத்தநாகபுடி:
திருவள்ளூர் மாவட்டம், சோளிங்கருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகவல்லி சமேத நாகநாதேஸ்வரர், தன்னை தரிசிக்கும் பக்தர்களை எல்லாத் துயரிலிருந்தும் விடுவிக்கிறார்.

திருக்கண்ணங்குடி:
திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சுயம்பு லிங்கம். காளத்தீஸ்வரர் என்று திருப்பெயர். நல்வாழ்வளிக்கும் தெய்வம்.

ஊஞ்சலூர்:
ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவராக வீற்றிருந்து, அரவக் குறைகளை அகற்றுகிறார்.

காஞ்சிபுரம்:
பெரிய காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ளது. மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். ராகு-கேது பூஜித்த தலம் இது.

***********************************
ராகு கேது பெயர்ச்சி
சரியில்லையா ? கவலை
வேண்டாம்! இதோ எளிய
பரிகாரங்கள்...

நமது வேலையை குறைத்துக்கொள்ள
நாமெல்லாம் நம் வீட்டில்
வேலைக்காரர்களை
வைத்துக்கொள்கிறோமில்லையா?
பிரபஞ்சத்தையே கட்டிக்காத்து பல நூறு கோடி
மக்களை மக்களை ஆட்சி செய்யும்
இறைவனுக்கு எத்துனை வேலை இருக்கும் ? எனவே
இறைவன் தனக்கு உதவியாக, தான்
எண்ணியவைகளை செயல்படுத்த, தனக்கு
கீழே வைத்திருக்கும் வேலைக்காரர்கள், பிரதிநிதிகள்
(REPRESENTATIVES) தான் நவக்கிரகங்கள்.
நவக்கிரகங்கள் இறைவனின் நேரடி
உதவியாளர்கள். இறைவனின்
திருவுள்ளத்துக்கு மாறாக அவர்கள் எதையும்
செய்வதில்லை. அவன் வகுத்த
நெறிமுறைகளின் படி, அவரவர்
கர்மாவுக்கு உரிய பலாபலன்களை விருப்பு
வெறுப்பின்று தருபவர்கள்
நவக்கிரகங்கள்.
சில வீட்டில் எஜமானர்களை விட
வேலைக்காரர்கள் கறாராக
இருப்பதில்லையா? அது போன்று சில
சமயம் நவக்கிரகங்கள் நம்மிடம் கடுமையாக
நடந்துகொள்வதுண்டு. அதன்
காரணம் என்ன? எஜமானர் மீது
அவர்களுக்கு உள்ள பற்றும் அவன் வகுத்த
விதிகளை இம்மி பிசகாமல்
கடைபிடிக்கவேண்டியுமே தவிர அன்றி வேறு எதுவும்
இல்லை.
எனவே பிரச்னை என்றால்
எதற்க்கெடுத்தாலும்
எஜமானர்களிடம் நேரடியாக நாம்
செல்லவேண்டியதில்லை.
பணியாளர்களிடமே நாம்
முடித்துக்கொள்ளக்கூடிய எளிய
விஷயங்களுக்காக முதலாளியை எதற்கு
தொந்தரவு செய்வானேன்?
ராகு-கேது பெயர்ச்சி தங்கள்
ராசிகளுக்கோ ஜாதகத்துக்கோ அல்லது தங்கள்
அன்புக்குரியவர்களுக்கோ சரியில்லை என்று
கருதுபவர்கள் அஞ்சவேண்டியதில்லை. ராகு-
கேதுவை திருப்திபடுத்தி அவர்கள் நல்ல பலன்களை
வழங்குவதற்கு எதுவாக முன்னணி
ஜோதிடர்கள் கூறிய சில எளிய பரிகாரங்களை
கீழே உங்களுக்காக தொகுத்து
தந்திருக்கிறேன். முடிந்தவற்றை பின்பற்றுங்கள்.
நலம் பெறுங்கள்.
மறுபடியும் சொல்கிறேன். பலன்
மிதமாகவோ கடுமையாகவோ இருப்பவர்கள்
அஞ்ச வேண்டியதில்லை. நல்லோர்க்கு இல்லை
நாளும் கோளும் என்பது ஆன்றோர் வாக்கு.
தினசரி கோளறு பதிகத்தை பாராயணம்
செய்து வருவது மிகுந்த பலனை தரும்.
கோவிலுக்கு
செல்வது, நவக்கிரகங்களை
வழிபடுவது, பக்தி செலுத்துவது இவை
எல்லாவற்றையும் விட உங்கள்
அணுகுமுறையில் செயலில் சிந்தனையில்
மாற்றமிருப்பது அவசியம். கூடுமானவரை
பிறருக்கு ஏதோ ஒரு வகையில் உதவி
செய்யுங்கள்.
முடியும்போதெல்லாம் அன்னதானம்
செய்யுங்கள்.

கோவிலுக்கு செல்வது, நவக்கிரகங்களை
வழிபடுவது, பக்தி செலுத்துவது இவை
எல்லாவற்றையும் விட உங்கள்
அணுகுமுறையில் செயலில் சிந்தனையில்
மாற்றமிருப்பது அவசியம். கூடுமானவரை
பிறருக்கு ஏதோ ஒரு வகையில் உதவி
செய்யுங்கள். முடியும்போதெல்லாம்
அன்னதானம் செய்யுங்கள்.
நல்லதே நினையுங்கள். நல்லதே
செய்யுங்கள். நல்லதே பேசுங்கள். எப்படி
நல்லது நடக்காமல் போகும் ?
எதையும் சாப்பிடாது விரதமிருப்பது
உயர்ந்தது. ஆனால் அதனினும் உயர்ந்தது
எது தெரியுமா? பசியால் வாடுவோருக்கு
உணவளிப்பது. எனவே இந்த
காலகட்டங்களில் முடிந்தவரை
அன்னதானம் செய்யுங்கள்.
திருக்கோவில்களில் அன்னதான திட்டத்திற்கு
நிதி உதவி அளியுங்கள்.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்
அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (குறள்
225)
பொருள் : பசியைப்
பொறுத்துக் கொள்ளும்
நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும்
ஒருவருக்கு உணவு அளிப்பதே
சிறந்ததாகும்.
————————————————————

ராகு – கேது
பொதுவான
குணங்கள் என்ன?
மனிதனின் இயல்பு குணத்தை அடியோடு
மாற்றுவது இந்த ராகுவும் கேதுவும் தான்.
ராகு பகவான் அரண்மனை போன்ற வசதி
வாய்ப்புக்களையும் உல்லாச சுக
போகங்களையும் தர வல்லவர்.
படிப்பறிவேவேயில்லாதவர்களை கூட உயர்ந்த
பதவியில் வைத்து அழகு பார்ப்பவர். கடல்
கடந்து அயல்நாடு சென்று பெரும்
தனம் சம்பாதிக்க வைப்பதும் படிப்பறிவை விட
பட்டறிவையும்
தரக் கூடியவர்.
கேது நீதி, நேர்மை, நியாயத்திற்கெல்லாம்
அதிபதியாக விளங்குகிறார். ஊரே சேர்ந்து
ஒரு தவறை செய்தாலும் அதைத் தனித்து
நின்று எதிர்க்கக் கூடிய வல்லமையை தருபவர்.
தன்னைச் சார்ந்த இன, மத கோட்பாடுகளை
கடுமையாக பின்பற்ற வைப்பவர். விரதம், வேள்வி
என்றால் ஆகமத்தில்
சொல்லப்பட்டுள்ளபடி அனைத்து
விதிகளையும் அனுசரிக்கும் மன உறுதியைத்
தருபவர்.
பெயர்ச்சி நாளன்று அதிகாலை
(அட்லீஸ்ட் ஒரு 5.00 அல்லது 5.30 AM) எழுந்து
நீராடி, அருகிலுள்ள சிவாலயத்திற்கு
சென்று வழிபாடு செய்து,
நவக்கிரகங்களை சுற்றி வருவது நலம். ராகு-
கேதுவுக்கு அர்ச்சனை செய்வது இன்னும்
சிறப்பு. அன்று முழுதும் புலால் உணவு
தவிர்க்க வேண்டியது அவசியம். பசுவுக்கு பழம்,
அகத்திக்கீரைகள் முதலியவற்றை தருவது கூடுதல்
சிறப்பு.
மேஷம் :
* சனி, ராகு-கேது சிறப்பாக
இல்லாதாதால் அவர்களுக்கு அர்ச்சனை
செய்யுங்கள்.
* ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.
* துர்க்கை வழிபாடு நடத்தி வாருங்கள்.
* காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள்.
* ஏழைகளுக்கு இயன்ற உதவி
செய்யுங்கள்.
* விநாயகர் வழிபாடும் ஆஞ்சநேயர்
வழிபாடும் உங்கள் முன்னேற்றத்துக்கு
வழிவகுக்கும்.
** மயிலாடுதுறை மற்றும் சீர்காழிக்கு
அருகேயுள்ள கீழப்பெரும்பள்ளம் எனும்
தலத்தில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரை
தரிசியுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த
ஆசிரியருக்கு உதவுங்கள்.
ரிஷபம் :
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு
அர்ச்சனை செய்யுங்கள்.
* நவக்கிரகங்களில் குருவுக்கும் கேதுவுக்கும்
அர்ச்சனை செய்யுங்கள்.
* ஞானிகளை சந்தித்து காணிக்கை
செலுத்தி ஆசி பெறுங்கள்.
* ஏழைக்குழந்தைகள் படிப்புக்கு உதவிடுங்கள்.
** சென்னை-குன்றத்தூரில்
அருள்பாலிக்கும் காமாட்சி அம்மன் சமேத
நாகேஸ்வரரை தரிசித்து வாருங்கள். முதியோர்
இல்லத்திற்கு சென்று முடிந்த உத விகளை
செய்யுங்கள்.
மிதுனம் :
* சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரங்களை சுற்றி
வரவும்.
* முருகன் வழிபாடு முன்னேற்றத்துக்கு
வழிவகுக்கும்.
* துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும்.
* ஊனமுற்றவர்களுக்கும் ஆதரவற்ற
மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி
செய்யுங்கள்.
* ஏழைக்குழந்தைகள் படிக்க உதவலாம்.
* சனி பகவானுக்கு
நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
** திருப்பாம்புரத்தில் அருளும் ஆதிசேஷன்
வழிபட்ட பாம்புரேஸ்வரரையும் வண்டார்
பூங்குழலியையும் தரிசியுங்கள். கும்பகோணம்
மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம்
வழியாக இத்தலத்தை அடையலாம்.
வயதானவர்களுக்கு செருப்பும் குடையும்
கம்பளியும் வாங்கிக் கொடுங்கள்.
கடகம் :
* நவக்கிரங்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும்
பிரத்யேக அர்ச்சனை செய்யலாம்.
* சனிபகவானுக்கும் அப்போது அர்ச்சனை
செய்யவேண்டும்.
* மேலும் விஷ்ணு வழிபாடு உங்கள்
முன்னேற்றத்துக்கு துணை நிற்கும்.
* சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வணங்கி
வாருங்கள்.
* ஊனமுற்றவர்களுக்கும் கணவரை இழந்து
தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற
உதவியை செய்யுங்கள்.
* ஞானிகளுக்கு காணிக்கை
செலுத்துங்கள்.
* பாம்பு புற்றுக்கு பாலூற்றலாம்
* விநாயகர் வழிபாடு உங்கள் பிரச்னையை
முடிவுக்கு கொண்டு வரும்.
** காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு
அருகேயுள்ள மகாகாளேஸ்வரர்
ஆலயத்திற்கு சென்று வாருங்கள். இது
ராகு-கேது பூஜித்த தலமாகும். தந்தையி ழந்த
பிள்ளைக்கு முடிந்த உதவியைச் செய்யுங்கள்.
சிம்மம் :
* கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால்
அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
* பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று
வாருங்கள்.
* ஞானிகள் சன்னியாசிகளை சந்தித்து
காணிக்கை செலுத்தி ஆசி
பெறுங்கள்.
* குருபகவானும் சாதகமற்ற இடத்தில்
இருப்பதால் அவருக்கும் அர்ச்சனை
செய்யவேண்டும்.
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கடலை
படைத்து வணங்குங்கள்.
* ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி
செய்யுங்கள்.
* ஆண்டாளை வழிபடுவது சிறப்பு.
** புதுக்கோட்டை அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15
கி.மீ. தொலைவிலுள்ள பேரையூர் எனும்
தலத்தில் அருளும் நாகநாதரை தரிசியுங்கள்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
கன்னி :
* சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரங்களை சுற்றி
வாருங்கள்.
* அப்போது சனி, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை
செய்யுங்கள்.
* சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு
சென்று வாருங்கள்.
* பாம்பு புற்றுள்ள கோவிலுக்கும் சென்று
வாருங்கள்.
* திருநாகேஸ்வரம் திருபெரும்பள்ளம்
அல்லது காளஹஸ்தி சென்று
வாருங்கள்.
* லக்ஷ்மி வழிபாடு முன்னேற்றம் தரும்
** திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ.
தொலைவிலுள்ள கோடகநல்லூர்
தலத்தில் காளத்தீஸ்வரர் எனும்
திருநாமத்தோடு அருள்பாலிக்கும் ஈசனை
தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின்
திருமணத்திற்கு உதவுங்கள்.
துலாம் :
* விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கி
வாருங்கள்.
* திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, போன்ற
ஏதாவது ஒரு தளத்திற்கு சென்று
வாருங்கள்.
* அல்லது அருகில் உள்ள
புற்றுக்கொவிளுக்கு சென்று
வரலாம்
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு முல்லை
மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்.
* சனி, ராகு-கேது இருக்கும் இடம் சிறப்பல்ல
என்பதால் அவர்களுக்கு சந்தர்ப்பம்
கிடைக்கும்போதெல்லாம் அர்ச்சனை
செய்யுங்கள்.
* மேலும் செய்வாய் வழிபாடு சிறப்பை
தரும்.
** கும்பகோணத்தில் நகரின் மையத்திலேயே
அமைந்துள்ள ஆதிசேஷன் வழிபட்ட ஈசனான
நாகேஸ்வரரையும் பெரியநாயகியையும்
தரிசியுங்கள். கோயில் திருப்பணிகளுக்கு
உதவுங்கள்.
விருச்சிகம் :
* ராகுவும் சனிபகவானும் சாதகமற்ற
இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு
அர்ச்சனை செய்யுங்கள்.
* சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு
சென்று வாருங்கள்.
* சனி பகவானுக்கு எல் சோறு படைத்து அதை
காக்கைக்கு போடுங்கள்
* ஊனமுற்றவர்களுக்கு உதவி
செய்யுங்கள்
* 2013 மே மாதத்திற்கு பிறகு குறு பகவானும்
சாதகமற்ற இடத்திற்கு
சென்றுள்ளதால் அவருக்கு அர்ச்சனை
செய்யுங்கள்
* சந்தர்ப்பம் கிடைத்தால் நவக்கிரக
தலங்களுக்கு சென்று வாருங்கள்.
** சென்னையிலிருந்து 110 கி.மீ.
தொலைவிலுள்ள புகழ்பெற்ற
ராகு-கேது தலமான காளஹஸ்திக்கு
சென்று வாருங்கள். இறைவன்
காளத்திநாதர் என்றும் அம்மை
ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும்
எழுந்தருளியுள்ளார்கள். அன்னதானம்
செய்யுங்கள்.
தனுசு :
* கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால்
அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள்
* குரு பகவானுக்கும் அர்ச்சனை
செய்யுங்கள்
* சிவனை வழிபடுவது நலத்தை தரும்
* வியாழக் கிழமை தட்சிணாமூர்த்தியை
தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்
** நாகர்கோவில் தலத்தில் மூலவராகவே
அருள்பாலிக்கும் நாகராஜரை தரிசித்து
வாருங்கள். ஏழைகளின் மருத்துவச்
செலவை முடிந்தவரை ஏற்றுக்
கொண்டு உதவுங்கள்.
மகரம் :
* காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை
செய்யுங்கள்
* ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள்
* குறிப்பாக நீளம் மற்றும் பல வண்ண
துணிகளை கொடுத்து வாருங்கள் *
சனிபகவான் சாதகமற்ற இடத்தில்
இருப்பதால் பெருமாள் கோவிலுக்கு
தொடர்ந்து சென்று வாருங்கள்
* சூரிய வழிபாடும், பிரவ வழிபாடும் தடைகளை
கடந்து உங்களை முன்னேற்றும்
** ஸ்ரீவாஞ்சியத்திலுள்ள ராகுவும் கேதுவும்
சேர்ந்திருக்கும் அபூர்வ கோலத்தை தரிசித்து
வாருங்கள். கும்பகோணம் மற்றும்
மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக
இத்தலத்தை அடையலாம். சாலையோரம் வாழ்
சிறுவர்களுக்கு உதவுங்கள்.
கும்பம் :
* ராகு, சனி, குரு ஆகிய கிரகங்களுக்கு
அர்ச்சனை செய்து வாருங்கள்.
* துர்க்கை வழிபாடும் பைரவர் வழிபாடும் தேவை
* சனிக்கிழமை பெருமாளை வணங்கி
வாருங்கள்
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை
வணங்கி வாருங்கள்
* ஊனமுற்றோருக்கும் கணவனை இழந்த
மூதாட்டிகளுக்கும் உதவி செய்யுங்கள்
* ஆண்ச்சநெயரை வணங்கி வாருங்கள்
* யானைக்கு கரும்பு கொடுங்கள்
** ஊத்துக்காடு காளிங்கநர்த்தனரான
கிருஷ்ணரை தரிசித்து வாருங்கள். இத்தலம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில்
உள்ளது. ஆதரவற்றோர் இல்லத்தில்
இருப்பவர்களுக்கு ஆடை வாங்கிக்
கொடுங்கள்.
மீனம் :
* சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை
சுற்றி வாருங்கள்
* ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்து
வாருங்கள்
* ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில்
கலந்துகொள்ளுங்கள்
* பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது
கருடாழ்வாரை தரிசனம் செய்யுங்கள்
* துர்க்கை வழிபாடு துயரத்தை நீக்கி துணிவை தரும்
* மேலும் சனிக்கிழமை பெருமாள்
கோவிலுக்கும் வியாழக் கிழமை சிவன் கோவிலுக்கும்
சென்று வாருங்கள்
** சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ.
தொலைவிலுள்ள
காட்டுமன்னார்கோயிலுக்கு அருகேயுள்ள
திருக்காட்டம்புலியூரில் அருளும்
பதஞ்சலீஸ்வரரையும், பதஞ் சலி முனிவரையும்
தரிசித்து வாருங்கள். சுமைதூக்கும்
தொழிலாளிக்கு உதவுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக