திங்கள், 14 நவம்பர், 2016

உள்ளங்கையில் உங்களின் பண்புகளை தெரிந்து கொள்ள..

உள்ளங்கையில் உங்களின்  பண்புகளை தெரிந்து கொள்ள..

  ஒருவரின் கைரேகையை வைத்து அவர்களது பண்புகளை தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரது உள்ளங்கையின் அகலத்தையும், நீளத்தையும், உள்ளங்கையின் மென்மையும் வைத்து ஒருவரது பண்புகளை அறியலாம்.

மென்மையான உள்ளங்கை

* உள்ளங்கை மென்மையாக இருப்பவர்கள் கற்பனை வளம் கொண்டவர்கள், பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

* ஆண்களின் கைகள் மென்மையாக இருந்தால் அவர்கள் திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் இருப்பார்கள்.

கடினமான உள்ளங்கை

* உள்ளங்கை கடினமாக இருந்தால் பிடிவாதம் மற்றும் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்வார்கள்.

மிக அகலமான உள்ளங்கை

* நீளம் குறைவாகவும், அகலம் அதிகமாகவும் உள்ளங்கை கொண்டவர்கள் அடிக்கடி முடிவுகளை மாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

* ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுபவர்கள், எதிலும் வெற்றி பெறாமல் தோல்வியை ஏற்கும் நிலை ஏற்படும்.

அகலமான உள்ளங்கை

* உள்ளங்கையின் நீளத்துக்கு தகுந்த அளவு அகலம் கொண்ட உள்ளங்கை கொண்டவர்கள், நம்பிக்கை உடையவர்கள், திட்டமிட்டு செயல்படுபவர்கள்.

*இவர்கள் கொள்கையில் உறுதி கொண்டவர்கள். எதையும் செய்து முடிக்கும் திறமை கொண்டவர்கள்.

*குறுகலான உள்ளங்கை
றுகலான உள்ளங்கை கொண்டவர்கள் மிகவும் பலவீனமானவர்கள்.

* இவர்கள் தங்கள் தோல்விக்கு பிறரை குறை சொல்வார்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக