ஞாயிறு, 6 நவம்பர், 2016

விநாயகரின் முன் நம் தலையில் கொட்டி கொள்வது ஏன்?

விநாயகரின் முன் நம் தலையில் கொட்டி கொள்வது ஏன்?

🌠 முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். அப்படிப்பட்ட பிள்ளையாரின் முன் நம் தலையில் கொட்டி கொள்வது ஏன் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

🌠 யானை முகம், பானை வயிறு கொண்ட பிள்ளையார் கேட்டதை அருளும் செல்வ விநாயகர் ஆவார். கணபதியை வணங்கினால் காரிய தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினை நெருங்காது.

🌠 இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. அது போல்தான் பிள்ளையாரின் முன் தலையில் கொட்டிக்கொள்வதற்கும் ஒரு புராணக் கதை உள்ளது.

🌠 அகத்தியர் கொண்டுவந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து வந்த விநாயகர் கவிழ்த்தார். பின், ஒரு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் கொட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து, உலக நன்மைக்காக காவிரி நதியை உருவாக்க அவ்வாறு செய்ததாக கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே கொட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகரின் முன் தலையில் கொட்டி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

🌠 தியானம் செய்பவர்கள் தலையில் கொட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பது நம்பிக்கை. நம்முடைய அகங்காரத்தை இறைவனின் முன்னிலையில் போக்கிக் கொள்ள தோப்புக்கரணம் போட்டு நம்மை நாமே கொட்டி கொள்ளும் சந்நிதி தான் பிள்ளையார் சந்நிதி. எனவே தான் மோதகத்தைக் கையில்v கொண்ட விநாயகப் பெருமானின் முன் நம் தலையில் கொட்டிக்கொள்கிறோம். இவ்வாறு நாம் விநாயகர் முன்னில

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக