வெள்ளி, 11 நவம்பர், 2016

நுரையீரலை சுத்தம் செய்வது பற்றி

நுரையீரலை சுத்தம் செய்வது
பற்றி காண்போம்.
ஆரோக்கியமான வாழ்வு
எவ்வாறு மூன்று நாட்களில்
எளிதாக நுரையீரலை சுத்தம்
செய்வது ?

புகை பிடிப்பவர்கள் அல்லாமல்
மற்றவர்களுக்கு அலர்ஜி,
சுற்றுப்புற சூழ்நிலை,
தூசுகளினால் நுரையீரல்
அழற்சி ஏற்படுவதுண்டு. அதே
சமயம் 45 வருடமாக புகை
பிடித்தாலும் எந்த பாதிப்பு
இல்லாமல் நுரையீரல் நன்றாக
இயங்குபவர்களும் உண்டு. இது
ஆளாளுக்கு
வித்தியாசப்படலாம்.
எவ்வாறு இருப்பினும்,
இப்பொழுது மூன்று நாட்களில்
நுரையீரல் சுத்தம் செய்வது
என்று பார்ப்போம்.
*இதை செய்வதற்க்கு இரண்டு
நாட்கள் முன்பே எல்லா பால்
பொருட்கள் சாப்பிடுவதை
நிறுத்தி விட வேண்டும்.
உதாரணத்திறக்கு பால், தேநீர்,
தயிர், மோர், வெண்னெய், சீஸ்
போன்றவை. உடலிருந்து
நச்சுகளை நீக்க வேண்டியது
அவசியம். எனவே தவறாது இதை
கடைபிடிக்க வேண்டும்.
*சுத்தம் செய்வதற்க்கு
முந்தைய நாள் இரவு ஒரு கப்
மூலிகை தேநீரை குடிக்கவும்.
இது குடலில் இருந்து
நச்சுகளை வெளியேற்ற
உதவும். சுத்தம் செய்ய
நுரையீரலுக்கும், உடலுக்கும்
ஒய்வு தேவை. எனவே
கடுமையான பயிற்சிகள்,
வேலைகளை செய்ய வேண்டாம்.
முதல் நாள்:
*இரண்டு எலுமிச்சை
பழங்களின் சாற்றை 300 மில்லி
தண்ணீரில் கலந்து காலை
உணவுக்கு முன்பு
குடிக்கவும்.
* ஒரு மணி நேர
இடைவெளிக்கு பிறகு 300
மில்லி சுத்தமான கிரேப்புரூட்
சாற்றை குடிக்கவும். இதன்
சுவை பிடிக்காவிட்டால்
கிரேப்புரூட் சாற்றுக்கு
பதிலாக பைனாப்பிள் சாற்றை
குடிக்கலாம். எல்லாம் சுத்தமான
தண்ணீர், சர்க்கரை கலக்காத
சாறாக இருக்கட்டும். இந்த
சாறுகளில் இயற்கையான
சுவாசத்தை சீராக்கும்
ஆன்டிஆக்ஸிடன்டஸ்
நிறைந்துள்ளதால் நமது
நுரையீரலுக்கு நன்மை
பயக்கும்.

* மதிய உணவிறக்கு முன்பாக
300 மில்லி சுத்தமான கேரட்
சாற்றை பருகவும். இதில்
தண்ணீரோ சர்க்கரையோ
சேர்க்கக்கூடாது. கேரட் சாறு
சுத்தம் செய்யும் மூன்று
நாட்களும் இரத்தத்தை அமில
நிலையிலிருந்து
காரத்தன்மைக்கு மாற்றுகிறது.

இரவு படுக்கபோகும் முன்பு
400 மில்லி பொட்டாசியம்
நிறைந்த கிரேன்பெரி போன்ற
சாற்றை குடிக்க வேண்டும்.
பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு
டானிக்காக உதவுகிறது. இது
உடலின் உள்ளுறுப்புகளில்
முக்கியமாக சிறுநீர்பாதை,
நுரையீரல் தொற்றுகளை
உண்டாக்கும் பாக்டீரியாக்களை
நீக்குகின்றது. கிரேன்பெரி
கிடைக்காதவர்கள் சுத்தமான
சிகப்பு திராட்சை அல்லது
பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை
கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.

இதை மூன்று நாட்கள்
கடைபிடிக்கும் போது எளிதில்
ஜீரணிக்ககூடிய உணவுகளை
சாப்பிடவேண்டும். குறைந்தது
20 நிமிடங்கள் உடற்பயிற்சி
செய்து வேர்வையை
வெளியேற்றவும்.
அல்லது 20 நிமிடங்களில்
சுடுதண்ணீரில் குளிக்கலாம்.
வியர்வை வெளியேறும்போது
நச்சுகளும் வெளியேறும்.

இரவில் கொதிநீர் ஆவி
பிடிக்கவேண்டும். 5 முதல் 10
சொட்டுவரை யூகாலிப்ட்டஸ்
ஆயில் கொதிநீரில் சேர்த்து
தலையினை சுத்தமான
போர்வையைக்கொண்டு மூடி
ஆவியை நன்றாக உள்ளுக்குள்
இழுத்து சுவாசிக்கவும்.
இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை
ஆவி பிடிக்கவும்.

மூன்று நாட்கள் இவ்வாறு
கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா,
நுரையீரல் அழற்ச்சி, சைனஸ்
தொல்லை உள்ளவர்களுக்கும்
நல்ல பலனை அளிக்கும்.

************************************

உலகில் நுரையீரல்
பிரச்சனையால்
கஷ்டப்படுபவர்கள் அதிகம்.
அதுவும் சிகரெட்
பிடிக்காமல், சுற்றுச்சூழல்
மாசுபாடு, அதிகப்படியான
தூசிகள் போன்றவற்றால்
நுரையீரல் பிரச்சனைகளை
கொண்டவர்கள் மத்தியில், 45
வருடங்களாக சிகரெட்டை
பிடித்து, ஆரோக்கியமான
நுரையீரல் செயல்பாட்டைக்
கொண்டவர்களும் உள்ளனர்.
இது ஒவ்வொருவருக்கும்
வேறுபடும். நுரையீரலை
நன்கு ஆரோக்கியமாக
வைத்துக் கொள்ள சில
வழிகள்! நுரையீரல் அழற்சி,
ஆஸ்துமா, அடிக்கடி சளி
பிடிப்பது, மூச்சுத் திணறல்
போன்ற பிரச்சனைகளால்
தான் பலரும்
கஷ்டப்படுகிறார்கள்.
இப்பிரச்சனைகளைத்
தவிர்த்து, நுரையீரலை
சுத்தமாகவும்,
ஆரோக்கியமாகவும்
வைத்துக் கொள்ள
நுரையீரலை அவ்வப்போது
சுத்தம் செய்ய வேண்டியது
அவசியம்.
ஆரோக்கியமான
நுரையீரலுக்கு கட்டாயம்
சாப்பிட வேண்டிய
உணவுகள்:-அதிலும் உங்கள்
நுரையீரலை மூன்றே
நாட்களில் சுத்தம் செய்யும்
வழிமுறைகள்.
அவற்றைப் பின்பற்றி வந்தால்,
நிச்சயம் மூன்று நாட்களில்
நுரையீரலை சுத்தமாக
வைத்து, நுரையீரல்
பிரச்சனைகள் ஏற்படுவதைத்
தடுக்கலாம். சரி, இப்போது
அந்த வழிமுறையைப்
பார்ப்போம்.
பால் பொருட்களைத்
தவிர்க்கவும்
நுரையீரலை சுத்தம் செய்ய
ஆரம்பிப்பதற்கு இரண்டு
நாட்களுக்கு முன்பிருந்தே
பால் பொருட்களைத் தவிர்க்க
வேண்டும்.
மூலிகை தேநீர்
நுரையீரலை சுத்தம்
செய்யும் முந்தைய நாள்
இரவு படுக்கும் முன் ஒரு
கப் மூலிகை தேநீர் குடிக்க
வேண்டும். இதனால்
குடலில் இருந்து அனைத்து
வகையான டாக்ஸின்களும்
வெளியேறும். மேலும்
நுரையீரலுக்கும்
உடலுக்கும் போதிய ஓய்வு
அளிக்க வேண்டும். அதற்கு
இந்நாட்களில் அதிகப்படியான
கடுமையான வேலைகளில்
ஈடுபடுவதைத் தவிர்க்க
வேண்டும்.
எலுமிச்சை நீர்
நுரையீரலை சுத்தம்
செய்யும் முதல் நாளன்று
காலை உணவிற்கு முன் 2
எலுமிச்சையை பிழிந்து
சாறு எடுத்து, 300 மிலி
நீரில் கலந்து குடிக்க
வேண்டும்.
அன்னாசி ஜூஸ்
1 மணிநேரம் கழித்து,
அன்னாசி ஜூஸ் 300 மிலி
குடிக்க வேண்டும். இந்த
ஜூஸில் சுவாச
மண்டலத்தின் செயல்பாட்டை
மேம்படுத்தி பாதுகாக்கும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
வளமாக நிறைந்துள்ளது.
கேரட் ஜூஸ்
காலை உணவிற்கும் மதிய
உணவிற்கும் இடைப்பட்ட
நேரத்தில் 300 மிலி சர்க்கரை
சேர்க்காத கேரட் ஜூஸ்
குடிக்க வேண்டும். கேரட்
ஜூஸானது இரத்தத்தை இந்த
மூன்று நாட்களும் அமிலத்
தன்மையில் இருந்து
காரத்தன்மைக்கு மாற்றி
பராமரிக்கும்.
பொட்டாசியம் அதிகம்
நிறைந்த ஜூஸ்
மதிய உணவின் போது 400
மிலி பொட்டாசியம் அதிகம்
நிறைந்த ஜூஸ் ஒன்றை
குடிக்க வேண்டும். இது
மிகவும் சிறப்பான
நுரையீரலை
சுத்தப்படுத்தும் டானிக்
போன்று செயல்படும்.
பொட்டாசியம் அதிகம்
நிறைந்த உணவுப்
பொருட்களாவன பீட்ரூட்,
தக்காளி, அவகேடோ
போன்றவை
குறிப்பிடத்தக்கவை.
கிரான்பெர்ரி ஜூஸ்
இரவு படுக்கும் முன் 400
மிலி கிரான்பெர்ரி ஜூஸ்
குடிக்க வேண்டும். இவை
நுரையீரலில்
தொற்றுக்களை ஏற்படுத்தும்
பாக்டீரியாக்களை எதிர்த்துப்
போராடும். கிரான் பெர்ரி
கிடைக்காவிட்டால், சிவப்பு
திராட்சை அல்லது ஆரஞ்சு
ஜூஸை நீர் மற்றும் சர்க்கரை
சேர்க்காமல் குடிக்கவும்.
உடற்பயிற்சி
மேற்கூறியவற்றை மூன்று
நாட்கள் பின்பற்றும் போது,
தவறாமல்
உடற்பயிற்சியையும்
மேற்கொள்ள வேண்டும்.
அதிலும் வியர்வை நன்கு
வெளியேறும் படி
குறைந்தது 20
நிமிடங்களாவது
உடற்பயிற்சியில் ஈடுபட
வேண்டும். இதனால்
வியர்வையின் மூலம் உடலில்
உள்ள நச்சுக்கள்
வெளியேறும்.
வெதுவெதுப்பான நீர்
குளியல்
தினமும் 20 நிமிடம்
வெதுவெதுப்பான நீரினால்
குளியலை மேற்கொள்ள
வேண்டும்.
ஆவி பிடிக்கவும்
கொதிக்கும் நீரில் 5-10
துளிகள் யூகலிப்டஸ்
எண்ணெய் ஊற்றி, நீர்
குளிரும் வரை ஆவி
பிடிக்க வேண்டும். அப்படி
ஆவி பிடிக்கும் போது,
அந்நீராவியை சுவாசிக்க
வேண்டும். இதனால்
மூச்சுக்குழாயில் உள்ள
நச்சுக்கள் அனைத்தும்
வெளியேறும். மேலும்
ஆவி பிடித்த பின்
சுத்தமான துணியால்
முகத்தை துடைத்தால்,
முகமும் பளிச்சென்று
பிரகாசமாக இருக்கும்.
குறிப்பு
மேற்கூறியவற்றை மூன்று
நாட்கள் தொடர்ந்து பின்பற்றி
வந்தால், ஆஸ்துமா,
நுரையீரல் அழற்சி,
மூச்சுத்திணறல், சைனஸ்
போன்றவை விரைவில்
குணமாகும்.

நன்றி. விவேகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக